புறம்பான மாயமாலமான பரிசுத்தம்
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. ரோமர் 2:28. உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. ரோமர் 2:29.
இன்றைக்கு அநேக சபைகளில் வெளிப்புறமான பரிசுத்ததிற்க்கே முதலிடம் கொடுக்கிறார்கள். நகை போடக்கூடாது. வெள்ளை உடை தான் போட வேண்டும்,பெண்கள் Pant போடக்கூடாது, அடுத்தவர் காலை கழுவ வேண்டும் என்று ஜனங்களை வெளிப்புறமான பரிசுத்ததிற்கு நேராக வைராக்கியமாக நடத்துகிறார்கள்.
சமீபத்தில் ஆறு வயது நிரம்பின ஒரு பிள்ளை மற்றெரு பிள்ளையிடம் நகை போடுகிற நீ பரலோகத்துக்கு போகமாட்டாய். நீ நரகத்துக்கு தான் போவாய் என்று சொல்ல அதை கேட்ட அந்த பிள்ளை பெற்றோரிடம் வந்து சொல்ல அவர்களுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. இன்றைக்கு இவர்கள் சிறுபிள்ளைகளிடம் தேவ அன்புக்கு பதிலாக தங்கள் சபை பாரம்பரிய சட்டங்களையே விதைக்கிறார்கள். !!!
நகை போடுவதற்க்கு தேவன் எதிரானவரல்ல. வேதாகமத்தில் பல காரியங்கள் ஆலோசனைகளாக சொல்லப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் எந்த காரியம் எந்த சூழ்நிலையில் யாருக்கு சொல்லப்பட்டது அது கட்டளையாக கொடுக்கப்பட்டதா அல்லது ஆலோசனையாகவா அல்லது நல்யோசனையின் படியா? புத்தி சொல்வதா? என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு முறை ஒரு ஊழியக்காரர் தங்கள் சபையில் சுரிதார் அணிந்து கொண்டு வந்த பெண்ணை எல்லாருக்கும் முன்னால் திட்டி தீர்த்து விட்டார். சுரிதார் பரிசுத்தமான உடை இல்லையாம்!!!?, புடவை அணிய வேண்டுமாம்!!!?,
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் ஊழியம் செய்கிற அநேகர் மீசை வைப்பதில்லை. மீசை வைத்த ஊழியக்காரர்களை கேரளாவில் அங்கிகரிப்பதில்லை. இதற்க்கு பயந்தே அநேக ஊழியக்காரர்கள் மீசை வைப்பதில்லை.
இன்றைக்கு அந்நிய பாஷை பேசுவதிலும் வெள்ளை உடை அணிவதிலும் நகையை கழத்துவதிலும் தான் பரிசுத்தவான்கள் என்று கணிக்கிறார்கள். இன்றைக்கு அநேக பாரம்பரிய பெந்தேகோஸ்தே சபைகளில் பல வருடங்களாக கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் அரசாங்க வேலைகளுக்காக இந்துக்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் அரசாங்க சலுகைகளுக்காக தங்கள் பிள்ளைகளை இந்துக்களாக பொய் சொல்லி சேர்க்கிறார்கள். இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் ஆலயத்துக்கு போகிறோம் என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்வதில்லை. அதற்க்கு மாறாக அலுவலகத்தில் நாங்கள் இந்துக்கள் என்று பொய் சொல்லி கொள்கிறார்கள். அரசாங்க சலுகைகளுக்காக தேவனை மறுதலித்து அந்நிய தெய்வத்தை ஆராதிக்கிறவர்கள் என்று அறிக்கையிடுகிற இவர்கள் பூமியில் அதிக ஆசீவாதங்களை அனுபவித்தாலும் சத்தியத்தை அறிந்து பாவம் செய்வதால் சாபங்கள் இவர்கள் வாழ்க்கையில் கடந்து வருகிறது. ஏனென்றால் அந்நிய தெய்வதின் நாமத்தை கொண்டு அரசாங்க சலுகைகளை பெறுகிறார்கள், மேலும் சந்திப்பின் நாளிலே பரலோகம் இவர்களை நிச்சயமாக மறுதலிக்கும்.மனுஷருக்கு முன்பாக என்னை மறுதலிப்பவனை பிதாவின் முன்பாக நான் மறுதலிப்பேன் என்று இயேசு சொன்னார்.
எனக்கு தெரிந்த ஒரு இந்து சகோதரி இயேசுவை ஏற்று கொண்டார்கள், உறவினர்கள் எவ்வளவு சொல்லியும் இவர்கள் நாங்கள் கிறிஸ்துவுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம் என்று சொல்லி தங்கள் certificate ல் கிறிஸ்தவர்கள் என்று மாற்றிவிட்டார்கள். உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்ற சத்தியம் அரசாங்கத்தையும் தேவனையும் ஏமாற்றுகிற மாயமாலமானவர்களுக்கும் இவர்களை நடத்துகிற போதகர்களுக்கும் புரியவில்லை. ஞாயிற்று கிழமைகளில் நீர் மாத்திரம் போதும் என்று தேவனை ஆராதித்து விட்டு மற்ற நாள்களில் அரசாங்க சலுகைகள் மற்றும் பணம் பதவிக்காக பறஜாதிகள் முன்பாக தேவனை மறுதலிக்கும் இருமனமுள்ள ஆவிக்குறிய வேசித்தனம் பண்ணும் இவர்களின் தசமபாகத்துக்காக இவர்களது பாவத்தை கண்டித்து உணர்த்தாமல் தங்கள் மார்க்கத்தானாக்கும் குருடருக்கு வழி காட்டும் குருடர்களான இத்தகய போதகர்களை இயேசு மதிகேடரே அக்கிரம செய்கைகாரரே என்று இன்றைக்கும் கடிந்து கொள்வார். ஆனால் இதையல்லாம் கண்டு கொள்ளாத இத்தகய சபைகளின் ஊழியக்காரர்கள் மருந்து மாத்திரை எடுப்பதில்லை என்ற காரியத்தில் வைராக்கியமாக இருக்க சொல்கிறார்களே தவிர இதை கண்டித்து உணர்த்துவதில்லை. இவர்கள் தங்கள் சபை ஜனங்களை வெளிப்புறமான பரிசுத்த அலங்காரத்துக்கு நேராக மாத்திரமே வழி நடத்துகிறார்கள். இதில் Communion க்கு முன்பாக ஏழு நாள்கள் உபவாசத்தோடு சுத்திகரிப்பின் ஆராதனை என்றுபெருமை பாராட்டுகிறார்கள்முதலாவதாக சபை சுத்திகரிக்கபட வேண்டும். சத்தியத்தை அறிந்து கொண்டு தேவனை ஏமாற்றும் இத்தகய தீட்டான மாயமாலமானவர்கள் சபையிலிருந்து அப்புறப்படுத்தபட வேண்டும்,அல்லது அவர்கள் மனம் திரும்ப வேண்டும்.
தேவன் இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே தேவனை தரிசிப்பார்கள் என்றார். நான் பரிசுத்தராக இருப்பது போல நீங்கள் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தராக இருங்கள் என்றார். இன்றைக்கு நம்முடைய பரிசுத்தமான நடக்கைகளினாலும் கனிகளினாலும் எத்தனை பேர் தேவனை மகிமைபடுத்தியிருக்கிறார்கள். எத்தனை பேர் இயேசுவை ஏற்று கொண்டிருக்கிறார்கள்? இன்றைக்கு நம்முடைய வெளிப்புறமான பரிசுத்தத்தை பார்க்கிற புறஜாதி ஜனங்கள் இவர்களை தேவனுடைய பிள்ளைகள் மற்றும் தேவனுக்காக பக்தி வைராக்கியம் உடையவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்களின் கள்ளமும் கபடமான செய்கைகளினால் தேவநாமம் தூசிக்கப்படுகிறது எழுதியிருக்கிறபடி தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே. ரோமர் 2-24. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. லூக்கா 11:39. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத்தேயு 23-26.
இன்றைக்கு நம்முடைய பாரம்பரியத்தினால் தேவனுடைய வசனத்தை அவமாக்குகிறோம், இன்றைக்கு நம்முடைய எண்ணங்கள் உள்ளந்திரியங்கள் பரிசுத்தமாக இல்லையென்றால் கூட நாம் நியாயம் தீர்க்கபடுவோம்.
அடுத்ததாக நம் பக்தி வைராக்கியத்தை மெய்யான பரிசுத்தத்திலும் கனி கொடுப்பதிலும் காட்டுவோம். நம் பக்தி வைராக்கியத்தை மத்தேயு 5,6,7 ல் சொல்லப்பட்ட அஸ்திபாரமாகிய கற்பனைகளுக்கு கீழ்படிவதில் காட்டுவோம். எனவே இன்றைக்கு எல்லா பாரம்பரிய சபை சட்டதிட்டங்களின்படி ஜனங்களை நடத்தாமல் உள்ளான பரிசுத்தத்திலும் நீதியிலும் இயேசுவை போல இந்த உலகத்துக்கு ஒளியாயிருக்கும் படி ஜனங்கள் நடத்தபட வேண்டும்.அன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாயமாலத்துக்கும் பாரம்பரியத்துக்கும் எதிர்த்து நின்றது போல இன்றைக்கும் எதிர்த்து நிற்க்கிறார்.
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு 1:22 ஆமென்