top of page

கிறிஸ்துவின் சிந்தை

ஊழியம் செய்யும் ஒருவன் பெரியவனாகும் படி தன்னை தானே உயர்த்தி கொள்கிறான். இவ்வழியிலே தான் லூசிபரும் தேவனாய் மாற விரும்பி கடைசியில் விழுந்து போனான். இது போன்ற ஆவி நமக்குள் வருவதை  நாம் எப்பொதெல்லாம் காண்கிறோமோ அதை உடனடியாக இன்ன ஆவி என கண்டு கொள்ள வேண்டும்.

 

இயேசு கிறிஸ்துவோ  மனிதர்களுக்கு தன்னை மறைத்து கொண்டார். தன்னை பிரபலப்படுத்தவோ அல்லது தன்னை உயர்த்தி கொள்ளவோ அவர் விரும்பவே இல்லை. லூசிபரின் பெருமையினால் பாவம் பிறந்தது. இயேசுவின் தாழ்மையினால் இரட்சிப்பு மலர்ந்தது. இன்றைய ஊழியக்காரர்கள் அநேகர் தங்களை பிரபலபடுத்தும் படியாக விளம்பர பிரியர்களாகவே இருக்கிறார்கள். Face book ல் poster ஒட்டி கொண்டிருக்கிறார்கள். இவர்களை பார்க்கும் போது தன்னை மறைத்து வாழ்ந்த இயேசுவின் மெய்யான தோற்றத்தை காணமுடியவில்லை.

 

இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடை பின்பற்ற தகுதியான நல்ல மாதிரிகளை காண்பது மிகவும் அரிது. சபையில்  காலை கழுவ சொல்வதில் வைராக்கியமாக இருக்கும் ஜனங்களிடம் இயேசு கிறிஸ்துவிடம் இருந்த வேலைக்காரனின் ஆவி இல்லை. சபையில் கால்களை கழுவிடும் விசுவாசிகள் தங்கள் குடும்பங்களில் அநேகரோடு பேசுவதில்லை. தங்களிடம் இருக்கும் மேட்டிமையின் ஆவியினால் பிறரை அற்ப்பமாக எண்ணுகிறார்கள். இன்றைக்கு பல சபைகளில் ஊழியக்காரர்கள் ஜனங்களை மெய்யான மன தாழ்மையை  பெற்று கொள்ளும் படி  நடத்த விரும்பாமல் சபை பாரம்பரியத்தில் நடத்தி தாழ்மையாக நடிக்கும்படியாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவர்களை தான் குருடருக்கு வழி காட்டும் குருடர்களே என்று இயேசு குறிப்பிட்டார். குருடனும் குருடருக்கு வழிக்காட்டும் குருடனும் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியாது. இப்படி தாழ்மையாக நடித்து கொண்டிருக்கும் அநேகர் தங்களை தாழ்த்தும் படியான சூழ்நிலை (சோதனை) வரும் போது வீழ்ந்து விடுகிறார்கள். ( கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. லூக்கா 11-39. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத்தேயு 23-26. இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களிடமும் விசுவாசிகளிடமும் காணப்படுகிற காரியம் வெளிப்புறமாக தங்களை தாழ்மையாக காட்டி கொள்கிற இந்த மாயமாலமான தாழ்மை.

ஆனால் வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ சிலுவையின் முடிவு பரியந்தம் தன்னை தாழ்த்தினார். ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தன் சுயத்தை சிலுவையில் அறைய சொன்னார். இன்றைக்கு ஊழியம் செய்ய வந்து விட்ட அநேகர்  நான் என்ற சுயத்தை சிலுவையில் அறைவதில்லை எனவே தான் என் ஊழியம் எங்கள் சபை என்று பெருமை பேசி கொண்டு தேவனுடைய சித்தத்தை செய்யாமல் தங்கள் சுயசித்தத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை தான் இயேசு அக்கிரம செய்கைகாரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்றார். இவர்கள் தங்களை மேன்மையாக கருதுவதால் தங்களை பற்றியே புகழ்ந்து பேசிக்கொண்டு பிறரை பற்றி சதாகாலமும் குறை சொல்லி கொண்டே இருப்பார்கள்.

 

உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். மத்தேயு 20-27 என்ற இயேசு சொன்ன இந்த வார்த்தைகளுக்கு செவிக்கொடுப்பவனே இயேசுவின் சிந்தையை உடையவன். பிசாசு சொல்லும் நீ பெரியவன் என்ற வார்த்தைக்கு செவிக்கொடுத்து மனிதர்களின் புகழ்சியை வாஞ்சிப்பதற்க்கு தீவிரிக்காதீர்கள்,தாழ்மையுள்ளவர்கள் மாத்திரமே கிருபையை பெற்று கொள்வார்கள். நாம் தேவனை மகிமைப்படுத்துவதற்காக அழைக்கப்பட்டவர்கள். எனவே அவர் பலத்த கரத்துக்குள் அடங்கியிருப்போம்.

 

இந்த கடைசி நாள்களில் நம்மை நாமே தாழ்த்தி நம் செயல்பாடுகளில் வானத்தையும் பூமியையும் படைத்த நம் எஜமானுடைய சித்தம் செய்ய ஒப்பு கொடுப்போம். (தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2 கொரிந்தியர் 10-18)

bottom of page