top of page

உலகம் உலகத்தாரை அறியும்  ஆனால் அவரை அறிந்து கொள்ளமாட்டாது!

தேவன் விரும்பும் படியான கிறித்தவ ஜீவியம் செய்வதற்கு நம் தொடர்ச்சியாய் பரிசுத்த ஆவினாலே நிரப்பப்பட்டால் ஒழிய அது சாத்தியமாகாது.  அதேபோல் நாம் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டிய பிரகாரமாய் ஊழியம் செய்திட ஆவியின் அபிஷேகம் இல்லாமலும் ஆவியின் வரங்களை பெறாமலும் முடியாது.  இயேசு ஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டியதாய் இருந்தது. 

 

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.  அப்போஸ்தலர் 10:38

 

அது போலவே, 2 கொரிந்தியர் 13 18 குறிப்பிடும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஜீவியத்திலும் நம்முடைய ஊழியத்திலும் அவருடைய சாயலுக்கு ஒப்பாய் நம்மை மறுமைப்படுத்தும் படியே வந்தார் என்பதை பார்க்கலாம்.

 

தேவன் நம்மை ஆவியினால் நிறைத்து கிறிஸ்துவின் சாயலான அவருடைய சுபாவத்தில் நம்மை மருரூப படுத்தவும் இயேசுவைப் போலவே ஊழியம் செய்வதற்கு நம்மை மாற்றுகிறார்.இயேசு பெற்ற அதே ஊழியம் நமக்கு இல்லை தான். ஆகவே அவர் தன்னுடைய ஊழியத்தில் செய்தவைகளை நாமும் செய்திட முடியாது. ஆனால் நாம் இயேசுவைப் போல ஊழியத்தில் அபிஷேகத்தில் நிறைந்து முழு ஆயத்தத்தோடு நாம் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற முடியும். இங்கு நம் பட்சத்தில் தேவையா இருப்பதெல்லாம் தேவன் எதிர்பார்க்கும் போதுமான தாகமும் விசுவாசமும் இருக்க வேண்டும். அப்போது நம் மூலமாக ஜீவ தண்ணீர் உள்ள நதிகள் புரண்டோடி விடும்.

 

பரிசுத்த ஆவியின் ஆளுகை இல்லாத  சபை குருடும் ஊமையும் நொண்டியுமாய் இருப்பதைப் போல பிரயோஜமற்றதாக இருக்கும். ஏனென்றால்? பரிசுத்த ஆவியானவரே ஒரு மனிதனின்குருடாக்கப்பட்ட மனக்கண்களை திறக்க முடியும், சத்திய ஆவியானவரே சகல சத்தியத்துக்குள் நம்மை நடத்த முடியும்.

 

சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்று இயேசு சொன்னார்.

 

இன்றைக்கு சபை ஜனங்கள் உலக ஆயியினால் நிரப்பபட்டபடியால் தேவனால் அருளப்பட்டவைகளை அறியமுடியவில்லை.

ஆவிக்குறிய காரியங்கள் அவர்களுக்கு பைத்தியமாக தோன்றும்.

 

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:17

 

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 1 கொரிந்தியர் 2:12
 

ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 1 கொரிந்தியர் 2:14

 

இன்றைக்கு நாம் உலகத்தோடு ஐக்கியம்  கொண்டு உலக காரியங்களில் மிகவும் தாகமாக இருப்பதினால்,  தேவனாலே   அருளப்படுகிறவைகளை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இயேசு ஒவ்வொரு நாள் காலையிலும் தன் பிதா சொல்வதை கவனித்து கேட்கும் பழக்கம் வைத்திருந்தது போல நாமும் அந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் தேவனை நெருக்கமாக அறிந்திருப்பது தான் நம்மை எல்லா சூழ்நிலைகளிலும் ஜெயம் பெற்றவர்களாய் மாற்றும் ஏனென்றால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவனிடத்தில் விடை உண்டு. நாம் அவரை கவனித்து கேட்டால் அந்த ஜெயம் கொள்கிற வழியை  நிச்சயமாய் சொல்லுவார். ஆனால் நாமும் உலகத்தோடு ஐக்கியம் வைத்திருப்பதினால் தேவனுடைய குரலை கேட்க முடியாதவர்களாய் உலக காரியங்களோடு ஒத்துப்போய் கடைசில தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு  அநேக சபைகள் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து உலகத்தோடு நெருங்கி உலக காரியங்களில் ஆர்வம் உள்ள சபைகளாய் மாறி விட்டன. எனவே தான் சத்தியத்தை சத்தியமாக பேச இந்த சபைகளில் தடை பண்ணுகிறார்கள். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் தங்கள் பாவத்தை குறித்தும் அநீதியை குறித்தும் கண்டித்து விடுவார் என்கிற பயம் தான்.

 

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன், நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல, ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. யோவான் 17-14. என்று இயேசு சொன்ன காரியத்தை விளங்கி கொண்டீர்களா?

 

இன்றைக்கு இயேசு உங்களை பார்த்து நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. யோவான் 17-16 என்று சாட்சி சொல்ல முடியுமா?

 

இன்றைக்கு நம்முடைய திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களில் நாம்,நாள் பார்த்து சாதி பார்த்து பணத்தை சார்ந்து உலகத்தானைப் போல விக்கிரக வழிப்பாட்டு பாரம்பரியங்களையே பின்பற்றுகிறோம்.
 

ஏனென்றால்? நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டும் பாரம்பரியங்களை பின்பற்றாவிட்டால் நம் குடும்பத்தார் நம்மை பகைப்பார்கள். நீங்கள் உலகத்தார் போல பாரம்பரியத்தை பின்பற்றினால் உலகத்தார் உங்களை பகைக்க மாட்டார்கள்.

 

உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. யோவான் 7-7

 

மனுஷருக்குள்ளே மேன்மையா எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது லூக்கா 16 15

 

இந்த உலகத்தில் மகா மேன்மையாக எண்ண படுவைகளுக்கு தேவனுடைய பார்வையில் எந்த மதிப்பும் இல்லை என்று மாத்திரமல்ல அவைகளை அவர் அருவருக்கமும் செய்கிறார். இவ்வாறு உலகத்தில் உள்ள எல்லா மதிப்பும் புகழும் தேவனுக்கு அருவருப்பாய் இருக்கிறபடியால் அவைகள் நமக்கும் அருவருப்பாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாக உண்டாயிற்று உலகமோ அவரை அறியவில்லை என்று  யோவான் 1-10 ல் சொல்லப்பட்டது போல இயேசுவை இன்னும் அறியாதவர்களாகவே இருக்கிறோம்.

 

இயேசுவை அறிந்தவன் அவர் உபதேசங்களுக்கு செவிக்கொடுப்பான். உலகத்தை சிநேகிப்பவவன் உலகத்துக்கு செவிக்கொடுப்பான். 
 

இன்றைக்கு பெரும்பாலோர் உலகப்பொருளுக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்து நாசமா போகிறார்கள், அதாவது உலகத்தின் ஆசை இச்சைகளுக்கு அடிமையாகி தேவனுக்கு ஊழியம் செய்கிற அநேகரை உலகம் சிநேகிக்கிறதை பார்க்கிறீர்களே.

 

நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும், நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

யோவான் 15-19

 

நீங்கள் தேவனை அறிந்திருந்தால் அவருடைய வார்த்தையை கைக்கொள்வீர்கள். ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன், அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன், அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன். யோவான் 8:55

 

தேவனை அறிந்தவன் அவரது உபதேசத்துக்கு கீழ்படிந்திருப்பான்.
 

ஆமென்.

bottom of page