top of page
Using Mobile Phones

தேவனை நம்பாமல் இணையதளங்களை நம்பும் ஊழியக்காரர்கள்

இன்றைக்கு, சபையில் மற்ற ஊழியக்காரனுக்கு ஊழியம் கொடுப்பதற்காக, அந்த ஊழியக்காரரைகுறித்து அறிந்துகொள்ள இணையதளத்தில் அவருடைய செய்தி இருக்கிறதா என்று தேடுகிறார்கள். இதிலிருந்து என்ன அறியலாம் என்றால் இவர்களெல்லாரும் தேவ சித்தத்தை அறியாத மேலும் தேவனோடு தொடர்பில்லாத ஊழியக்காரர்கள். 

 

இவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்.!!?

இவருக்கு ஊழியம் கொடு, இவரை பயன்படுத்து  என்று பரிசுத்த ஆவியானவர் உங்களிடம்சொல்ல மாட்டாரா?. பரிசுத்த ஆவியானவர் சொன்னார் என்று பல காரியங்களை மேடையில் சொல்லுகிற இவர்கள் ஏன் ஒரு ஊழியக்காரருக்கு ஊழியம் கொடுப்பதற்காக இணையதளத்தை நாடுகிறார்கள். இணையதளத்தில் உங்கள் செய்தி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்? அந்த வீடியோ லிங்க் அனுப்புங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்று தேவனால் வழி நடத்தப்படாத ஊழியக்காரர்களினால் தான் தேவ சித்தம் சபைகளில் நடப்பதில்லை.

ஒரு ஊழியக்காரர் இப்படியாக சொன்னார்.. ஐயா என்னுடைய செய்திகளை  நான் இணையதளத்தில் பதிவிடுவதில்லை. நான் மறைந்திருந்து ஊழியம் செய்கிறேன். கர்த்தர் என்னை எங்கே போக சொல்லுகிறாரோ அந்த இடத்துக்கு போகிறேன் ஆனால் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உங்களுடைய செய்தி இருக்கிறதா அதை அனுப்புங்கள்.நாங்கள் உங்களை எங்கள் சபையில் பயன்படுத்துகிறோம்  என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு ஊழியர்களின் நிலைமை என்னவென்றால், தேவனை சாராமல் இணையதளத்தை நம்புகிற பரிதாபமான நிலைமைக்கு மாறி விட்டதை அறிந்து ரொம்ப வருத்தப்படுகிறேன் என்றார்.

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.   1 கொரிந்தியர் 2-5

பலர் தங்களுடைய பிரசங்கங்களை இணையதளத்தில் பதிவிடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சாட்சி உண்மை உள்ளவையாய் இருக்கிறதா என்றால்  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பலருடைய பிரசங்கங்கள் மனித நயவசனிப்பாகவும் பேச்சுத்திறமையினாலும் உண்டாயிருக்கிறது. பவுல் சொன்னது போல எங்களுடைய சுவிசேஷம் உங்களிடம் பரிசுத்த ஆவியின் நிச்சயத்தோடு வந்தது என்கிற  பிரசங்கங்கள்  இல்லை. 

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது. நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.  1 தெசலோனிக்கேயர் 1:5.


இதனால் இணையதளத்தை பார்த்து எல்லா பிரசங்கங்களையும் நம்பி வஞ்சிக்கப்படாதிருங்கள்.


பல ஊழியக்காரர்கள் மறைந்திருந்து ஊழியம் செய்கிறார்கள். வீண் புகழ்ச்சிக்கு முழங்கால் படியிடாத அவர்களை குறித்து தேவனே ஒரு நாள் சாட்சி கொடுப்பார். இவர்களுடைய பலன் பரலோக ராஜ்ஜியத்தில் மிகுதியாக இருக்கும்.

இதற்கு மாறாக சிலர் தங்கள் சுய பெருமைக்காகவும் சுய லாபத்துக்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காக மாத்திரம்ஊழியம் செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். ரோமர் 16:18.
 
ஆமென்..

 

bottom of page