top of page

தன்னிலும் பொல்லாத ஏழு ஆவிகள்

 

ஒவ்வொரு அவ்விசுவாசியும் பிசாசுகளினாலே பெரிதும் பாதிக்கப்படுகிறான்..(அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

 
எபேசியர் 2:1 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

 
எபேசியர் 2:2)நான் பரிசுத்தாவியினால் நிறைந்திருப்பதால் எனக்கு இது நேரிடாது என்று நீங்கள் கூறலாம்.ஏதாவது ஒரு காரணத்தினால் பரிசுத்தாவியானவர் உங்களை விட்டு விலகி செல்வாரானால் அங்கு ஒரு வெற்றிடம் எழும்பும்.சாத்தான் அதற்காகவே காத்திருக்கிறான்.அப்பொழுது அவன் பாதிப்பு உபத்திரவமாக மாறிவிடுகிறது.(அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: மத்தேயு 12:43.


நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, மத்தேயு 12:44 திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும், அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும், அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.மத்தேயு 12:45.

 

சாத்தானுடைய யுத்த தந்திரம் என்னவென்றால் சரீரத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு அசுத்த ஆவியும் ம்ண்டும் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பார்க்க மறுபடியும் வரும். மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் அசுத்த ஆவிகளோடு உட்புகும். இந்த நிலை பயங்கரமானதாக தோன்றினாலும் ஆண்டவரிடம் நீங்கள் கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து அவரோடு இணைந்து நடந்தால் முற்றிலும் தவிர்க்க முடியும். சீஷர்களால் ஒரு வாலிபனை பிடித்திருந்த அசுத்த ஆவியை துரத்த முடியாமல் போனது. இயேசு அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். அவன் தகப்பன்  அவரிடம் அவன் சந்திரரோகியாய் கொடிய வேதனைபடுகிறான் அவனுக்கு இரங்கும் என்றான்.அவனுக்கு சரீர சுகத்துக்கும் மேற்பட்ட சுகம் தேவைப்பட்டது.இயேசு பிசாசை அதட்டினார்.அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்,(மத் 17-17-18) நீங்கள் சொஸ்தமடைவதற்க்கும் விடுதலை பெறுவதற்க்கும் தடையாக இருக்கும் சாத்தானையும் அவனது பிசாசுகளையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து நீக்க மட்டுமல்ல அதனால் உண்டாகும் காலியிடத்தை நிரப்ப கர்த்தர் விரும்புகிறார். அதற்க்காக தான் அவர் தேற்றரவாளனை அனுப்பினார். நாம் சகல சத்தியத்துக்குள் நடத்தபடவும் இயேசு கிறிஸ்துவின் அன்பின் ஆழங்களை அறியவும் பாவத்தை குறித்தும் நியாய தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்தி நாம் தேவ நீதியை நிறைவேற்றி  சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நம்மை வழி நடத்தவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார். இப்பொழுது ஆவியானவர் பூமியிலே இருக்கிறார். உங்கள் அழைப்புக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார். தேவையானதெல்லாம் ஒரே வார்த்தை. பரிசுத்தாவியானவரே எனக்கு உதவி செய்யும் என்று சொன்னாலே போதும். இதற்குப் பதில் உங்களுக்கு மிக அருகில்,உங்கள் சுவாசம் எட்டும் தூரத்திலே இருக்கிறது. அவரே மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாக கொடுக்கப்பட்டவர்.அவரே உங்களை முத்திரையிடுகிறார். (அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். எபேசியர் 1-14) ஆமென்.

bottom of page