top of page
Road Crossing

வேத வசனத்தை விசுவாசித்து அதற்கு கீழ்படிந்து வசனத்தை மகிமைப்படுத்து...

புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். அப்போஸ்தலர் 13-48

 

ஜனங்கள் வசனத்தை புறக்கணித்தபடியால் தங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராய் தீர்த்து கொண்டார்கள். அப் 13- 46

 

தேவனுடைய வசனம் ஆவியாயும் ஜீவனுமாயிருக்கிறது என்று இயேசு சொன்னார். மேலும், வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்.அதில் நித்திய ஜீவன் இருக்கிறது என்று குறிப்பிட்டார். 

 

அவருடையகட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறது.யோவான் 12-50

 

புறஜாதியார் வசனத்தை கேட்டு கீழ்படிந்து வசனத்தை மகிமைபடுத்துகிறார்கள். அப்13-48

 

ராஜியத்தின் புத்திரரோ சபையின் பாரம்பரிய சட்டத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பலர் தங்களை ராஜியத்தின் புத்திரர்கள் என்று எண்ணி கொண்டு உலகத்துக்கு அடிமையாயிருக்கிறார்கள். உலகத்தில் இருப்பவர்கள் சகல சத்தியத்துக்குள்ளும் நடத்தும் அந்த சத்திய ஆவியானவரை அறியவும் பெற்று கொள்ளவும் மாட்டார்கள்.இயேசு உலகத்தில் இருந்தார், உலகமோ அவரை அறியவில்லை.தான் உலகத்தானல்லாதது போல் தன் சீஷர்களும் உலகத்தார்கள் அல்ல என்றார். 

 

திரள் கூட்டம்,நாங்கள் யாரிடம் போவோம். நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடம் உண்டே என்று இயேசுவை நோக்கி வருகிறார்கள்.

 

மனிதன் உருவாக்கின சபை சட்டங்களுக்காக வேத வசனத்தை  அவமாக்கியவர்களை பார்த்து நீங்களும் போய் விட மனதாயிருக்கிறீர்களா?

என்று இயேசு வருத்தத்தோடு கேட்கிறார்.

 

நீங்கள் மகிமைபடுத்தி கனப்படுத்தி வருகிற  உங்கள் ஆலயத்துக்காகவும் அதன் தலைவர்களுக்காகவும்  இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை புறக்கணித்த்தீர்கள்.


 

இயேசு பிலாத்துவுக்கு பதில் கூறும் போது சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவே நான் பிறந்தேன்.சத்தியவான் எவனும் என் குரல் கேட்கிறான் என்றார்.   அவர்களுக்கு இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?  மத்தேயு 15-3

 

உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். மத்தேயு 15-6

 

தேவனால்கொடுக்கப்பட்ட வசனங்கள் தேவையில்லை என்று வசனத்தை அவமாக்குகிறீர்கள். நீங்கள் கடை பிடித்து வரும் உங்கள் சபை சட்ட திட்டங்களுக்கும் இயேசுவின் போதனைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நிதானித்து அறிய முடியவில்லையா?எந்த கீழ்படிதல் நம்மை பரலோகத்துக்கு கொண்டு செல்லும் என்று சொன்ன அந்த வசனங்களுக்கு கீழ்படியாமல் நாம் வஞ்சிக்கப்பட்டோம்.  சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யோவான் 3-21

 

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

யோவான் 8-32

 

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 12-6


 

தேவாலயத்திலும் பெரியவராகிய இயேசுவின் உபதேசம் முக்கியமா?மனிதன் உருவாக்கிய சபை பாரம்பரிய சட்ட திட்டம் முக்கியமா?

 

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12-48

 

 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. யோவான் 5-39


 

அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

1 யோவான் 2


 

நாம் இயேசுவை அறிந்திருக்கிறோம்.ஆனால் அவருடைய உபதேசங்களுக்கு கீழ்படியாமல் இருக்கிறோம்.உண்மை தானே.

நம் சபையின் சட்ட திட்டத்திற்காக அனந்த ஞானமுடையவராகிய, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த ஆலயத்திலும் பெரியவர் என்ற இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களை புறக்கணித்தோம். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள்.உண்மை அது தான்.தேவ வசனத்துக்கு கீழ்படியாதவர்களை பொய்யர்கள் என்று வேதம் சொல்கிறது.நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும்.இந்த பூமியில் சபையை மேன்மைபடுத்தி கிறிஸ்துவின் உபதேசங்கள் மற்றும் கட்டளைகளை புறக்கணித்து சந்திப்பின் நாளிலே இயேசுவை பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பிட போகிறீர்களா?


 

ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?

எபிரேயர் 12-25


 

நித்திய ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.  கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.  2 யோவான் 1:9

 

நாம் கிறிஸ்துவின் கட்டளைகள் தேவையில்லை என்று மறுதலிக்கிறோம். அவரது கட்டளைகளை  அற்பமாக நினைத்து தேவையில்லை என்று புறம் தள்ளி விட்டது தான் கொடிய வஞ்சகம்.அவர் சொன்ன கட்டளைகள் உபதேசங்கள் அவர் மாறாதவர் போல மாறாதது.அதன் ஒரு உறுப்பு கூட ஒழிந்து போவதில்லை.

 

 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். லூக்கா 16-17

 

மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.  1 பேதுரு 1-24

 

இப்படி பட்ட அழிந்து  போகிற மனிதனே! சாவாமையுள்ளவர் சொன்ன கட்டளை தேவையில்லை என்று புறக்கணிப்பாயோ!

 

அவர் என்ன சொல்லி விட்டு போனார் என்பதை கேள்!!!

 

இதோ சீக்கிரமாக வருகிறேன்.இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை கைக்கொள்கிறவன் பாக்கியவான்.வெளி 22-7

 

ஒருவன் இந்த வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் அவனுடைய பங்கை எடுத்து போடுவார். வெளி 22-19

 

 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.  2 தீமோத்தேயு 2-12

bottom of page