top of page

வெளிப்புறமான வெள்ளையடிப்பு

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

தேவன் நம்முடைய இருதயத்தை பார்க்கிறார். ஆனால் மனுஷன் முகத்தை பார்க்கிறான். நாமோ, மனிதன் பார்க்கிற நம் முகத்தை அடிக்கடி பார்த்து கழுவியும் கொள்ளுகிறோம். ஆனால், இன்றைக்கு தேவன் ஆராய்ந்து அறிகிற நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக எப்படியிருக்கிறது என்பதை பற்றி கவலைப்படுவதேயில்லை.

 

இன்றைக்கு அநேகர்  தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக்கொண்டு தங்களை ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஸ்திரியை இயேசுவுக்கு முன்பாக கொண்டு வந்த போது அவளை அவர் ஆக்கினைக்குள்ளாய் தீர்க்கவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவளை கடிந்து கொள்ளாமல் அவள் தலை நிமிர்ந்து போகும்படி அவள் பாவத்தை மன்னித்து அவளை விடுதலையாக்கினார். சிலுவையில் அறையப்பட்ட அந்த கள்ளனும் தன் பாவத்தை ஒத்து கொண்ட போது அவனை பரதீசுக்கு அழைத்து சென்றார்.

இன்றைக்கு வெளிப்புறமான வெள்ளையடிப்புகளில் மாத்திரம் கவனம் செலுத்தி ஜனங்களை ஏமாற்றுகிற சபைகள் அநேகம். இவர்களுடைய வெளிப்புற பரிசுத்தமான  உடைகளை பற்றி சாத்தானே கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இயேசுவே இத்தகயவர்களை வெள்ளையடிக்கபட்ட கல்லறைகள் என்று கடுமையாக பேசினார்.

 

இன்று அநேக பிரசங்கிகள், கொலைகாரர்களும் விபச்சாரர்களும் நகை போடுகிறவர்கள் கூட நரகத்துக்கு போவார்கள் என்று பிரசங்கிக்கிறார்கள். ஆனால் இயேசுவோ கொலையையும் விபச்சாரத்தையும் விட மாய்மாலமும் ஆவிக்குரிய பெருமையும் பல மடங்கு தேவனுடைய பார்வையில் மோசமானது என்பதை சுட்டி காட்டினார்.நீங்கள் வெறும் உதடுகளினாலே என்னை ஆராதிக்கிறீர்கள்.உங்கள் இருதயமோ வெகு தூரமாக இருக்கிறது என்றார். இயேசு ஜனங்களின் இருதயத்தை பார்த்தார். அவர்களிடம் இருந்த வெளித்தோற்றமான மார்க்க வெள்ளை அடிப்புகளை குறித்து அவர் ஒரு துளியும் அக்கறை காட்டவே இல்லை.

தேவன் தங்கள் ஆவிக்குறிய உன்னத நிலையை பற்றி பேசி கொள்பவர்களின் மேல் நோக்கமாயிருக்கவில்லை. தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி இருதயத்தில் நொறுங்குண்ட ஜனங்களின் மேல் நோக்கமாயிருக்கிறார். தங்கள் பார்வைக்கு யாரெல்லாம் வெளிப்புறமான அடையாளங்களோடு  நீதிமான்களாக இருக்கிறார்களோ, அவர்கள் இரட்சிப்பை காத்து கொள்வது அரிது.

 

அந்த பரிசேயர்கள் அந்த ஸ்திரியின் மீது கல்லெறிய ஆயத்தமாக இருந்தார்கள்.ஆனால் தங்கள் இருதயத்தில் கொண்டிருந்த பாவத்தை பார்க்கவில்லை. இன்றைக்கு இத்தகயவர்கள் தங்கள் இருதயத்தில் உள்ள மாயமாலத்தை பார்க்காமல் பிறரை குற்றம் சுமத்தி கொண்டேயிருக்கிறார்கள். இவர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் அதாவது வெளியே சுத்தமாகவும் உள்ளே நாற்றமடிக்கின்ற சுபாவத்தை உடையவர்களாகவும் இருப்பதை இயேசு சுட்டி காட்டினார். இவர்களை போன்றவர்களை பார்த்து தான் மாயக்காரனே பாத்திரத்தின் வெளிப்புறம் சுத்தமாகும் படி பாத்திரத்தின் உட்புறத்தை முதலாவது கழுவு என்றார். இன்றைக்கு நாம் முதலாவதாக எதை கழுவி கொண்டிருக்கிறோம்.

 

எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு, எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.  எரேமியா 4-14.

bottom of page