top of page

உள்ளான பரிசுத்தம்

நாம் பரிசுத்தமாயிருப்பதே தேவனுடைய சித்தம் என்று வேதம் சொல்கிறது.  பரிசுத்தமுள்ளவர்கள் தேவனுடைய அதிகாரங்களை பெற்றவர்களாயிருப்பார்கள். பரிசுத்தமுள்ளவர்களே தேவனை தரிசிப்பார்கள் என்று வேதம் சொல்கிறது.

 

உங்கள் சரீரங்களை பரிசுத்தமான ஜீவ பலியாகதேவனுக்கு ஒப்பு கொடுப்பதே புத்தியுள்ள ஆராதனை என்று பவுல் சொல்கிறார். உங்கள் அவயவங்கள் பரிசுத்தமில்லாதிருந்தால் பிடுங்கி போடுங்கள் ஏனென்றால் பரிசுத்தமில்லாத அவயவங்கள் நீங்கள் பரலோகம் போவதற்க்கு இடறலாயிருக்கும் என்று இயேசு சொன்னார். பரிசுத்தமடைகிறவர்கள் இன்னும் பரிசுத்தமடையட்டும்.உங்கள் எல்லா நடக்கைகளிலும் பரிசுத்தமாயிருங்கள்.(1பேதுரு 1-16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே).

சாத்தான் யாரை கண்டு அஞ்சுகிறான்?? ஒருவன் வேத அறிவையும், வேதாகம கல்லூரியில் பட்டம் பெற்றதையும் ஆழ்ந்த சத்தியத்தையும் பேசி கொண்டிருப்பதினால் சாத்தான் அதிர்ச்சி அடைந்து விட்டான் என்று எண்ணுகிறீர்களா? நிச்சயமாக இல்லை.

 

தேவனை அறிந்து பரிசுத்தமும் தாழ்மையும் கொண்டு ஜீவியத்தில் சாட்சியாய் வாழும் மனிதர்களுக்கு மாத்திரமே சாத்தான் அஞ்சி நடுங்குகிறான். இப்படிபட்ட சீஷர்களை உருவாக்கிட தேவன் உதவி செய்வாராக.

bottom of page