top of page

ஊழியத்தில் மனப்பெருமை

 

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.  1 கொரிந்தியர் 9.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்க்கையின் போராட்டத்தில் தடுமாறிய ஜனங்களின் ஆவிக்குறிய தேவைகளையும் சரீரப்பிரகாரமான தேவைகளையும் சந்திக்கிறவராகவே சுற்றி திரிந்தார்.தான் சுகமாக்கும் நிகழ்ச்சியை விளம்பரபடுத்த அவர் விரும்பியதேயில்லை, தன்னை பகீரங்கபடுத்த அவர் நாடியதே இல்லை. பிறருக்காகவே ஊழியம் செய்து பிறருக்காகவே மரித்துவிட்டார். வீண் புகழ்ச்சியை அவர் விரும்பியதே இல்லை, அவர் உயிர்த்தெழுந்த போது ஏரோதுக்கோ அல்லது பிலாத்துவுக்கோ முன்பாக தோன்றி இப்போதாவது தேவனுடைய குமாரன் என்று இப்போதாவது அறிந்து கொள்ளுங்கள் என நிருபிக்க அவர் விரும்பவே இல்லை. பரிசேயர் சதுசேயர் ஒருவருக்காவது தன் உயிர்த்தெழுந்த கோலத்தை காண்பிக்கவேயில்லை, தூதர்கள் தன்னை கைகளில் ஏந்தி கொண்டு போகும்படியான மனித புகழ்சியை பெற்று கொள்ளூம் படி சாத்தான் அவரை அரண்மனையின் உப்பரிக்கையிலிருந்து குதிக்க சொன்ன போது இயேசு மறுத்து விட்டார். இன்றைக்கு தன்னை பிரபலப்படுத்தும்படி தூண்டபடுகிற இச்சைகளில் அநேகர் வீழ்ந்துவிட்டார்கள். மனிதர்கள் தங்களை புகழ வேண்டும் என்பதற்காகவே அநேகர் தங்களை பற்றி தாங்களே புகழ்ந்து பெசிக்கொள்கிறார்கள். ஆனால் இயேசுவோ மனிதர்களால் வரும் மகிமைக்கு விலகி சென்றார், மனுஷர்களின் அபிப்பிராயம் அனைத்தும் குப்பை தொட்டிக்கு சமம் என்று அவருக்கு தெரியும். ஆனால் இன்றைக்கு தேவனை மகிமைபடுத்துவதை விட தன்னை மகிமைபடுத்தி முன்னிறுத்தும் ஊழியக்காரர்களே அநேகர். தாங்கள் வெளிநாட்டுக்கு ஊழியத்துக்கு போகும் போது விமான நிலையத்தில் இரவு நேரத்தில் Sun class போட்டு கொண்டு Pose கொடுத்து Photo எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டு நான் இந்த தேசத்துக்கு ஊழியத்துக்கு போகிறேன் என்று தன்னை குறித்து தாரை ஊதி திரிகிற பிரசங்கிகளை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.இந்த பதிவுகளின் பின் பலர் இவர்களை புகழ்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் வீண் புகழ்ச்சியை விரும்புவதால் இவர்களுக்கு தேவன் எப்பொழுதுமே எதிர்த்து நிற்க்கிறார் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.


மனித புகழ்ச்சியை நாடி போதிக்கிற இவர்களது பிரசங்கங்களினால் ஒரு பிரயோஜனமில்லை.தன்னை பற்றியும் தன் ஊழியங்களை பற்றியும் பெருமை பேசி கொண்டு பிற ஊழியங்களை அற்ப்பமாக  நினைத்து குறை சொல்லுகிற இத்தகய ஊழியக்காரர்களை பகுத்தறிந்து கொள்ள வேண்டும்.

 

நான் அதிக வேத அறிவை உடையவன் என்று நயவசனிப்பினால் பிரசங்க மேடையில் தன்னை உயர்த்தி கொள்ளுகிற பெருமையின் ஆவியை உடையவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

 

இவர்களை தான் ஆண்டவர் அக்கிரம செய்கைகாரர்களே உங்களை எனக்கு தெரியாது என்றார், ஆனால் இயேசுவோ தன்னை தானே தாழ்த்தினார், சீஷர்களின் கால்களை கழுவினார். மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள் என்றார். ஊழியம் செய்த பிறகு  நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் நாங்கள் கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லி தங்களை தாழ்த்த சொன்னார்.

 

ஆனால் இந்த மாயமாலமான ஊழியக்காரர்களோ மனப்பெருமையை அணிந்து கொண்டபடியினால் தேவனை மகிமைபடுத்தாமல் தங்களையே மகிமைபடுத்துகிறார்கள்.

 

ஆனால் ஊழியத்தில் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றும் ஊழியக்காரர்கள் மறைந்தே இருந்து மகிமையான ஊழியத்தை  செய்கிறார்கள். இவர்கள் தான் இயேசு வைத்து விட்டு போன மாதிரியை பின்பற்றுகிறவர்கள். இவர்கள் தான் உண்மையுள்ள எஐமானுடைய உண்மையான ஊழியக்காரர்கள்.

 

(தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
2 கொரிந்தியர் 10-18)

bottom of page