top of page

முதியவரும், வாலிபத்தம்பியும் உரையாடுதல்

  • வாலிபர்: ஐயா, ஸ்தோத்திரம் கிறிஸ்தவ பணியில் ரொம்ப நாளாய் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  • முதியவர்: தம்பி, ஸ்தோத்திரம் ஆமாம் என்னுடைய குறிக்கோள் எல்லாம் கடைசி மூச்சு இருக்கும் வரை கர்த்தராகிய இயேசுவுக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

  • வாலிபர்: ஐயா உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாமா?

  • முதியவர்: கேளுங்க தம்பி எனக்குத் தெரிந்ததை உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.

  • வாலிபர்: பலி என்று அடிக்கடி சபைகளில் பேசுவதையும் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிட்டுள்ளதையும் பார்க்கிறேன். இதன் உண்மையான அர்த்தம் என்ன?

  • முதியவர்: தம்பி, பலி என்றால் நம்மை முழுமையாக தேவனுக்கு சொந்தமாக அர்ப்பணிப்பது ஆகும். சுருங்கச் சொல்லப்போனால் நாம் எப்பொழுதும் தேவனுடைய பிள்ளையாக இருப்பது ஆகும்.

  • வாலிபர்: இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு நம்மை அர்ப்பணிக்க முடியுமா?

  • முதியவர்: முடியும், ஆனால் நீ பரிசுத்தமாய் இருந்தால் இத்தகைய காரியத்தைச் செய்ய முடியும்.

  • வாலிபர்: ஒருவேளை தவறு செய்து விட்டோம் அப்பொழுது நம்மை அவர் பலியாக ஏற்றுக் கொள்வாரா?

  • முதியவர்: நம்மை ஏற்றுக் கொள்வார் ஆனால் ஒரு நிபந்தனை, எப்படியென்றால், நாம் செய்த பாவத்தை அறிக்கையிட்டு நாம் மனந்திரும்புகிற பலியாக மாறும் போது.

  • வாலிபர்: பழைய ஏற்பாட்டில் அனேக பலிகளை செலுத்துகிறார்கள் அப்படியென்றால் பலவிதமான பலிகள் இருக்கிறதா?

  • முதியவர்: தம்பி, பல வகைகள் எல்லாம் இல்லை, ஆனால் ஒரேவிதமன பலியை பலவாறு செலுத்துகிறார்கள். எதற்காகவென்றால் கர்த்தராகிய இயேசுவை எப்படியாவது பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காக.

  • வாலிபர்: ஏன் ஆடு மாடுகளை அன்றைய நாட்களில் பலியாக செலுத்தினார்கள் ?

  • முதியவர்: அன்றைய நாட்களில் கர்த்தர் வாசம் செய்யும்படியாக ஆலயம் கட்டப்பட்டது. அந்த பரிசுத்தமான இடத்துக்கு செல்ல வேண்டுமானால் நாம் பாவம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாவம் செய்து விட்டால் அந்த பாவத்திற்கு பரிகாரமாக பலியை செலுத்த வேண்டும். அதற்காக கர்த்தர் மிருகங்களை பிரமாணமாக கொடுத்திருந்தார்.

  • வாலிபர்: இன்றைய நாட்களிலும் இப்படி செய்யலாமா?

  • முதியவர்: இன்றைய நாட்களில் அது முடியாது, ஏனென்றால் மிருகத்தின் இரத்தத்தின் மூலம் பாவம் மூடப்பட்டதே ஒழிய, ஒருபோதும் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை, இதனால் கர்த்தர் ஒருபோதும் சந்தோஷப்படவில்லை. ஏன் என்றால் ஜனங்கள் மறுபடியும் மறுபடியும் பாவம் செய்து மிருகத்தை பலியாக ஆலயத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆகவே இயேசு கிறிஸ்து எல்லாருக்காகவும் ஜீவ பலியாக மாறி நம்மை அவருடைய ஆலயமாக மாற்றிக் கொண்டார்.

  • ஆகவேதான் நம்மையே கர்த்தருக்கு ஜீவ பலியாக கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நாம் பாவம் செய்தால் நாம் பலி செலுத்துவதற்கு மிருகங்கள் இல்லை. இயேசுவும் இல்லை ஏனென்றால் அவர் ஒருதரம் மரித்து விட்டார். ஆகவே நாம் தான் இனி மரிக்க வேண்டும். எனவே எப்பொழுதும் நம்மை பரிசுத்தமாய் வைத்திருந்தால் மாத்திரமே நம்மை ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்

  • வாலிபர்: ஐயா நன்றாக புரிந்து கொண்டேன் இனிமேல் என்னை சுத்தமாக வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஜீப பலியாக அர்ப்பணிப்பேன்.

  • முதியவர்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை ஆசீர்வதிப்பாராக. தம்பி ஜெபம் செய்யலாமா?

எங்களுக்குப் பிரியமான அன்பு நேசராகிய இயேசு கிறிஸ்துவே இவ்வளவு நேரமாய் எங்களோடு கூட பேசினார் அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அதுமட்டுமல்லாமல் இந்த பிள்ளையின் சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைத்து அந்த மகனை உம்முடைய பலியாக ஏற்றுக் கொள்ளும்படியாக அந்த வாலிபனுடன் இடைப்பட்டீரே அதற்காக நன்றி. அப்பா எப்பொழுதும் நாங்கள் பரிசுத்தமாய் உம்முடைய சமுகத்தில் வாழ்ந்து, எங்களை ஜீவ பலியாக காத்துக் கொள்ள உதவி செய்யும். ஆமென்

bottom of page