top of page

எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுவோம்.

சகலமும் நன்மைக்கு ஏதுவாக தேவன் நம்மை நடத்துகிறார்.

 

சகலமும் தேவன் எப்படி நன்மைக்கேதுவாக நடத்துகிறார் என்பதற்கு யோசேப்பு சிறந்த உதாரணம் ஆவான், தனது 30  வயதில் அரசு அறியணையில் ஏறிய யோசேப்பு தான் கடந்து வந்த 13 வருடங்களை திரும்பி பார்த்திருப்பான், தன்னை அடிமையாக விற்று போட்ட பொறாமை கொண்ட தன் சகோதரர்கள், தன் மேல் பொய் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிய போத்திபாரின் மனைவி அடுத்ததாக இரண்டு வருடங்கள் தன்னை மறந்து விட்ட பானபாத்திரகாரான் போன்ற இவர்களுக்காக தேவனிடம் நன்றி சொல்லியிருந்திருப்பான்.1 தெசலோனிக்கேயர் 5-18ல் நாம் எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்ய வேண்டும் என்று பவுல் எழுதுகிறார்.அதாவது உங்களுக்கு தீமை செய்யும் எந்த மனிதர்களுக்காகவும் சூழ்நிலைக்காகவும் ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பியுங்கள்.  உங்களில் யாராவது எனது உறவினர் எனக்கு செய்த வஞ்சகம் கொடியது என்று சொல்கிறீர்களா? இயேசுவுக்கு வஞ்சகம் இழைத்த யூதாஸ்  காரியேத்தை காட்டிலுமா உங்களுக்கு செய்யப்பட்ட வஞ்சகம் பெரியது? நிச்சயம் இல்லை.  தீமை செய்கிற ஒருவன் பிசாசுக்கு ஊழியம் செய்கிறான். இப்பொழுது நானும் பதிலுக்கு அவனுக்கு தீமை செய்து பிசாசுக்கு ஊழியம் செய்யலாமா?

 

இன்றைக்கு இப்படிப்பட்ட காரியத்தில் தான் அநேக விசுவாசிகள் சிக்கி பாவத்துக்கு அடிமையாயிருக்கிறார்கள். யாரேனும் ஒருவர் பிசாசுக்கு ஊழியம் செய்து எனக்குத் தீமை செய்து புறங்கூறுவார் என்றால் நானும் பதிலுக்கு பிசாசின் ஊழியக்காரனாய் மாறி தீமை செய்து புறங்கூறமாட்டேன்.  அதாவது ஒருவன் பாதாள கிணற்றில் குதித்துவிட்டால்.  நானும் அதுபோல பாதாள கிணற்றில் குதிக்க மாட்டேன். நீங்கள் தீமைக்கு தீமை செய்யும் போது மற்றவர்களை தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்கள் தீர்க்கப்படுவீர்கள்.  என்ற சத்தியத்தின்படியே நீங்கள் தீர்க்கப்படுவீர்கள். மற்றவர்களுக்கு எப்படி அளக்கிறீர்களோ அப்படியே உங்களுக்கும் அளக்கப்படும். பிறர் நமக்கு செய்த தப்பிதங்களை நாம் மன்னிக்காவிட்டால் பரமபிதாவும் நம் பாவங்களை மன்னிக்கமாட்டார். இன்றைக்கு அநேகர் தேவனுடைய ஆசீர்வாதங்களை முழுமையாக பெற்று கொள்ளாததற்க்கு அவர்கள் தீமைக்கு தீமை செய்து கொண்டிருப்பதேயாகும்.  (தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். 1 பேதுரு 3-9. உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்று இயேசு சொன்னார். அதாவது இப்போது என்னை ஒருவர் சபிப்பதை கேட்கிறேன்.இதுவே நான் இயேசுவின் கற்பனைகளுக்கு கீழ்படியும் பொன்னான நேரம்.ஆகவே இந்த சந்தப்பத்தை தந்த அந்த மனிதனுக்கும் தேவனுக்கும் நன்றி என்று சொல்லுவேன். இந்த சந்தர்ப்பத்தில் என்னை சபித்தவர்களை ஆசீர்வதிப்பேன்.தீமை செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்வேன். இதை தான் ஆண்டவர் எனக்கு முன்மாதிரியாக செய்து விட்டு சென்றார். (ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள், எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12-17 தீமைக்கு சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே: கர்த்தருக்குக் காத்திரு அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20-22.

 

ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.1 தெசலோனிக்கேயர் 5-15, ஏனென்றால்??

சகலமும் எனக்கு நன்மைக்கேதுவாக நடந்து தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படியும் சந்தர்ப்பத்தை பெற்று இயேசுவைப் போல மருரூபமடைகிறேன், நீங்கள் நான்கு சுவருக்கு நடுவே எந்த தொந்திரவுமில்லாமல் இருந்தால் நீங்கள் ஒரு போதும் இயேசுவைப் போல மாறமுடியாது.இதனிமித்தமே தேவன் உங்களை பாடுகள் நிறைந்த உலகத்தில் வைத்திருக்கிறார். உங்களை உடைத்து உங்கள் சுபாவத்தை வளைத்து அதை தெய்வீகமாக மாற்ற விரும்புவதால் தேவன் உங்களுக்கு துன்பங்களையும் உபத்திரவங்களையும் சில வேளைகளில் அனுமதித்து உங்களை அவருடைய சாயலில் மருரூபமாக்குகிறார். மனிதர்கள் உங்கள் மேல் பொறாமை கொண்டு தீங்கு செய்ய முயற்சிக்கலாம் ஆனால் தேவன் உங்க வாழ்க்கையில் நியமித்த சித்தத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏன் தெரியுமா?நீங்கள் இயேசுவுக்கு சொந்தமானவர்கள். நான் அவரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.நான் அசைக்கப்படுவதில்லை.இந்த உலகிலே நான் பெரும் பாக்கியம் பெற்றவன். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் தற்கிப்பில்லாமல் செய்வேன். பரிசுத்தாவியானவரின் பெலத்தினாலே சகல சத்தியத்துக்குள் நடத்தப்படுவேன். அல்லேலுயா,அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8-28.ஆமென்.

bottom of page