ஞாயிற்று கிழமைகளில் நாங்கள் இயேசுவின் பிள்ளைகள் மற்ற நாள்களில் நாங்கள் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவர்கள்..
இணையத்தளத்தில் திருமண மையங்களை நடத்துபர்கள் ஊழியக்காரர்கள்.
இதை நடத்தும் ஊழியக்காரர்கள் மணமகன் மண மகள் Bio data க்களில் Phone number மற்றும் email contacts கள் தெரியாத படி கருப்பு மையினால்அழித்து பதிவிடுகிறார்கள்.
ஏனென்றால் யாரும் Direct ஆக contact பண்ணி விட்டால் இவர்களுக்கு வருமானம் வராது. இதில் இருக்கும் ஒரு பெண்ணின் அல்லது பையனின் குடும்பத்தை சம்பந்தம் பேச அணுகினால் Register பண்ண வேண்டும். Registration க்கு பணம் செலுத்த சொல்கிறார்கள்.சரி பரவாயில்லை பணம் சம்பாதித்து விட்டு போகட்டும்.
ஆனால் Contact details ஐ மறைத்து வெளியிடும் இந்த ஊழியக்காரர்களிடம் சாதி பெயரையும் Cut பண்ணி வெளியிடுங்கள் என்று சொன்னால்,சாதியை எல்லாம் மறைக்க முடியாது.
சாதி இல்லாமல் கிறிஸ்தவ திருமணங்கள் நடப்பதில்லை என்கிறார்கள். இது மாத்திரமல்ல இந்த ஊழியக்காரர்கள் தங்கள் அழைப்பை விட்டு விலகி,சாதி பார்த்து திருமணம் செய்து வைக்கும் புரோக்கர்களாக மாறி விட்டார்கள்.
இந்த Group ல் இருக்கும் மற்ற ஊழியக்காரர்கள் இதை குறித்து கண்டு கொள்வதில்லை.சமீபத்தில் ஒரு இணையதள Debate ல் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திலும் சனாதானம் மற்றும் வருணாசிரம் இருக்கிறது. அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் சனாதானத்தை வெகு தீவிரமாக செயல்படுத்துகிறார்கள், அவர்களின் செயல்பாடுகளின் படி அவர்கள் இந்துக்களாக தான் இருக்கிறார்கள் என்றார்.
மேலும், அவர் தனது கையில் உள்ள கிறிஸ்தவ திருமண பதிவு தகவல்களை காட்டி,கிறிஸ்தவ திருமணங்கள் எல்லாம் சாதி பார்த்து தான் நடத்தப்படுகாகிறது என்றார். இந்த Debate ஒரு பிரபல TV channel ல் ஒளிப்பரப்ப பட்டது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் இதை பார்க்கிறார்கள்.
இதை பார்க்கும் பலர் புற மதத்தினர் கிறிஸ்தவத்தை குறித்து இடலறடைகிறார்கள். ஏனெனில், இயேசுவின் உபதேசத்துக்கும் இவர்கள் கடை பிடிக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை.
சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்திற்கு மாற தீர்மானித்தார்கள். அவர்களிடம் இயேசுவை பற்றி சொன்ன போது, இயேசு நல்லவர் தான். அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்தில் சமூக நீதி இல்லை.
கிறிஸ்தவர்கள் இந்துக்களை போல சாதி வெறியர்களாக இருக்கிறார்கள் என்றார்கள். கிறிஸ்தவத்தில் இருக்கும் சாதி வெறியினால் அநேக புற மதத்தினர் இடறலடைய யார் காரணம்?
பிரியமானவர்களே இதற்கு யார் பொறுப்பு?.
சத்தியத்தை சரியாக போதிக்காத போதகர்கள் தான் என்கிறார் ஒரு இந்து மதத்திலிருந்து இயேசுவை ஏற்று கொண்ட ஒருவர். மேலும் அவர் கூறுகையில் சாதியத்தை அருவருப்பாக பார்த்த நாங்கள் இங்கு வந்த போது இவர்களோ சாதியத்தில் ஊறி போய் இருக்கிறார்கள் என்பதை பார்த்து வருத்தமாக இருக்கிறது என்கிறார்.சாதிக்கும் வேதாகமத்துக்கும் சம்பந்தமே இல்லை மேலும் சாதி என்பது பிரிவினை என்கிற அடிமைத்தனம் என்கிறார்.
பிரசங்க மேடையில் பிசாசுக்கு விரோதமாக சத்தம் போடுகிற ஊழியக்காரர்கள் விக்கிரகத்தின் ஆணி வேராகிய சாதிக்கு எதிராக வாயை மூடி மௌனமாக இருப்பது ஏன்?
ஏன் ஊழியக்காரர்களால் சாதியத்துக்கு எதிராக பேச முடியவில்லை.? சாதியத்தை கண்டும் காணாமல் இருப்பது மாயமாலம் தானே?. நாம் கிறிஸ்துவின் சரீரத்துக்குறியவர்கள் என்று சொல்லி கொண்டு மறுப்பக்கம் நாங்கள் பிரம்மாவின் கால்களிலிருந்து பிறந்தவர்கள் என்று சாதி பார்த்து கொண்டிருக்கும் ஊழியக்காரர்கள் மனம் திரும்ப முதலாவது ஜெபியுங்கள்.
ஏனென்றால் கலாத்தியர் 5 20 ல் சொல்லப்பட்ட பிரிவினைகள் மார்க்க பேதங்கள் போன்ற இப்படிபட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்கிற வசனத்தின் படி நாங்கள் பிரம்மாவின் சரீரத்துக்குறியவர்கள் அதாவது விக்கிரகத்துக்குறியவர்கள் என்று அறிக்கையிடும் இவர்கள் பரலோக ராஜியத்துக்குள் பிரவேசிப்பதில்லை என்பது உண்மை.
ஞாயிற்று கிழமைகளில் நாங்கள் இயேசுவின் பிள்ளைகள் என்று சொல்லி கொண்டு மற்ற நாள்களில் நாங்கள் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவர்கள் எனவே பிரம்மாக்குறியவர்கள் என்று வாயில் அறிக்கையிட்டு கொள்வது தேவனுக்கு பிரியமாயிருக்குமா? தேவனுக்கும் விக்கிரகத்துக்கும் பங்கு உண்டா?
நீ கிறிஸ்துவை உடையவன் என்றால் ஒரே சாதி தான்.அது பரிசுத்த ஜாதி மாத்திரமே.நாம் ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டோம்.ஒரே ஆவியினால் தாகம் தீர்க்கப்பட்டோம்.
ஊழியக்காரர்களே.!!!!
குருடருக்கு வழிக்காட்டும் குருடராக இருக்காதீர்கள். பரலோகத்துக்கு அழைக்கப்பட்ட ஜனங்களை சனாதானவாதிகளாக நடத்தாதீர்கள். சபைக்கு வந்து கொண்டு வருணாசிரமம் மற்று மனுதர்மம் என்கிற விக்கிரகத்தின் கொள்கைகளுக்கு அடிமையிருக்கும் ஜனங்களை விடுதலையாக்க வேண்டியது உங்கள் கடமை.
ஆனால் இந்த காரியத்தில் உங்கள் மனக்கண்களே திறக்க படாத குருடராக இருந்தால் என்ன செய்வது.
சத்தியத்தை அறிந்தால் தானே விடுதலையாக்கபடுவீர்கள். உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையென்றால் என்ன செய்வது.??
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-1
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. 1 பேதுரு 4-11
நீங்கள் போதித்தால் வசனங்களின் படி போதியுங்கள்.ஜனங்களை பிரியப்படுத்த போதிக்காதீர்கள்.சாதியம் சாத்தானியம் தான்.அது விக்கிரகத்தின் ஆணி வேர்.அது ஒரு மார்க்க பேதம் மற்றும் பிரிவினை என்கிற பிசாசின் தந்திரம். அது தேவனுடைய பார்வையில் அருவருப்பான காரியம்.
உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை, அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள். மத்தேயு 22-30
என்று இயேசு சொன்னதை கவனித்தீர்களா?ஜனங்களை நித்திய வழிகளில் நடத்த அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களே, மனுஷருக்கு செம்மையாக தோன்றுகிற மரண வழிகளை விட்டு விலகுங்கள்.
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரிந்தியர் 6:16.
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:17
அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போய் அசுத்தமானதை தொடாதிருங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.மேலும்அதை பற்றி போதியுங்கள். ஆமென்