top of page

வீண் புகழ்சி

கலா 5-26 ல் வீண் புகழ்சியை விரும்பாதீர்கள் என்று வேதம் சொல்கிறது. இன்றைக்கு நாம் தேவனால் வரும்  மகிமையை காட்டிலும் மனிதனால் வரும் மகிமையை அதிகமாய் வாஞ்சிக்கிறோம்,இது மிகவும் கொடியது.  இன்றைய நவீன காலத்தில் ஊழியக்காரர்கள் கூட தேவனை மகிமைபடுத்துவதை குறைத்து கொண்டு மக்களை மகிழ்சிப்படுத்தும் காரியங்களையே செய்கிறார்கள்.சபைகள்  மனமகிழ் மன்றங்களாக மாறி வருகின்றன.  இந்த காரியங்களிலிருந்து சபைகள் மனம்திரும்ப ஜெபியுங்கள்.நிறைய ஜனங்கள் மத்தியில் நிற்பதையே ஊழியக்காரர்களும் விரும்புகிறார்கள். தேவ பிரசன்னம் அங்கு இல்லாததை குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.

 

அரசியல் வாதிகளும் பெரும் கூட்டத்துக்காக ஆள் சேர்க்கிறார்கள்.அதே மாதிரி ஊழியக்காரர்கள் தேவனால்  வரும் மகிமையை விட மனுஷரால் வரும் மகிமையை அதிகமாக விரும்புகிறார்கள்.திரள் கூட்டம் நடுவே நிற்பதற்க்கு வாஞ்சிக்கிறார்கள்.இத்தகய ஊழியக்காரர்கள் பெருமையினால் விழுந்து போய்விட்டார்கள்.இவர்கள் தங்கள் சுயபுத்தியை சார்ந்தே பல முடிவுகளை எடுக்கிறார்கள்,ஆவியானவரின் ஆலோசனை யை புறம்பே தள்ளி விட்டவர்கள்,கூட்டத்தை ஈர்ப்பதற்க்காக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை கவரும் படி ஆராதனை செய்கிறார்கள்.தேவபிரசன்னம் அங்கு இல்லை. இவர்கள் எண்ணிக்கைக்காக பல இடங்களுக்கு வாகனங்களை அனுப்பி ஆள் சேர்க்கிறார்கள். ஒரு இடத்தில்  உள்ளவர்களை அந்த பகுதியில் உள்ள  சபைக்கு போக சொல்லாமல் அங்கு வாகனங்களை அனுப்பி கூட்டி சேர்ப்பது சரியானதல்ல. அந்த பகுதியில் உள்ள நல்ல சபைக்கு போக சொல்லுவது நல்லது.அவர்கள் விருப்பபட்டு வருவதில் தவறில்லை.ஆனால் இங்கு தான் வர வேண்டும் என்று இருமாப்பாய் கண்டிப்பாக விசுவாசிகளை ஆளக்கூடாது.நாம் எல்லாம் தேவனுடைய ராஜ்ஜியத்துக்காக தேவனுடைய வேலைக்காரர்களாய் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

ஊழியத்தில் நாம் பார்க்க வேண்டியது ஆத்துமாக்களின் தரமே தவிர எண்ணிக்கையை அல்ல. ஆவிக்குறிய சபை என்றால் அன்னியபாஷை பேசுவதை வைத்து கணிக்காமல் விசுவாசிகளிடம் காணப்படும் ஒருமனமும் அவர்களிடம் வெளிப்படும் நற்கிரியை என்ற ஆவிக்குறிய கனியையே நாம் முக்கியப்படுத்த வேண்டும்.திரளான ஆத்துமாக்கள் சபைக்கு வருவதை குறித்து பெருமை பட வேண்டாம். ஏனென்றால் அவ்வளவு ஆத்துமாக்களை குறித்து நாளைக்கு தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். அவ்வளவு ஆடுகளையும் ஒரே மேய்ப்பனால் நடத்த முடியாது.

 

சபை ஜனங்கள் நித்திய ஜீவன் என்ற விலைமதிக்க முடியாத வாக்குதத்தத்தை சுதந்தரிக்க வேண்டும்,இதுவே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். 

 

ஜனங்களின் எண்ணிக்கையை மாத்திரம் முக்கியப்படுத்தி ஊழியம் செய்யாதீர்கள்.

bottom of page