top of page

Acerca de

ஞானஸ்நானம் என்கிற இயேசுவின் கட்டளையை புறம்பாக்கி, சபை நடத்துகிற மாறுபாடான சந்ததியே!!

பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.  வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி, இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.  


அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.  அப்போஸ்தலர் 2:38-41.

இன்றைக்கு சத்தியத்தை அறியாமல் இயேசு சொன்ன கட்டளைகளை தேவையிலை என்று மறுதலித்து ஜனங்களை ஞானஸ்நானம் என்கிற சத்தியத்துக்குள் நடத்தாமல் அதாவது ஜனங்கள் இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளாதபடி சபையை நடத்துகிறவர்கள் சத்தியத்துக்கு எதிரான மாறுபாடானவர்கள்.இவர்கள் மறைமுகமாக சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பவர்கள்.

ஒரு வேளை உங்கள் ஸ்தாபனத்தை உருவாக்கியவரை நீங்கள் உயர்த்தி இயேசுவின் கட்டளைகளை புறக்கணித்துஸ்தாபகரின் கொள்கைளை தூக்கி பிடித்து உங்கள் சபைகளை ஸ்தாபித்தவரை மறைமுகமாக ஆராதிக்கலாம்.

இயேசு கிறிஸ்து தனக்கு ஊழியம் செய்ய அழைத்தவர்களை அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று சொல்ல சொன்னார்.

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17-10.

எஜமான் செய்ய சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படியாமல் அவரால் அழைக்கப்பட்ட வேலைக்காரன் சொன்ன காரியங்களுக்கு கீழ்படிந்து கொண்டிருக்கிற மாறுபாடான சந்ததியே,உன்னை இரட்சிப்புக்குள் நடத்தும் இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்படியவில்லையென்றால்,  என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.  யோவான் 12-48.


எச்சரிக்கை..!!!!

வேதாகமத்தை படிப்பவர்களே ஞானஸ்நானம் என்கிற சத்தியம் உங்களுக்கு புரியவில்லையா?இயேசு சொன்ன கட்டளை என்று தெரிந்தும் உன் சபைக்கு ஒத்த வேஷம் தரித்து தேவனை விட உங்கள் சபையின் ஸ்தாபகர் பெரியவர் என்று எண்ணிக் கொண்டு தேவனுடைய ஆலோசனையை மறுதலிக்கிறீர்களா? 


இதோ ஞானஸ்நானத்தை புறக்கணித்த பரிசேயர்களுக்கு என்ன தீர்ப்பு என்று பாருங்கள்...

பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.  லூக்கா 7-30.  தேவனுடைய ஆலோசனையை மறைக்கிறவன் யார்?   தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோ, சனையை அசட்டைபண்ணினவர்கள். அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.   சங்கீதம் 107:10,11.   ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.   வெளிப்படுத்தினத விசேஷம் 22:19
 
வானத்தையும் பூமியையும் படைத்த இயேசுவின் கட்டளையை  தேவையில்லை என்று ஜனங்களுக்கு போதித்து ஜனங்களை தவறாக நடத்தும் இத்தகய சபையின் ஊழியக்காரர்களே!!நீங்கள் ஏமாற்றுவது வானத்தையும் பூமியையும் படைத்த தேவனை. நீங்கள் மறுதலிப்பது நியாயாதிபதியின் கட்டளையை. உங்களுக்கும் சந்திப்பின் காலம் இருக்கிறது, 
இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.  லூக்கா 9:35.

பிதாவானவர் உங்கள் சபையின் ஸ்தாபகருக்கு செவி கொடுக்க சொல்லவில்லை.ஆலயத்திலும் பெரியவர் மேலும் சபைக்கு தலையாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு செவி கொடுக்க சொன்னார்.

மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.  மத்தேயு 10-33.

உனக்கு இருக்கும் சத்திப்பின் நாளில் நீ யாருக்கு கீழ்படிந்தாய் என்று இயேசு கேட்கும் போது என்ன சொல்ல போகிறாய்?

என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.  யோவான் 14:24.  அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.  1 யோவான் 2-4

பொய்யர்கள் அனைவரும் அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டதை நீ அறியவில்லையா?


சத்தியத்தை மறைத்து சத்தியத்துக்கு மறைமுகமாக எதிர்த்து நின்று தேவ கோபாக்கினையை குவித்து கொள்கிறாயே. உன்னை அழைத்தது பரலோகத்தின் தேவனா? அல்லது உலக மனிதனா?  ஆலோசனையை மறைத்து சத்தியத்தை போதிக்காமல் ஜனங்களை சபையின் சட்ட திட்டங்களுக்கு நேராக நடத்தி இடறலுண்டாக்குகிறவனை கல்லை கட்டி அவனை சமுத்திரத்தில் அமிழ்த்துவது நலமாயிருக்கும்.
 
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,  எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி, நான் சுத்தமாயிருக்கிறேன்.  அப்போஸ்தலர் 20:27 என்று பவுல் சொல்கிறாரே. 
பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டு அதன் இரத்தத்தினால் இஸ்ரவேல் ஜனங்கள் விடுவிக்கப்பட்டு செங்கடலின் வழியாக அவர்கள் நடந்து வந்தார்கள். செங்கடலின் வழியாக வந்தது ஞானஸ்நானத்துக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.  1 கொரிந்தியர் 10:2. இயேசுவின் இரத்தத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நாம் நிச்சயமாய் ஞானஸ்நானம் என்கிற இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும். 

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,  மத்தேயு 28:19.  என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.ஏசாயா 55-8

தேவனுடைய வழிகளில் நடக்க நாம் அழைக்கபட்டிருக்கிறோம். வேதாகமத்தில் சொல்லப்பட்ட காரியங்களை விட்டு விட்டு சுய சித்தம் செய்ய அழைக்கப்படவில்லை. என் மேல் அன்பாயிராதவன் என் கற்பனைகளை கைக்கொள்ள மாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. யோவான் 14-24
 
நீங்கள் இயேசுவின் மேல் அன்பாயிருந்தால் அவரது கட்டளைகளுக்கு செவி கொடுப்பீர்கள். சபை மேல் அன்பாயிருந்தால் சபையின் கட்டளைகள் சத்தியத்துக்கு எதிராக இருப்பினும் அதற்கு செவி கொடுப்பீர்கள். 
இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1 கொரிந்தியர் 15-19. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. லூக்கா 21-33.

  • சத்தியத்தை மறைக்கிற நீ அழிந்து போவாய்.

  • அவர் வார்த்தை ஒரு நாளும் ஒழிந்து போகாது.

  • தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

 

காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.  பிரசங்கி 12:13

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3-5

தேவனுடைய ஆலோசனையை தள்ளி விட்டு விட்டு மனிதனுடைய ஆலோசனையை நிலை நிறுத்தி ஞானஸ்நானம் என்கிற இயேசுவின் கட்டளை தேவையிலை என்று சொல்கிறவர்கள் வேதபுரட்டர்கள் தானே.  மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு: அதின் முடிவோ மரண வழிகள். நீதிமொழிகள் 16-25.

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். ஓசியா 4-6

 

சத்தியத்தை அறியாத அறிவில்லாத ஜனமே! ஞானஸ்நானம் என்பது பெந்தேகோஸ்தே சபையின் உபதேசமல்ல, இயேசுவின் கட்டளை. எத்தனை முறை வேதாகமத்தை படித்தும் விளங்கவில்லையா?அது ஒரு பாரம்பரியமாக இருந்தால் இயேசு கிறிஸ்து தடை செய்திருப்பாரே.

பிரியமானவர்களே இன்றைக்கு எத்தனையோ புற மதத்தினர்  இயேசுவை ஏற்று கொண்டு தண்ணீர் ஞானஸ்நானம் என்கிற நீதியை நிறைவேற்றுகிறார்கள். ஆனால் நீங்களோ அதை உல்டாவாக்கி வைத்து தேவனையும் ஜனங்களையும் ஏமாற்றி கடைசியில் உங்களையும் ஏமாற்றுகிறீர்கள்.

இயேசு கிறிஸ்துவே ஞானஸ்நானம் என்கிற நீதியை நிறைவேற்றி நமக்கு மாதிரியை காண்பித்தார். அதன் பின் அவரது சீஷர்களும் அவரது கட்டளையை நிறைவேற்றினார்கள். இப்படியிருக்க அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் உருவாக்கின மனித ஆலோசனையின் படி உங்கள் சபை சட்டத்தின் படி தேவ நீதியை புறக்கணிப்பது சரியா?
உங்கள் சபைக்கு யார் தலையாயிருக்கிறார்?யாருடைய உபதேசத்தின் மேல் சபை கட்டப்பட வேண்டும்.

 

சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்? ஏசாயா 14-27

பிரியமானவர்களே, இயேசுவின் கட்டளையை மறுதலித்து சபையின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து ஞானஸ்நானம் என்கிற சத்தியத்தை விலக்கி வைத்திருக்கும் மாறுபாடான இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்து கொள்ளுங்கள்.


என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.  யோவான் 12:48


என்று இயேசு சொன்ன வசனத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;.  2 யோவான் 1:9

பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? எபிரேயர் 3-18.

இத்தகய சபைகளுக்கு ஒத்த வேஷம் தரிக்கும் ஊழியக்காரர்களே!!இயேசு சொன்ன குருடருக்கு வழி காட்டும் குருடர்களாக இருக்காதீர்கள். நீங்களே சத்தியத்தை அறியாத குருடர்களாக இருக்கும் போது உங்களை நம்பி இருக்கும் சபை ஜனங்களும் குருடர்களாக இருந்து வெளிச்சத்தை காணாதவர்களாய் இருளில் நடக்கிறவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உத்தரவாதம். சந்திப்பின் நாளிலே தேவனையும் ஜனங்களை ஏமாற்றிய பாவத்துக்கு கணக்கு உங்களுக்கு தான்.

இயேசு பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். 
மத்தேயு 15:13. 


அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள், குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். மத்தேயு 15-14


ஆமென்..

Mjhu trdk;: ntsp 2:17

Mtpahdth; rigfSf;Fr; nrhy;Yfpwijf; fhJs;std; Nfl;ff;fltd;@ n[aq;nfhs;SfpwtDf;F ehd; kiwthd kd;dhitg; Grpf;ff;nfhLj;J> mtDf;F ntz;ikahd Fwpf;fy;iyAk;> me;jf; fy;ypd;Nky; vOjg;gl;lJk; mijg; ngWfpwtNdad;wp NtnwhUtDk; mwpaf;$lhjJkhfpa Gjpa ehkj;ijAk; nfhLg;Ngd; vd;nwOJ.(ntsp 2:17)
 

Thanks for submitting!
bottom of page