Are u belong to Body of christ or Body of Brahma??
நீங்கள் கிறிஸ்துவின் சரிரத்துக்குறியவர்களா? அல்லது பிரம்மாவின் சரிரத்துக்குறியவர்களா?
சாதி என்பது விக்கிரகத்தின் ஆணிவேர் சாதி பார்ப்பது இந்துத்துவாவின் அடிப்படை கொள்கை. மேலும் அது விக்கிரகத்தின் வழித்தோன்றல். பிரம்மாவின் உடலில் இருந்து ஒவ்வொரு சாதி மக்களும் பிறந்தார்கள் என்று இந்துத்துவா வருணாசிரம கொள்கை சொல்கிறது. அப்படியிருக்கையில் கிறிஸ்தவத்தில் திருமணம் முதல் ஊழியங்களில் கூட இன்றைக்கும் சாதி பார்க்கிறார்கள். பிரபலமான இந்து சாமியார், கிறிஸ்தவர்கள் மதம் மாறினாலும் இன்றைக்கும் அவர்கள் சாதி பார்ப்பதால் நம்மவர்களாகவே இருக்கிறார்கள் என்றார்.
பிரபலமான ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் கூட சாதி என்கிற அடிமைத்தனத்துக்குள் இருக்கின்றார்கள்.ஒருவன் கிறிஸ்துவை ஏற்று கொண்டால் முற்றிலும் பழைய பாரம்பரிய விக்கிரக அடிமைதனத்திலிருந்து வெளியே வந்து விட வேண்டும்.
நான் கிறிஸ்துவை உடையவன் நான் அவர் இரத்தத்தால் மீட்கபட்டேன் என்று சொல்லிக் கொண்டு மறுபக்கம் நாங்கள் பிரம்மாவின் உடலிலிருந்து வந்தவர்கள் என்று கிரியைகளில் காட்டினால் அது மாயமாலம் தானே. பலர் சமுதாயம பணி என்கிற பேரில் சாதியத்தை கடைப்பிடிக்கிறார்கள் அவர்களால் சாதி பாசம் என்கிற அடிமைதனத்தை விட்டு விட முடியவில்லை, ஆழ்ந்த சத்தியத்தை போதிக்கிறோம் கேட்கிறோம் மேலும் நாங்கள் தான் பரலோகம் போவோம் என்று சொல்கிற சபையினர் கூட சாதிய அடிமைத்தனத்தில் வீழ்ந்து போய் தன்னை போல பிறனை நேசி என்கிற கிறிஸ்துவின் உபதேசத்துக்கு எதிராக பிறரை தீண்டதகாதவர்கள் என்கிற கொள்கையில் வீழ்ந்து போனார்கள்.
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:1,2
ஆபிரகாமை தேவன் தன் குடும்ப பாரம்பரிய விக்கிரக வழிபாடு காரியங்களிலிருந்து முற்றிலும் வெளியே வர சொன்னார்.
இன்றைக்கு நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் சாதியை விட முடியவில்லையென்றால் நம்முடைய இரத்தத்தில் சாதி வெறி இருக்குமென்றால் நாம் இன்றும் பழைய விக்கிரகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கும் சாதிய அடிமைத்தனத்தில் இருக்கிறோம்.நீ உன்னை இந்த சாதி என்று மனதில் நினைப்பாயானால் அதை உன் வாயால் சொல்வாயானால் நீ பிரம்மாவின் சரீரத்திலிருந்து பிறந்தவன். மேலும் நான் பிரம்மாவின் சரீரத்துக்குறியவன்.அதாவது நான் பிரம்மாவுக்குறியவன் என்று உரிமை கொண்டாடுகிறாய். இதிலிருந்து நீ கிறிஸ்துவின் சரீரத்துக்குறியவனல்ல என்று அறிக்கை பண்ணுகிறாய்.இயேசுவை ஏற்று கொண்ட பிறகு விக்கிரகத்தை வீட்டில் வைத்திருந்தால் சாபம் தானே ! அப்படியென்றால் தேவன் பார்கிற உன் இருதயத்தில் விக்கிரகத்தின் கொள்கையை வைத்து கொண்டு அதை நேசிக்கிறாயே?இது தேவனுக்கு முன்பாக அருவருப்பாகாதா?
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 1 கொரிந்தியர்6-19 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களுமாயிருக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 12-27
நம்முடைய அழைப்பு என்ன?தேவனுடைய ராஜ்ஜியத்தில் நாம் யார்?ஒருவன் மறுபடியும் பிறந்தால் புதிய சிருஷ்டியாகிறான்.பழையனவைகள் ஒழிந்து போயின. அப்படியிருக்க நாங்கள் பிரம்மாவின் சரீரத்தில் இருந்து வந்தவர்கள் என்று பிரம்மாவின் சரிரத்துக்கு உரியவர்கள் என்று உரிமை கொண்டாடி கொண்டு நாம் கிறிஸ்துவின் சரீரம் என்று எப்படி பொய் சொல்கிறீர்கள்.நாம் எப்படி வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது.நாம் இருளில் இருக்கிறோமா அல்லது ஒளியில் இருக்கிறோமா?
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:16-18
நாம் தெரிந்தோ தெரியாமலோ சாதி என்கிற பெயரில் அசுத்தமானதை கிரியைகளில் காட்டுகிறோம், மறைமுகமாக விக்கிரகத்துக்குறியவர்கள் அதாவது பிரம்மாவின் சரீரத்துக்குறியவர்கள் என்று அறிக்கை பண்ணுகிறோம். அப்படியிருக்க அவர் எப்படி நம்மை என் பிள்ளைகள் என்று சொல்வார், எப்படி அவருடைய புத்திர சுவீகாரத்தின் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள முடியும்?
நாம் ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டோம் ஒரே ஆவியினாலே தாகம் தீர்க்கப்பட்டோம் மேலும் தேவனுடைய ராஜ்யத்திற்கு உரியவர்கள் என்றும் பரலோகத்துக்குரியவர்கள் என்றும் சொல்லி கொண்டு சாதி பார்த்து கொண்டு ஜனங்களையும் தேவனையும் ஏமாற்றி கொண்டு நாமும் வஞ்சிக்கப்படுகிறோம். பரலோகத்தில் கொள்வினை கொடுப்பனை அல்ல என்று இயேசு சொன்னார். தேவனுடைய ராஜியத்துக்குறியவர்களாகிய நாமோ இந்த உலகத்தில் பிரிவினையான சாதி பார்த்து பிறரை அற்பமாக எண்ணி கொண்டால் எப்படி பரலோகம் போக முடியும்? உண்மையாக கிறிஸ்து ஒருவனுக்குள் இருந்தால் அவன் சாதி பார்க்க மாட்டான். கிறிஸ்துவை உண்மையாக நேசிப்பவனுக்கு சாதி உணர்வு நிச்சயம் இருக்காது. ஒரு வேளை உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் மனம் திரும்புங்கள். ஏனென்றால் சாதி பார்ப்பவன் நிச்சயம் பரலோகம் போக மாட்டான். ஏனென்றால்? நான் பிரம்மா என்கிற தெய்வத்துக்குறியவன் என்று தன் இருதயத்தில் சாதியம் என்கிற சாத்தானியத்தை நேசித்து நாவிலே அறிக்கை பண்ணுகிறான்.
இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
மத்தேயு 6-24
பல ஊழியக்காரர்கள் சாதி பார்க்கும் திருமண புரோக்கர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய இணையதளங்களில் இருக்கக்கூடிய திருமண விளம்பரங்களில் சாதியமே மேலோங்கி இருக்கிறது. ஏன் முன்னணி ஊழியக்காரர்கள் கூட தங்களுடைய சாதியை விட முடியவில்லை. தங்களுடைய திருமணங்களில் சாதி பார்க்கிறார்கள். தங்கள் சபைகளில் சாத்தானுக்கு எதிராக சவால் விடும் அவர்கள் சாதி என்கிற சாத்தானியத்துக்கு எதிராக பேசுவதில்லை. ஆக மொத்தம் பெரும்பாலான விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை நாங்கள் பிரம்மாவின் உடலில் இருந்து வந்தவர்கள் என்று அறிக்கை பண்ணி நாசமாக போகிறார்கள்.
தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள். நீதியைத் தேடுங்கள். மனத்தாழ்மையைத் தேடுங்கள். அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள். செப்பனியா 2:3
கிறிஸ்தவர்களே இந்திய தேசத்தில் நீங்கள் சிறுமையானவர்கள்.அப்படியிருக்கையில்
வருணாசிரமம் என்கிற இந்து கோட்பாடுகளின் படி விக்கிரக கடவுளின் சரிரத்திலிருந்து மனிதர்கள் பிறந்தார்கள் என்கிற கொள்கைகளை தூக்கி பிடித்து சாதி என்கிற பெயரில் மனிதர்களை தரம் தாழ்த்தி இழிவாக நினைத்து அவர்களை சிறுமைப்படுத்துவது பாவம் அல்லவா.சாதி பார்த்து ஜனங்களை தரம் தாழ்த்தி பிரிப்பது தேவ நீதி இல்லை.சாதி பார்க்கிறவர்கள் நீதியையும் தேவ அன்பையும் விட்டுவிட்டவர்கள். இங்கு தேவன் விரும்பும் மனத்தாழ்மைக்கு பதிலாக நாங்கள் உயர்ந்தவர்கள் என்கிற பெருமை வந்து விடுகிறது.
நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன?நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக நிற்போமே ரோமர் 14-10
நாங்கள் தான் பரிசுத்த வான்கள் பூரணர்கள் என்று சொல்கிற பெந்தேகோஸ்தேகாரர்கள் கூட கூட சாதியம் என்கிற மார்க்கபேதத்திற்கு அடிமைகளாக இருக்கின்றார்கள்.
கலாத்தியர் 5-29-21 ல் சொல்லப்பட்ட சாதி என்கிற பெயரில் பிரிவினைகள் மார்க்கபேதங்களை கொண்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. ஏனென்றால் இது ஒரு விக்கிரகத்தின் ஆணி வேர்.சாதி என்பது ஒருமனதுக்கு எதிராக மனிதர்களை பிரிக்கும் சாத்தானியத்தின் தந்திரம்.மறைமுகமான விக்கிரக ஆராதனை. சாதி பார்க்கிறவர்கள் பழைய இந்து முறைப்படி இப்பொழுதும் பிரம்மாவின் சரிரத்துக்குறியவர்கள். விக்கிரகத்தின் எந்த நிழலும் சாபதீட்டானது.சாபதிட்டானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும் நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்க கூடாது என்று கர்த்தர் சொல்கிறார்.விக்கிரகத்துக்கு படைத்ததை புசிப்பது திட்டானது என்றால் நான் இந்த சாதியை சேர்ந்தவன் அதாவது பொய்யான தெய்வத்தை சார்ந்தவன். சாத்தானியத்துக்குறியவன் என்று அறிக்கை பண்ணுவது தீட்டாகாதா?நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள்.நீங்கள் பரிசுத்த ஜாதியாக தேவனால் அழைக்கபட்டவர்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.விக்கிரகத்தை உருவாக்கி அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிறவர்களின் கொள்கைகளையோ முறைமைகளையோ நாம் பின்பற்றுவது தேவனுக்கு அருவருப்பு ஆகாதா?
தேவனோடு உடன்படிக்கை பண்ணியவர்கள் சாத்தானியத்தின் சாதியக் கொள்கைகளுக்கு கீழ்படிவது சாபத்தீட்டானது. பரிசுத்தம் பரிசுத்தம் என்று பிரசங்கிக்கிற பிரசங்கிகள் கூட சாதிய அடிமைதனத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.
பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
2 கொரிந்தியர் 7:1
சாதியம் ஒரு சாத்தானிய ஞானத்துக்குறியது.அதை பின்பற்றுகிறவர்கள் சாதிய கொள்கை படி பிரம்மாவின் சரீரத்துக்குறியவர்கள் அவர்கள் தேவனுடைய ராஜியத்தில் பங்கடைவதில்லை என்று சபைகளில் சொல்லுங்கள்.
விக்கிரக ஆராதனைகாரர்கள் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிப்பதில்லை.அவர்களுக்கு பங்காளியாகாதிருங்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.
முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8