top of page

கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள கணவன் மனைவி உரையாடுதல்

 

 

கணவன்:    என்னுடைய வாழ்க்கையில் அனேக காரியங்கள் தோல்வியிலே முடிகிறது. இதற்குக் காரணம் என்னவென்றே புரியவில்லை

மனைவி: பெறுமையாக இருங்கள் கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

கணவன்: உனக்கென்ன, உனக்குப் பிரச்சனைகள் வந்தால் தெரியும்? நீயும் என்னைப் போல புலம்பிக் கொண்டிருப்பாய் அதுமட்டுமல்லாமல் இந்த பொறுமையை பற்றி எல்லாம் விளக்கம் கொடுக்க மாட்டாய்

 

மனைவி: என்னுடைய வேலையிலும் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது தெரியுமா? நான் உங்களிடம் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றையும் என் தகப்பனிடம் சொல்லிக் கொண்டு பொறுமையாக அவருடைய சமுகத்தில் காத்திருக்கிறேன்.

கணவன்: எப்படி இத்தனை பிரச்சனைகளின் மத்தியில் நீ எப்படி இவ்வளவு சமாதானமாக இருக்க முடிகிறது

 

மனைவி: கர்த்தரை ஊறுகாவாய் வைத்து ஒரு பெரிய சாப்பாட்டை விழுங்க நினைக்கிற உங்களுடைய வாழ்க்கையில் இந்த உணவு எப்படி ஜீரணமாகும். நிச்சயமாக ஒருபோதும் முடியாது

 

கணவன்: என்ன சொல்லுகிறார்?

 

மனைவி: உங்களுடைய வேலையை மாத்திரம் அதிக மணி நேரம் எடுத்து செய்ய வேண்டும் ஆனால் நமக்கு இத்தனை ஆசீர்வாதங்களை தந்தவருக்கோ தினமும் 5 நிமிடம் மாத்திரம் கொடுத்தால் போதுமா? உங்களுடைய பிள்ளை இப்படி செய்தால் அதை உங்களால் பொறுத்து கொள்ள முடியுமா? தேவ சமுகத்தில் காத்திருக்காத காரணத்தினால்தான் உங்களுக்கு பொறுமை இல்லை அதிகமாய் கோபம் வருகிறது, வேலையிலும் பலவிதமான பிரச்சனைகள் தலையிடுகிறது

 

கணவன்: அப்படியென்றால் தேவ சமுகத்தில் காத்திருந்தால் என்னுடைய பிரச்சனைகள் எல்லாம் மாறி விடுமா?

 

மனைவி: முதலாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தந்த வேதத்தை நன்றாக படியுங்கள், அதில் ஒவ்வொரு தேவ மனிதர்களும் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்ததால் பெற்ற நன்மைகள் எவ்வளவு என்பதும் அதனால் அவர்கள் கர்த்தரால் சாட்சி பெற்றதையும் நாம் வேதத்தை நன்றாக படிக்கும் போது மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

 

கணவன்: நல்ல வேளை என்னுடைய கண்களை இயேசப்பா உன் மூலமாய் திறந்தார் இனிமேல் ஒழுங்காக வேதம் வாசிப்பேன் ஜெபத்தோடு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பேன்.

 

மனைவி: இந்த உலகில் இதைவிடவும் பாக்கியமான ஒன்றை நாம் பார்க்கவே முடியாது.

கணவன்: இதைக் கேட்டவுடனே இப்பொழுதே என்னுடைய இருதயத்தில் தெய்வீக சமாதானத்தை உணருகிறேன்.

bottom of page