top of page

இரட்சிப்பை காத்து கொண்டு  வரப்போகும் தண்டனைக்கு தப்பித்து கொள்

திக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.  ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். பிலிப்பியர் 2:12-13

 

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து தன் ஜீவனை கொடுத்து  பாவ மன்னிப்பின் மூலம் பெற்று தந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை  காத்து கொள்ள விருப்பம் இல்லையென்றால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.

 

இன்றைக்கு இரட்சிப்பை பற்றி சபைகளில் போதிப்பதில்லை, இரட்சிப்பு என்றால் என்ன என்பதும் தெரியவில்லை, ஜனங்களுக்கு அதை குறித்த புரிதல் இல்லை, இரட்சிப்பை காத்து கொள்ள வேண்டும் என்கிற பயம் சபைகளில் இல்லை. ஊழியக்காரர்களுக்கே அதை பற்றிய அக்கறையும் கவலையும் இல்லை.!!!!

 

தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.  எபிரேயர் 2-4

 

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 2 தீமோத்தேயு 1-14

 

ஒருவன் இயேசுவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்படைந்து இரட்சிக்கப்படும் போது அவனது மனசாட்சியில் குற்ற உணர்வு நீங்கி சுத்திகரிப்பை பெற்று கொள்கிறான். எபிரேயர் 9-14 ன் படி கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் மனச்சாட்சியை செத்த கிரியைகளர சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம். இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.  அப்போஸ்தலர் 24-16.

 

இது தான் பாவ மன்னிப்பின் நிச்சயம். இது தான் மனம் புதிதாகுதலினாலே உண்டாகும் மறு ரூபம்.

 

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16-16

 

இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், ஞானஸ்நானம் என்பது இரட்சிப்பின் அடுத்த படி.

 

அடுத்ததாக ஞானஸ்நானம் என்பது தேவனுடைய ஆலோசனை.

 

பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டார்கள். லூக்கா 7-30

 

அடுத்ததாக ஞானஸ்நானம் என்பது வானத்தையும் பூமியையும் படைத்த இயேசு கிறிஸ்துவின் கட்டளை.

 

நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்ன் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். மத் 28-19

 

நீங்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களானால் இயேசு சொன்ன ஆலோசனையையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில்  பங்குள்ளவர்களாக வேண்டுமென்றால் தேவன் சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படியுங்கள். இரட்சிப்பை குறித்ததான எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்படிய நம்மை ஒப்புக் கொடுப்போம். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து நமக்கு பெற்று தந்த விலை மதிக்க முடியாத  இரட்சிப்பை காத்து கொள்ளுங்கள். நான் இரட்சிக்க பட்டேன் என்று பெருமை பாராட்டாதீர்கள், இயேசு கிறிஸ்து  இரட்சிப்பை குறித்து இப்படியாக எச்சரித்தார்.

 

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். மாற்கு 13-13

 

 

நம் வாழ்க்கையின் எஞ்சிய நாள்கள் வரை இரட்சிப்பை  காத்து கொள்ள சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்தும் பரிசுத்த ஆவியானவர் தரும் வல்லமை தேவை. தேவன் தந்த நற்பொருளான இரட்சிப்பை  பரிசுத்த ஆவியானவரால் நாம் ஆளுகை செய்யப்பட்டு நடத்தபட ஒப்பு கொடுக்கும் போது தான் காத்து கொள்ள முடியும்.

  

 

அப்பொழுது பேதுரு; நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப் 10-47

 

இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட கீழ்படிந்த இரட்சிப்பை பற்றிய  கட்டளைகள் மற்றும் உபதேசங்களை படியுங்கள்.அதை பின்பற்றுங்கள்.அவருடைய அடிச்சுவடை பின்பற்றும் படி உங்களை ஒப்பு கொடுங்கள். 

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2:6

 

என் வசனத்தை நீங்கள் ஏற்று கொள்ளவில்லையென்றால் நான் சொன்ன வசனமே கடைசி நாள்களில் உங்களை நியாயம் தீர்க்கும் என்று இயேசு சொன்ன எச்சரிப்பை கவனியுங்கள்.இயேசு சொன்ன எந்த வசனத்தையும் புறக்கணிக்காதீர்கள்.தேவ வசனத்துக்கு எதிர்த்து வாக்குவாதம் செய்யாதீர்கள்.  

 

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12:48

 

 

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:19

 

 

சிறைசாலை தலைவன் அவர்களை வெளியே அழைத்து வந்து; ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,  அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும், இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போஸ்தலர் 16:33

 

இன்றைக்கு அநேக புற மதத்தினர் பாவத்திலிருந்து மனம் திரும்பி ஞானஸ்நானம் பெற்று, நாங்கள் இரட்சிக்கப்பட்டோம். நாங்கள் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டோம்.நாங்கள் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்தோம் என்று அறிக்கை பண்ணுகிறார்கள். இரட்சிப்பை பெற்று கொள்ளாதபடி அதாவது இயேசுவின் உபதேசத்துக்கு கீழ்படியாதபடி நம்மை தடை செய்வது யாருடைய சுயநீதி. 

எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ரோமர் 10-3

 

 

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்; 2 யோவான் 1:9

 

 

மனிதன் உருவாக்கின உபதேசத்துக்காக இயேசு சொன்ன இரட்சிப்பை பற்றிய வசனங்களை புறக்கணிக்காதீர்கள், இயேசு சொன்ன சத்தியங்களை ஆராய்ந்து பாருங்கள்.

 

 

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

யோவான் 5-39

 

பொய்யனும் பொய்க்கு பிதாவாகிய பிசாசானவன் இயேசு சொன்ன சத்தியங்கள் தேவையில்லை என்று பொய் சொல்கிறான். சத்தியத்தையும் அறிவீர்கள்சத்தியம் விடுதலையாக்கும் என்று சொன்னவர் இயேசு கிறிஸ்து. இயேசு கடைபிடிக்க சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படிய உங்களை ஒப்பு கொடுங்கள். பரிசுத்த ஆவியானவர் இல்லையென்றால் சத்தியங்களை அறிய முடியாது. எனவே வேதாகமத்தை படிக்கும் முன்பு பரிசுத்த ஆவியானவரே எனக்கு போதியும் என்று ஜெபித்து விட்டு படியுங்கள்.உங்கள் சுய ஞானத்தினாலே வசனங்களுக்கு கீழ்படியாமல் இருக்காதீர்கள்.உங்கள் அறிவு குறைவுள்ளது.

 

நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். 1 யோவான் 2:20

 

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2:27

 

ஆமென்.

bottom of page