top of page

நாங்கள் தான் பரிசுத்தவான்கள்

ன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள சில சபையினர்; வெள்ளை உடை அணிந்து நகையை கழற்றினால் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுப்போம், நகை போட்டவர்கள் தீட்டு பட்டவர்கள் அவர்கள் பரலோகம் போகமாட்டார்கள் என்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து கீழ்படிய சொன்ன தேவநீதியான ஞானஸ்நானத்தை விட நகையை கழற்றுவதை முக்கியப்படுத்துகிறார்கள். தங்கள் சபைகளின் கொள்கைகளுக்காக தேவநீதியை அவமானப்படுத்துகிறார்கள்.

 

நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று இயேசு சொன்னார். மாற்கு 7-13

 

இவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்!? 

நகை போட்ட தீட்டுபட்டவர்களின் காணிக்கையையும் தசமபாகங்களையும் எதற்காக வாங்குகிறீர்கள்?

இவர்களை ஏன் பாவிகள் என்றும் தீட்டானவர்கள் என்றும் நியாயம் தீர்க்கிறீர்கள்.

 

இத்தகய ஊழியக்காரர்களுக்கு சபை பாரம்பரியத்தில் தான் வைராக்கியம் இருக்கிறது. ஆனால், தேவ அன்பினால் நிறைந்த ஆத்தும பாரம் இல்லாதவர்கள்.ஜனங்களை தங்கள் சபை கொள்கைகளுக்கு நேராக மாத்திரம் வழி நடத்துகிறார்கள்.

இன்றைக்கு சபை நடத்த தடை செய்யப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் கிராமங்களில் கூட ஜிப்பா போட்டு கொண்டு ஜனங்களை வெள்ளை உடையை அணிந்து கொள்ள வற்புறுத்தி கொண்டிருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட இடத்தில் சபை நடத்தும் இவர்கள்,கடல் கடந்து வந்த இடத்திலேயும் வெள்ளை பாரம்பரியத்தை விடவில்லை.

 

இலங்கை புத்த பிட்சுகள் மூலமாக இலங்கை பெந்தே கோஸ்தே சபை மூலமாக இந்த ஜிப்பா கலாச்சாரம் பரவினது. இலங்கையின் புத்த பிட்சுகள் எல்லாவற்றையும் துறந்து இத்தகய உடையை அணிந்தார்கள், அப்பொழுது அங்கிருந்த CPM சபையை ஸ்தாபித்த பால் அவர்கள் சந்நியாசியை போல எல்லாவற்றையும் துறந்து அதே கொள்கையை பின்பற்றினார்கள், தங்கள் சபையின் ஊழியக்காரர்களையும் பின்பற்ற சொன்னார். இது பிற்காலத்தில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவியது. நான் ஜிப்பா போடுவதை தவறாக சொல்லவில்லை. ஆனால், ஜிப்பா போட்டால் தான் ஊழியக்காரனாக ஏற்று கொள்வோம் என்பது சரியானதல்ல.

 

இவர்கள் வெளிப்புறமாக தங்களை வித்தியாசப்படுத்தி காண்பித்தாலும் அவைகள் தேவனை ஒரு போதும் கவர்சிப்பதில்லை. ஏனென்றால் அநேகர் நான்  என்கிற சுயத்தை வெறுத்து தங்கள் சிலுவையை எடுத்து கொண்டு இயேசுவை பின்பற்றவில்லை. உண்மையிலையே  இயேசு கிறிஸ்து சுட்டி காட்டிய மனத்தாழ்மைக்கு பதிலாக, நாங்கள் பரிசுத்தவான்கள் எங்கள் சபை தான் உயர்ந்தது! நான் இவர்களை போல அல்ல! என்கிற ஆவிக்குறிய பெருமை தான் இவர்களிடம் இருக்கிறது.

இயேசுவிடம் இருந்தது போல கால்களை கழுவி தாழ்மையின் மாதிரியை கிரியைகளில் காண்பிக்கிற ஆவி உடையவர்களை பார்க்க முடிவதில்லை.!!!

 

இயேசு ஊழியம் செய்த போது ஜனங்களை போல சாதாரண உடை தான் அணிந்திருந்தார். சீஷர்களும் அப்படியே தான் நடந்தார்கள். இயேசு கிறிஸ்து நம்முடைய உடையை மாற்ற வர வில்லை, உள்ளத்தை மாற்ற சொன்னார். உங்கள் மனம் புதிதாகுதலினாலே மறுரூபமாகுங்கள் என்று பவுல் எழுதுகிறார்..

 

இத்தகய சபைகள் தங்கள் விசுவாசிகளை மனிதன் பார்க்கிற வெளிப்புறமான போலியான வெள்ளையடிப்புக்குள் நடத்துகிறார்களே தவிர மெய்யான பரிசுத்ததிற்கும் நீதிக்கும் நேராக நடத்துவதில்லை. நகையை கழற்றுவதும் கலர் உடையை மாற்றி வெள்ளை உடை அணிவதை விட யூதா 22 ல் சொல்லப்பட்டது போல மாம்சத்தால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தை அகற்றுவது தான் கஷ்டமானது. இயேசுவின் சாயலுக்கேற்ற மறுரூபம் முதலாவது நமது உள்ளான மனிதனில் காணப்பட வேண்டும். பரிசுத்தவான் என்று வெளிப்புறமாக காட்டி கொள்ளும் அடையாளம் எல்லாம் வெறும் வெளி வேஷமாக தான் இருக்கும்.

 

மனிதன் வேஷமாகவே திரிகிறான். சங் 39-6

 

இவர்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது இவர்களது குடும்பத்தினரிடம் போய் கேளுங்கள் இவர்களது சாட்சியை நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆனால் வெறும் உடை விஷயத்தில் மாத்திரமல்ல, நம்முடைய சுபாவம் பிற மனிதர்களை விட திவ்விய சுபாவமாக இருக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவை போல தாழ்மை எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மெய்யான ஆவிக்குறியவர்கள் என்பது வெறும் அந்நிய பாஷை மற்றும் ஸ்தோத்திரம் சொல்லி ஆவிக்குறியவர்களாக நம்மை காண்பிப்பது அல்ல, தங்களிடம் இருக்கும் ஆவிக்குறிய பெருமையை நிதானித்து அறிந்து அதிலிருந்து மனம் திரும்புவது.

அடுத்ததாக, எல்லா இடத்திலேயும் எப்படிபட்ட சூழ்நிலைகளிலும் பரிசுத்த ஆவியானவராலே வழி நடத்தப்பட்டு இயேசுவை போல ஒரு தாழ்மையுள்ள மனுஷனாய் நம்மை காண்பிப்பதே உண்மையான ஆவிக்குறிய தன்மை.  இருதயத்தில் மறைந்திருக்கும் அமைதலுள்ள ஆவியும் சாந்த குணமும் தேவனுயைய பார்வையில் விலையேறப்பெற்றது இது தான் உண்மையான ஆவிக்குறிய தன்மை.

 

இன்றைக்கு, இவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்புகிறேன் என்கிறார்கள் ஆனால் பரிசுத்த ஆவியானவாரால் நடத்தபடுவதில்லை. பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம் இருதயத்தில் ஊற்றப்பட்டு ஜீவ தண்ணீருள்ள நதிகள் நம்மிலிருந்து வெளிப்பட வேண்டும். நீங்கள் பூமிக்கு உப்பாயிருங்கள்,உலகத்துக்கு வெளிச்சமாயிருங்கள் என்று இயேசு சொன்னார். ஆனால், பரிசுத்தவான்கள் பரிசுத்தவாட்டிகள் என்று சொல்லி திரிகிற இவர்களில் பலர் தங்கள் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூட பேசுவதில்லை. மேலும், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5-5

 

இன்றைக்கு தேவ அன்பினால் நிறைந்த பரிசுத்தவாட்டிகளை காட்டுங்கள் பார்க்கலாம்!?? 

அன்பில்லாதவன் தேவனை அறியான். தன் சகோதரனை பகைக்கிறவன் மனுஷ கொலைப்பாதகனாயிருக்கிறான். காண்கின்ற சகோதரனிடம் அன்பு கூறாதவன் காணாத தேவனிடம் எப்படி அன்பு கூறுவான்? அன்பு சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்களிடம் உள்ள அன்பு திருப்பி தாக்கும். சபித்தலும் துதித்தலும் ஒரே நாவிலிருந்து வெளிப்படும், ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்கும்.

 

சபைகளில் அன்னிய பாஷை பேசி கையடித்தால் மாத்திரம் போதாது. பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் நம்முடைய சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக அதாவது கிரியைகளில் வெளிப்பட வேண்டும்.

சந்திப்பின் நாளிலே தேவன் நம்மை நம் கனிகளினால்  நம்மை அறிவார். நம்முடைய கனியுள்ள சாட்சியுள்ள வாழ்க்கை தான் பரலோகத்தை திறக்கும் திறவுகோல்.

பரிசுத்த ஆவியானவர் வரும் போது சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசு சொன்னார். சந்திப்பின் நாளிலே நீ நகையை கழற்றினாயா, வெள்ளை உடை அணிந்தாயா, தசம பாகம் கொடுத்தாயா? என் பிறந்த நாளை கொண்டாடினாய்? என்று இயேசு உங்களிடம் கேட்பார் என்று நினைக்கிறீர்களா?நிச்சயமாக கேட்க மாட்டார்.

நம் வாழ்க்கை மூலமும் தேவன் நமக்கு  கொடுத்த ஆசீர்வாதங்கள் மூலமும் இயேசுவின் நாமத்தை மகிமைபடுத்தினோமா?புறஜாதிகளுக்கு முன்பாக யோக்கியமாக நடந்தோமா? நம் வரம் என்னவாக இருந்தாலும் அல்லது ஊழியம் என்னவாக இருந்தாலும் அவையனைத்தும் கிறிஸ்துவை போன்ற வாழ்க்கையின் ஊற்றுகண்ணிலிருந்தே பாய்ந்தோடி செல்ல வேண்டும்.

 

தயவு செய்து ஜனங்களை போலியான  வெளிப்புறமான பரிசுத்ததிற்கு நேராக மாத்திரம் நடத்தாதீர்கள். ஏனென்றால்? உங்கள் சபை விசுவாசிகள் புறப்பட்டு சென்று தங்களை போலவே மற்றவார்களையும் போலியான வெளிப்புறமான பரிசுத்ததிற்கு நேராக மாத்திரமே நடத்துவார்கள்.

 

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், எபேசியர் 3-16

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 2 கொரிந்தியர் 4-16  இது தான் மெய்யான ஆவிக்குறிய மாற்றம்.

 

உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. ரோமர் 2-29

 

அன்றைக்கு ஏதேன் தோட்டத்தில் சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் பாவம் செய்ய வைத்து நிர்வாணப்படுத்தினான் இன்றைக்கு பல பாரம்பரிய சபைகள் ஜனங்களின் உடையை மாத்திரம் மாற்ற சொல்லி நகையை கழற்ற கட்டாயப்படுத்துகின்றனர். வெளிப்புறமாக வெள்ளையடித்து கொண்டிருக்கின்றனர்.

 

குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத்தேயு 23-26

bottom of page