top of page

என்னுடைய விருப்பமும் தேவனுடைய சித்தமும் உரையாடுதல்

என்னுடைய சுய விருப்பத்தை வெளிப்படுத்தும் போது தேவன் உணர்த்துகிற காரியங்கள்

எனது விருப்பம்: உலகம் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும்

தேவனுடைய விருப்பம்: உன்னுடைய குடும்பம் முதலில் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்ததுண்டா?

எனது விருப்பம்: ஆலயத்திற்கு போகும் போதெல்லாம் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது

தேவனுடை விருப்பம்: என்றைக்காவது ஆலயம் செல்லாமல் இருக்கிறவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் வந்தது உண்டா?

 

எனது விருப்பம்: அபிஷேகத்தால் நிறைந்து அன்னிய பாஷையில் பேசுவது என்பது எனக்கு ரொம்ப பிடித்தது

தேவனுடைய விருப்பம்: நீ பெற்ற அபிஷேகத்தை எத்தனை பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறாய்?

 

எனது விருப்பம்: அனேகருடைய விடுதலைக்காக ஜெபிக்க வேண்டும்

தேவனுடைய விருப்பம்: முதலில் நீயும் உன்னுடைய குடும்பமும் விடுதலையைப் பெற்றிருக்கிறீர்களா என்பதை சிந்தித்தது உண்டா?

 

எனது விருப்பம்: தசம பாகம், காணிக்கையை தேவனுக்கு ஒழுங்காக கொடுப்பதில் மிகுந்த கவனமாய் இருக்கிறேன்

தேவனுடைய விருப்பம்: என்றைக்காவது உன் முன்னால் இருக்கிற ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை வந்தது உண்டா?

 

எனது விருப்பம்: எனக்கு தேவன் ஒரு நல்ல சபையை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்.

தேவனுடைய விருப்பம்: என்றைக்காவது சபையில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பிள்ளைகளை நினைத்துப் பார்த்ததுண்டா?

 

எனது விருப்பம்: காலம் தவறாமல் ஒழுங்காக ஒவ்வொரு ஓய்வு நாளிலும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதை என்னுடைய பழக்கமாக கொண்டிருக்கிறேன்

தேவனுடைய விருப்பம்: உன்னுடைய ஆலய பிரவேசம் பரிசுத்தமாய் இருக்கிறதா? என்று சோதித்துப் பார்த்ததுண்டா?

 

எனது விருப்பம்: இரண்டாம் வருகையை குறித்து அறிய வேண்டும் என்று அனேக நாளாய் வெகு ஆவலாய் இருக்கிறேன்

தேவனுடைய விருப்பம்: இரண்டாம் வருகைக்கு முன்பாக கர்த்தருடைய முதல் வருகையை குறித்து நன்றாக அறிந்திருக்கிறாயா?

 

எனது விருப்பம்: எனக்கு துன்பம் வரும் போதெல்லாம் உடனே வேதத்தை எடுத்து படிக்கத் தொடங்குவேன்

தேவனுடைய விருப்பம்: வேதம் இல்லாதவர்களுக்கு என்றைக்காவது வேதம் வாங்கிக் கொடுத்திருக்கிறாயா? அல்லது அவர்களிடம் வேதம் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறாயா?

 

எனது விருப்பம்: எந்த ஊழியக்காரர்கள் தவறு செய்தாலும் உடனே அவர்களை என்னுடைய ஆவிக்குரிய பட்டியலில் இருந்து எடுத்து விடுவேன்.

தேவனுடைய விருப்பம்: ஊழியக்காரரின் ஊழியத்திற்காக ஒரு நிமிடமாவது என்றைக்காவது ஜெபித்தது உண்டா?

 

எனது விருப்பம்: ஆவிக்குரிய வரங்கள் ஒன்பதையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆவலோடு தேவ சமுகத்தில் காத்திருக்கிறேன்

 

தேவனுடைய விருப்பம்: இந்த வரங்களைக் கொண்டு உன்னுடைய பேரை மகிமைப்படுத்தப் போகிறாயா? அல்லது தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த ஆசைப்படுகிறாயா?

 

எனது விருப்பம்: பெரிய ஊழியக்காரர்களிடம் சென்று அவர்களுடைய வல்லமையான அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேவனுடைய விருப்பம்: அவர்களை பெரிய ஊழியக்காரர்களாக அபிஷேகம் பண்ணி வைத்தது தேவன் அல்லவா? அவரிடம் அல்லவா நீ செல்ல வேண்டும்.

 

எனது விருப்பம்: நான் கர்த்தருக்கு ஒரு நல்ல ஊழியக்காரனாக இருக்க வேண்டும்

 

தேவனுடைய விருப்பம்: முதலாவது நீ கர்த்தருக்கு ஒரு நல்ல விசுவாசியாய் இருந்திருக்கிறாயா என்பதை சிந்தித்து பார்.

 

சிந்தியுங்கள் யாருடைய விருப்பம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டும். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, தேவனுடைய விருப்பத்தின்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் மாத்திரமே தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்ல முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

குறிப்பு:

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நாம் மட்டும் கிறிஸ்தவர்களாய் வாழ்வதுமட்டுமல்லாமல் மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாக வாழ வைக்க வேண்டும். நமது விருப்பம் நம்மை மாத்திரம் கிறிஸ்தவர்களாக வாழ செய்கிறது ஆனால் தேவனுடைய விருப்பமோ நம்மையும் மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாய் வாழ செய்கிறது.

bottom of page