top of page
most-helpful-bible-verses-4-resize.jpg

வேதாகமத்தில் சொல்லப்பட்ட காரியங்களை மாத்திரம் தான் செய்கிறோமா?

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

அதாவது  வேதாகமத்தில் நமக்குத் தெரியாத அறியாத காரியங்கள் நிறைய உண்டு.நிறைய காரியங்கள் எழுதப்படவில்லை.  அவைகளை சொன்னால் இந்த புத்தகம் தாங்காது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு, அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.   யோவான் 21-25

 

அப்படியெனில் இயேசு செய்த ஊழியங்களில் சொல்லப்படாத காரியங்கள் மற்றும்  மாதிரிகள் உண்டு.

 

இன்றைக்கு சிலர்  தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைத்து கொண்டு ஊழியங்களில் செய்யப்படும் அநேக காரியங்களை தவறு என்று பரிசேயர்களை போல குற்றம் சுமத்துகின்றனர்.  ஆனால், அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரம் அறிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

 

ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.

1 கொரிந்தியர் 8:2

 

இப்படி இருக்க தங்களை  வேத பண்டிதர்கள் என்று கருதுகிற சிலர் கூட ஜெபங்கள் மற்றும் பிசாசை துரத்துவது போன்ற ஊழியங்களுக்கு எதிராக  வாக்குவாதம் செய்கிறார்கள்.

ஒரு ஊழியக்காரர் இப்படியாக சொன்னார் பிசாசை பாதாளத்துக்கு துரத்த கூடாது அது தவறு என்பதாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் பிசாசுகள்  எங்களை பாதாளத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொண்டன.

 

தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.  லூக்கா 8-31

 

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பிசாசை பாதாளத்துக்கு அனுப்ப இயேசுவுக்கு அதிகாரம் உண்டு. இயேசு கிறிஸ்து ஒரு வேளை உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்து  அனுமதி கொடுத்தால் மாத்திரமே நாம் அவைகளுக்கு கட்டளையிடலாம். ஆனாலும், கன்மலையிடம் பேச சொன்னால் நாம் கன்மலையை அடிக்க கூடாது என்கிற கீழ்படிதலை மோசேயின் மூலம் கற்று கொள்ள வேண்டும். அதாவது தேவ சித்தத்துக்கு மாறாக எதையும் செய்ய கூடாது.

 

இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.  யோவான் 16-12

 

 இன்றைக்கு  சிலர் நீங்கள் செய்வது வேதாகமத்தில் சொல்லப்படவில்லை என்று பல காரியங்களை குறித்து  வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் நாமும் மிக கவனமாய் அடிப்படை சத்தியத்தை விட்டு விலகாதபடிக்கு வேதாகமத்தை நாம் கடைப்பிடிப்பது ரொம்ப முக்கியம். இன்றைக்கு இந்த நவீன உலகத்தில் அந்த காலத்தில் செய்யப்பட்ட ஊழியங்களுக்கு மாறாக அனேக காரியங்கள் புதிதாய் வந்திருக்கிறது.TV ஊழியம்,Media ஊழியம்,Tract  ஊழியம் இதெல்லாம் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை.சபைகளில் கூட வேதாகமத்தில் சொல்லப்படாததை நாம் இப்பொழுது செய்துகொண்டு வருகிறோம்.ஆனால் அடிப்படை சத்தியத்துக்கு மாறாக ஏதும் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

 

வேதாகமத்தில் சொல்லப்படாத இணையதளம் மற்றும் TV மூலம் சுவிசேஷம் அநேக தேசங்களுக்கு சொல்லப்படுகிறது. இவர்கள் வாக்குவாதம் செய்வதை  வைத்து பார்த்தால் இதெல்லாம் வேதாகமத்தில் சொல்லப்படாததால் இவைகள் பிசாசின் தந்திரம் என்றும் சொல்லுவார்கள்.

 

முன்பெல்லாம் TV என்பது பிசாசு என்று TPM ஊழியக்காரர்கள் சொன்னார்கள்.  ஆனால், இன்றைக்கோ TV மற்றும் இணையதளம் மூலமாக ஊழியமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

 

இந்த நாள்களில் நவீன காலத்துக்கு ஏற்ப பரிசுத்த ஆவியானவரும்  ஆலோசனைகளை சொல்லுகிறார், அதன் படி சுவிசேஷம் Media மூலம் பல தேசங்களுக்கு சொல்லப்படுகிறது.சுவிசேஷம் அறிவிக்கபட முடியாத இடங்களுக்கு கூட சுவிசேஷம் சென்று விடுகிறது.அநேக ரகசிய கிறிஸ்தவர்கள் Online  மூலம் சத்தியத்தை அறிகிறார்கள்.

 

முதன் முதலாக Key board சபையில் வந்த போது, அதை வாசித்தவர் பல instruments களை இதில் வாசிக்கலாம் என்றாராம். உடனை அங்கிருந்த ஒரு ஊழியக்காரர் இது லேகியோன் என்கிற பிசாசு.இதை உடனடியாக கொண்டு போய்விடுங்கள் என்றாராம்.

 

வேதாகமத்தில் சொல்லப்பட்டதை தான் செய்வோம் என்றால் இயேசு சொன்னப்படி உங்களுக்கு உண்டானவற்றை விற்று பிச்சை கொடுங்கள்.உனக்குஉண்டானவற்றை விற்று தரித்திரருக்கு கொடுங்கள்,

 

உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.  லூக்கா 11:41  என்று  இயேசுவால் சொல்லப்பட்ட இந்த காரியத்துக்கு நாம் ஏன் கீழ்படிவதில்லை, அதை பற்றி பேசுவதே இல்லை!!  இதே மாதிரி வேதாகமத்தில் சொல்லப்படாத அநேக காரியங்களை நாம் சபைகளிலும் ஊழியங்களிலும் செய்கிறோம். அவையெல்லாம் பிசாசின் ஆலோசனை அல்லவே. ஆனாலும் சில ஊழியக்காரர்கள் பிசாசின் நூதனமான உபதேசங்களுக்கு செவி கொடுத்து பிசாசின் கண்ணியில் விழுந்து போகிறார்கள்,  ஆவிக்குறியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான்.

 

அதுபோன்று,  பிசாசை துரத்துவதற்கு ஆவியானவரின் ஆலோசனையின் படி அநேக காரியங்களை  செய்கிறார்கள். அவைகள் வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

 

ஒரு தடவை ஒரு ஊழியக்காரனை பார்த்து பிசாசு என் கன்னத்தில் அறை நான் போய்விடுகிறேன் என்றது, அதற்கு அந்த ஊழியக்காரன் நான் உனக்கு கீழ்படிய வேண்டிய அவசியமில்லை.  இயேசுவின் நாமத்தினாலே போ என்று சொன்ன போது அந்த பிசாசு ஓடிவிட்டது.எனவே   பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி மாத்திரமே நாம் கீழ்படிந்து ஊழியம் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் எதை செய்ய சொல்கிறாரோ அதை மாத்திரமே செய்ய வேண்டும்.

 

சேலத்தில் காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளின் கிராமத்தில் நடந்த ஒரு பயங்கரமான ஒரு சம்பவம். அந்த கிராமத்தில் ஒரு கிராம தலைவனுக்கு குழந்தையே இல்லாமல் இருந்தது. ஒருநாள் அங்கு இருக்கக்கூடிய அந்த நாக கோவிலில்  நீ எனக்கு ஒரு ஆண்பிள்ளையை கொடுத்தால் நான் அவனை உனக்கு ஆயுள் முழுவதும் ஆராதனை செய்ய அற்பணிப்பேன். நீ ஒரு பெண் குழந்தையை தந்தால் அவளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று பொருத்தனை பண்ணி கொண்டான். அதன் பிறகு அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது அவள் வளர்ந்தவுடன் அவளை  வெள்ளிக்கிழமை  ஒரு வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டு விடுவான். அந்த நேரத்தில் அந்த கிராமத்தில் யாருமே வீட்டிலிருந்து வெளியே வரமாட்டார்கள். அப்பொழுது அந்த பாம்பு வந்து அந்த வீட்டுக்குள்ள வந்து அவனது மகள் அருகே படமெடுத்து நின்று கொண்டிருக்கும்.ஒரு நாள் அதே நாளில் ஒரு ஊழியக்காரர் அந்த கிராமத்துக்கு வந்து நடக்கும் சம்பவத்தை அறிந்து எல்லாரையும் வெளியே வர செய்து ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வர செய்து அதில் கையை வைத்து ஜெபித்து விட்டு அந்த பாம்பு இருக்கும் வீட்டிற்கு சென்றார், இதை அறிந்த கிராமத்து தலைவன் அவருக்கு எதிர்த்து நின்றான்.அவர் அவனை பொருட்படுத்தாமல் அந்த வீட்டின் கதவை திறந்தார் அங்கு அந்த சின்ன பெண் பயத்தோடு அழுது கொண்டிருந்தாள்.

 

இவரை பார்த்த பாம்பு இவரை நோக்கி சீறி பாய்ந்தது, இவர் பயப்படாமல் ஜெபித்த தண்ணீரை அதன் மேல் ஊற்ற அந்த பாம்பு அக்கினியால் பட்சிக்கப்பட்டு காணாமல் போனது. அதன் பிறகு அந்த பாம்பு காணப்படவே இல்லை. அன்றைக்கு அந்த கிராமமே இரட்சிக்கப்பட்டது.இந்த மாதிரி தண்ணிரை ஜெபித்து பயன்படுத்துவது வேதாகமத்தில் சொல்லப்படவில்லை! ஆனால் அந்த ஊழியக்காரர் அப்படி செய்த போது அற்புதம் நடந்தது, அந்த கிராமமே இரட்சிக்கப்பட்டு இன்றைக்கு தேவனை ஆராதிக்கிறார்கள்.

 

ஜெபித்த தண்ணீரை பிசாசின் மேல் தெளித்த போது ஐயோ எரிகிறது...தாங்கமுடியவில்லை என்று பிசாசு ஓடுகிறதை பார்த்திருக்கிறோம்.  அதே மாதிரி வேதாகமத்தில் எண்ணெய் பூசி ஜெபியுங்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.பல பரிசுத்தவான்கள் எண்ணையை வசனத்தை கொண்டு ஜெபித்து கொடுக்கும்போது அநேகருடைய வியாதி சுகமாகி இருக்கிறது.  

 

அது தேவ வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். 1 தீமோத்தேயு 4

 

ஒரு சபையில் ஒரு பிசாசு பிடித்த பெண்ணை கொண்டு வந்திருந்தார்கள், அங்கிருந்த ஊழியக்காரர் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று மெதுவாக சொன்னார்.உடனே அந்த பிசாசு அந்த வார்த்தையை மாத்திரம் சொல்லாதே என்று கெஞ்சியது. உடனே அவர் சபை ஜனங்களை பார்த்து எல்லாரும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்ல சொன்னார்.சபையினர் சொல்ல ஆரம்பித்தவுடன் பிசாசு இரண்டு காதுகளையும் பொத்தி கொண்டு இறுதியில் ஓடி விட்டது.

 

அதனால், எதையும் நம் குறைந்த அறிவினால் அற்பமாய் எண்ணி விதண்டாவாதம் செய்ய வேண்டாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு குருடனை தொட்ட போது அவன் சுகம் அடைந்தான் இன்னொரு இடத்தில் ஒரு குருடனை கிராமத்தில் இருந்து வெளியே கொண்டு போய்  எச்சினால் சேறு உண்டாக்கி அவன் கண்களில் பூசும் போது சுகம் அடைந்தான்.இந்த இடத்தில் ஏன் இயேசு இப்படி செய்தார். நீ பார்வையடைவாக என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? அவருடைய வழிகள் நம் வழிகள் அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

எலியா தீர்க்கதரிசி நாகமான் மீது கையை வைத்து ஜெபிக்காமல் யோர்தானில் ஏழு முறை மூழ்க சொன்னான், நாகமான் அதை அற்பமாக நினைத்தான் ஆனால், நாகமான் கீழ்படிந்த போது சுகமடைந்தான்.

ஒரு முறை ஒரு மந்திரவாதி ஒரு சபைக்கு வந்தார்.சபை முடிந்தவுடன் எல்லாரும் பேசி கொண்டிருந்தார்கள். அந்த ஊழியக்காரர் அவனுக்கு தெரியாமல் தண்ணீரை ஜெபித்து அவனுக்கு கொடுத்து குடிக்க சொன்னார், அவன் அவரை மேலும் கீழுமாய் பார்த்து இந்த தண்ணீரை நான் குடிக்க மாட்டேன் இதில் மகா பெரிய வல்லமை இருக்கிறது என்றான்.

 

எனவே விதண்டாவாதம் பண்ணாமல் ஊழியத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டதை தாழ்மையோடு செய்யுங்கள்.அது சரியில்லை இது வேதாகமத்தில் சொல்லப்படவில்லை என்று உங்கள் குறைந்த அறிவினால் விமர்சிக்க வேண்டாம்.

ஆனாலும் எந்த காரியத்தை செய்தாலும் அடிப்படை சத்தியத்தை விட்டு விலகாமல் ஒழுங்கும் கிரமமும் செய்ய ஒப்பு கொடுத்து தேவ நாமம் மகிமைபடும் படி பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி செய்வது நல்லது.

 

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.  ஏசாயா 55-8

 

கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?  ஏசாயா 40:13

 

வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.  கொலோசெயர் 3-17

ஆமென்.

bottom of page