top of page

கர்த்தர் தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்தும் முறைகள்

1.தூதர்கள் வழியாக

  யோபு 33:19-25, எபி 2:2,3

2.கிறிஸ்தவ அனுபவங்களின் வழியாக

  மத் 8:13-16, பிலி 3:15, எபே1:17

3.ஆழ்ந்த தூக்கத்தின் போது

  ஆதி 15:12-16, யோபு 4:12-16

4.நேரடியாகப் பேசுவதின் மூலமாக

  ஆதி 3:8-13, எரே 1:4-15, எசே 6:1-3

5.சந்திப்பதன் வழியாக

  ஆதி 3:8, 8:1, லூக்கா 2:26

6.கனவுகளின் வழியாக

  ஆதி 20:3-7, மத் 1:20,21

7.வரலாற்று நிகழ்வுகளின் வழியாக

  யாத் 20:1,2, உபா 6:5-12

8.மனித ஏவுதல் மற்றும் அதிகாரம் வழியாக

  ஆதி 14:18-20, யாத் 18:13-24

9.கிறிஸ்து அவதாரமானதன் வழியாக

  மத் 11:25-27, எபி 1:1-3

10.மனித சிருஷ்டிப்பின் வழியாக

  ஆதி 1:26,27, யாக் 3:9

11.அற்புதங்கள் வழியாக

  யாத் 4:2-9, அப் 2:22

12.மனித வரையறைகள் வழியாக

  யோபு 36:24-33, அப் 14:15-17

13.தீர்க்கதரிசிகள் வழியாக

  யாத் 4:11-16, உபா 18:15-22, ரோம 1:1-4

14.ஆன்மீக அனுபவங்களின் வழியாக

  ஏசா 45:14, தானி 2:47

15.பரிசுத்த வேதாகமத்தின் வழியாக

  சங் 1:1-3, ஏசா 30:8, லூக்கா 24:27

16.வேறு உருவத்தில் தோற்றமளித்தல்கள் வழியாக

  ஆதி 19:7-14, நியா 2:1-5

17.ஊரீம் தும்மீம் வழியாக

  யாத் 28:30, எண் 27:21, 1சாமு 28:6

18.தரிசனங்கள் வழியாக

  ஆதி 15:1-2, எண் 12:6, 1சாமு 3:1

எல்லாவற்றிகும் மேலாக இந்த நாட்களில் நம்மூலமாக அதாவது இந்த மறைவான மன்னாவின் மூலமாக தம்மை தேவன் வெளிப்படுத்த சித்தமாய் இருக்கிறார் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

 

________________________________________________________________________________________________

கர்த்தருடைய பரிசுத்தப் பர்வதத்திற்கு செல்ல விரும்புகிறவர்கள்

1.உத்தமனாய் நடக்க வேண்டும்

2.நீதியை நடப்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்

3.மனதார சத்தியத்தை பேசுகிறவர்களாக மாற வேண்டும்

4.தன் நாவினால் யாருக்கு விரோதமாகவும் புறங்கூறக் கூடாது

5.தன் தோழனுக்குத் தீங்கு செய்யக் கூடாது

6.தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமல் இருக்க வேண்டும்

7.கர்த்தருக்குப் பிரியமில்லாதவன் நமக்கும் அருவருப்பாய் இருக்க வேண்டும்

8.கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை கனம்பண்ண வேண்டும்

9.உண்மையாக ஆணையிட்டத்தில் தனக்கு நஷ்டம் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

10.தனக்கு கர்த்தர் தந்த ஆசீர்வதாங்களை வட்டிக்கு கொடுக்க கூடாது.

11.குற்றமில்லாதவனை குற்றப்படுத்தும்படியாக பரிதானம் வாங்கக் கூடாது

இப்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களே கர்த்தருடைய பர்வதத்திற்கு ஏறிச் செல்ல முடியும்.

                                 சங்கீதம் 15 ம் அதிகாரம்

 

கிருபையின் மூலம் வரும் சிலாக்கியங்கள்

1. நோவா கிருவையின் மூலம் கர்த்தருடைய அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டார் – ஆதி 6:8[ முழு அதிகாரம் ]

2.மோசே கிருபையின் மூலம் தம்முடைய ஜனங்களுக்கு இளைப்பாறுதலையும் தான் கர்த்தரையும் தரிசிக்கவும் முடிந்தது – யாத் 33:12-23

3.மோசே கிருபையின் மூலம் கர்த்தரிடம் இருந்து பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டார் – யாத் 34:9.

4.எஸ்றாவும் அவனுடைய ஜன்ங்களும் கிருபையின் மூலம் அடிமைத்தனத்திலிருந்து உயிர் பெற்றனர் – எஸ்றா 9:8.

5.எஸ்தர் கிருபையின் மூலம் ராஜாவினிடத்தில் இருந்து தயையும் பட்சமும் பெற்றுக் கொண்டாள் – எஸ்தர் 2:17.

6.தம்முடைய பிள்ளைகளுக்கு கிருபையின் மூலம் இயேசு கிறிஸ்து பிதாவை காண்பித்துக் கொடுத்தார் – யோவான் 1:14.

7.அப்போஸ்தலர்கள் கிருபையின் மூலம் கர்த்தருக்கு பலமான சாட்சிகளாக நின்றனர் – அப்போஸ்தலர் 4:33.

8.கர்த்தருடைய கிருபையின் மூலம் பர்னபா ஊழியத்தில் மிகுந்த சந்தோஷம் அடைந்தார் – அப் 11:23.

9.கர்த்தருடைய கிருபை ஜனங்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைப்படுத்தியது – அப் 13:43.

10.கர்த்தருடைய கிருபை அற்புதங்களையும் அடையாளங்களையும் தம்முடைய ஊழியக்காரர்கள் செய்யும் படி செய்தது – அப் 14:3.

11.கர்த்தருடைய கிருபை இரட்சிப்பைத் தந்தது – சப் 15:11.

12.கர்த்தருடைய கிருபை ஜனங்களுக்கு சுதந்தரத்தை தந்தது – அப் 20:32.

13.கர்த்தருடைய கிருபை ஜனங்களை விசுவாசத்திற்கு கீழ்ப்படியச் செய்தது – ரோமர் 1:7.

14.கர்த்தருடைய கிருபை ஜனங்களை நீதிமான்களாக மாற்றியது கர்த்தருடைய கிருபை மீட்பைப் பெற்று தந்தது – ரோமர் 3:24.

15.கர்த்தருடைய கிருபை விசுவாசத்தை உருவாக்கி அதன் மூலம் நம்மை வாக்குத்தத்தின் பிள்ளைகளாக மாற்றியது – ரோமர் 4:16.

16.கர்த்தருடைய கிருபை கர்த்தரைக் குறித்து மேன்மைப் பாராட்டச் செய்கிறது – ரோமர் 5:2.

17.கர்த்தருடைய கிருபை ஜீவனைப் பெற்றுத் தருகிறது – ரோமர் 5:17.

18.கர்த்தருடைய கிருபை நித்திய ஜீவனை ஆட்கொள்ளச் செய்கிறது – ரோமர் 5:21.

19.கர்த்தருடைய கிருபை நம்மை பாவம் மேற்கொள்ளாதப்படிச் செய்கிறது – ரோமர் 6:14.

20.கர்த்தருடைய கிருபை நம்மை தெளிந்த எண்ணமுள்ளவர்களாய் மாற்றியது – ரோமர் 12:3.

21.கர்த்தருடைய கிருபை நம்மை தெரிந்து கொள்ளுதலின் பட்டியலில் இணைக்கிறது – ரோமர் 11:5.

22.கர்த்தருடைய கிருபையின் மூலம் அப்.பவுல் புத்தியுள்ள சிற்பாசாரியாக மாறினார் – 1கொரி 3:10.

23.கர்த்தருடைய கிருபை நம்மை கபடமில்லாமல் திவ்விய உண்மையோடு நடக்கச் செய்கிறது – 2கொரி 1:12.

24.கர்த்தருடைய கிருபை நம்முடைய தரித்திரத்தை எடுத்து விட்டு நமக்கு ஐசுவரியத்தைத் தருகிறது – 2கொரி 8:9.

25.கர்த்தருடைய கிருபை நம்மை எல்லாவற்றிலும் சம்பூரணமுடையவர்களாகவும், நற்கிரியைகளில் வளருகிறவர்களாகவும் மாற்றுகிறது – 2கொரி 9:8

------------------------------------------------------------------------

கர்த்தர் எப்பொழுது நம்மோடு கூட வருகிறார்

 

 

1.  கர்த்தருடைய வார்த்தையின் படி நடக்கும் போது

2.  கர்த்தருடைய கற்பனைகளின் படி செய்யும் போது

3.  கர்த்தரை தேடிச் செல்லும் போது

4.  கர்த்தரை நம்பும் போது

5.  கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாய் வாழும் போது

6.  கர்த்தரிடத்தில் உண்மையாய் இருக்கும் போது

7.  கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கும் போது

8.  கர்த்தரை துதிக்கும் போது

9.  கர்த்தருடைய நீதியின் வழியில் செல்லும் போது

10. கர்த்தரை கனம் பண்ணும் போது

11. கர்த்தருடைய ஆவியை பெற்றுக் கொள்ளும் போது

12. கர்த்தரிடத்தில் பசியாய் இருக்கும் போது

13. கர்த்தரிடத்தில் தாகமாய் இருக்கும் போது

13. கர்த்தருடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் போது

14. கர்த்தருடைய பிள்ளையாய் மாறும் போது

15. கர்த்தருக்காக முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும் போது

16. கர்த்தருக்காக சோதனைகளை சகிக்கும் போது

17. கர்த்தர் சொன்ன நன்மையை செய்யும் போது

18. கர்த்தரை ஆவியோடு தொழுது கொள்ளும் போது

19. கர்த்தரிடத்தில் மனம் திரும்பும் போது

20. கர்த்தரிடத்தில் பாவங்களை அறிக்கை செய்யும் போது

 

 

 

பரிசுத்த ஆவியானவரின் வேலைகள் என்ன?

  • ஆசாரிய ஊழியத்தை செய்யும் நபரைத் தேர்வு செய்கிறார். யாத்திராகமம்

  • கர்த்தருடைய ஆலயத்திற்கு வேண்டிய காரியங்களை செய்யும்படியாக ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளுகிறார். யாத் 31:2-5

  • ஞான இருதயத்தை தருகிறார்- யாத் 31:6

  • கர்த்தருடைய மகிமையை வெளிப்படுத்துகிறார்.- யாத் 19:18

  • தம்முடைய ஜனங்களை விசேஷித்தவர்களாய் மாற்றுகிறார். யாத் 33:16

  • கர்த்தருடைய நாமம் என்னவென்பதை வெளிப்படுத்துகிறார். யாத் 34:6

  • கெர்ச்சிக்கிற பாலசிங்கத்தை ஆட்டுக் குட்டியைப் போல கிழித்துப் போடுகிறார். நியாயாதிபதிகள் 14:5,6

  • ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார். 1சாமு 10:1

  • தீர்க்கதரிசினம் சொல்ல வைக்கிறார், வேற்று மனுஷனாய் மாற்றுகிறார் அதாவது தேவ மனுஷனாக மாற்றுகிறார். 1சாமு 10:6

  • தம்முடைய ஜனங்களுக்காக வைராக்கியம் கொள்ளச் செய்கிறார். 1சாமு 11:1-15

  • இரட்டிப்பான அபிஷேகத்தைக் கொடுக்கிறார். 2இராஜா 2:9

  • சுத்த இருதயத்தைத் தருகிறார்.

  • உள்ளத்தை புதுப்பிக்கிறார்

  • இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் தருகிறார்

  • உற்சாகத்தை தந்து தாங்குகிறார்

  • பரிசுத்தத்தை தருகிறார். சங் 51:10,11,12

  • சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறார்

  • இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டுகிறார்

  • சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூறுகிறார்

  • கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்த்தலையும் கூறுகிறார்

  • கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும்

  • தம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறுகிறார்

  • துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்கிறார்

  • துயரப்பட்டவர்களை சீர்ப்படுத்துகிறார்

  • சாம்பலுக்குப் பதிலாக சிங்காரத்தையும்

  • துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும்

  • ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கிறார். - ஏசாயா 61:1,2,3

  • எல்லாவற்றையும் செய்து முடிக்கிறார். சகரியா 4:6

  • தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு தகுதிப் படுத்துகிறார். யோவான் 3:5

  • தாகத்தை தீர்க்கிற நித்திய நீரூற்றாயிருக்கிறார். யோவான் 4:14

  • தேவனுடைய நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும். சந்தோஷப்படுத்துகிறார். சங் 46:4

  • பெலனைக் கொடுக்கிறார். அப் 1:8

  • சாட்சியாக மாற்றுகிறார். அப் 1:8

  • வெவ்வேறு பாஷைகளைப் பேச செய்கிறார். அப் 2:14-23

  • இயேசுவைக் குறித்து பேசச் செய்கிறார். அப் 2:14 -23

  • வெளிப்பாடுகளைக் கொடுக்கிறார். அப் 2:24-32

  • சப்பாணியை எழுந்து நடக்கச் செய்கிறார். அப் 3:6,7

  • மரணத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் உயிர்ப்பிக்கிறார். - அப் 6:63

  • தேற்றரவாளனாய் செயல்படுகிறார். யோவான் 14:16

  • இயேசு சொன்ன எல்லா காரியங்களையும் ஞாபகப்படுத்துகிறார் மற்றும் போதிக்கிறார். யோவான் 14:26

  • பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:8

  • சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துகிறார். யோவான் 16:13

  • தேவ அன்பைத் தருகிறார். ரோமர் 5:5

  • நம்மை வெட்கப்படுத்தமாட்டார். ரோமர் 5:5

  • ஜீவனையும் சமாதானத்தையும் தருகிறார். ரோமர் 8:6

  • ஆவிக்குரியவைகளைச் சிந்திக்க வைக்கிறார். ரோமர் 8:5

  • புத்திரசுவிகாரத்தின் ஆவியைத் தருகிறார். ரோமர் 8:15

  • நமக்காக வேண்டுதல் செய்கிறார். ரோமர் 8:26

  • விடுதலையைத் தருகிறார். 2கொரி 3:17

  • நம்மை ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளையாய் மாற்றுகிறார். 2கொரி 6:16.

கர்த்தருக்கு எப்படி காத்திருக்க வேண்டும்?

1.கர்த்தருடைய கற்பனைகளின் படி

2.கர்த்தருடைய நியமங்களின் படி

3.குற்றமற்றவர்களாக

4.நீதியுள்ளவர்களாக

5.கர்த்தருக்கு ஊழியம் செய்து

6.பிரதிபலனை எதிர்பாராமல் காத்திருக்க வேண்டும்.  -      லூக்கா 1:6,7,8,9

7.நீதியும் தேவபக்தியும் உடையவர்களாக

8.இஸ்ரவேலின் ஆறுதல் வரும்படியாக

9.தேவாலயத்திலே காத்திருக்க வேண்டும்

10.பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்களாக காத்திருக்க வேண்டும்.  -    லூக்கா 2:25,26,27

11.தேவ சமுகத்தை விட்டு நீங்காமல் காத்திருக்க வேண்டும்.

12.இரவும் பகலும் உபவாசத்தோடு

13.ஜெபம் பண்ணி காத்திருக்க வேண்டும்

14.ஆராதனை செய்து கொண்டு காத்திருக்க வேண்டும்

15.எந்நேரமும் கர்த்தரை புகழ்ந்து பாடிக் கொண்டு காத்திருக்க வேண்டும்

16.மற்றவர்களுக்கு கர்த்தரைக் குறித்து பேசிக் கொண்டு காத்திருக்க வேண்டும்

17.பரிசுத்தத்தோடு காத்திருக்க வேண்டும். -   ஏசாயா 2:36,37,38

18.உத்தமமாய் காத்திருக்க வேண்டும்

19.கீழ்ப்படிதலோடு காத்திருக்க வேண்டும்

20.கர்த்தருடைய கட்டளைகளின் படி செய்து காத்திருக்க வேண்டும்

21.கர்த்தருடைய வேலையைச் செய்து கொண்டு காத்திருக்க வேண்டும்

22.எல்லாவற்றையும் விட்டு விட்டு காத்திருக்க வேண்டும். -    ஆதியாகமம் 6,7 ஆம் அதிகாரம்

23.எல்லாவற்றையும் விட்டு விட்டு காத்திருக்க வேண்டும் [ கர்த்தருக்காக எல்லாவற்றையும் இழக்க முன்வர வேண்டும் ]

24.திறப்பின் வாசலில் நின்று கொண்டு காத்திருக்க வேண்டும்.

24.உலகத்தின் மேல் ஆசையில்லாமல் காத்திருக்க வேண்டும்

25.கர்த்தர் மேல் சந்தேகப்படாமல் காத்திருக்க வேண்டும்

26.விசுவாசத்தோடு காத்திருக்க வேண்டும்

27.பிசாசோடு எதிர்த்து நிற்கிறவர்களாய் காத்திருக்க வேண்டும்

28.பெற்றுக் கொள்கிறவர்களாய் காத்திருக்க வேண்டும்

29.கர்த்தரை நேசிக்கிறவர்களாய் காத்திருக்க வேண்டும்

30.சோதனையை சகித்துக் கொண்டு காத்திருக்க வேண்டும்

31.மனக்கசந்து மிகவும் அழுது ஜெபம் பண்ணி கர்த்தரை நோக்கி காத்திருக்க வேண்டும்

32.பொருத்தனையோடு கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும்

33.இருதயத்திலே பேசிக் கொண்டு காத்திருக்க வேண்டும்

34.கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றி கொண்டு காத்திருக்க வேண்டும்

35.அதிக நேரம் காத்திருக்க வேண்டும்.     - சாமுவேல் 1:10-16

36.ஒரு மனதோடு காத்திருக்க வேண்டும்

37.ஜெபத்திலும் வேண்டுதலிலும் விசுவாசிகளோடு கூட காத்திருக்க வேண்டும்

38.ஒரே இடத்தில் காத்திருக்க வேண்டும்

39.பட்சபாதமில்லாமல் காத்திருக்க வேண்டும்

40.ஒரே காரியத்திற்காக காத்திருக்க வேண்டும். -    அப்போஸ்தலர் 1 மற்றும்2 அதிகாரம்

_______________________________________________________________________________

காத்திருக்குதல் தந்த மகத்துவம்

 

 

1.ஆபிரகாம் காத்திருந்தார் இதனால் அவர் விசுவாசத்தின் பலனாகிய ஈசாக்கைப் பெற்றுக் கொண்டார்

2.நோவா காத்திருந்தார் இதனால் இரட்சிப்பின் பேழையை பெற்றுக் கொண்டார்

3.அன்னாள் காத்திருந்தாள் இதனால் இஸ்ரவேலை நியாயந்தீர்க்கிற சாமுவேல் தீர்க்கதரிசியை பெற்றாள்

4.மோசே காத்திருந்தார் இதனால் மகிமையின் ஊழியத்தை பெற்றார்

5.தாவீது காத்திருந்தார் இதனால் கர்த்தருடைய இருதயத்தில் இடம் பெற்றார்

6.யோசபாத் காத்திருந்தார் இதனால் கர்த்தர் அவருக்காக யுத்தம் செய்தார்

7.யோசுவாவும் அவனுடைய கூட்டத்தாரும் காத்திருந்தார்கள் இதனால் அவர்கள் முன் நின்ற எரிகோ வீழ்ந்தது.

8.யோசேப்பு காத்திருந்தார் இதனால் அவருடைய குடும்பமும் எகிப்தும் பஞ்சத்தினால் சாகாமல் காப்பாற்றப்பட்டனர்.

9.யோபு காத்திருந்தார் இதனால் இரட்டிப்பான நன்மை கிடைத்தது

10.சீஷர்கள் காத்திருந்தனர் இதனால் பரிசுத்த ஆவியை பெற்றனர்

11.சகரியாவும் எலிசபெத்தும் காத்திருந்தனர் இதனால் யோவான்ஸ்நானன் என்கிற வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டார்கள்

12.அப்.பவுல் காத்திருந்தார் இதனால் பட்டணங்களை பிடித்து அடக்குகிற வலிமையை [ சுவிசேஷம் ] பெற்றுக் கொண்டார்

இதேபோல நீங்களும் நானும் காத்திருக்கும் போது என்றென்றைக்கும் நம்மோடு இருக்கிற

இம்மானுவேல் கிடைப்பார்.

 

_______________________________________________________________________

 

கர்த்தருடைய மகிமை என்ன செய்கிறது?

 

1.கர்த்தருடைய மகிமை மூலம் பலிபீடம் சுத்தப்படுத்தப்படுகிறது – யாத் 29:43

2.மகிமை மூலம் அடையாளங்கள் வெளிப்படுகிறது – எண்ணாகமம் 14:22

3.கர்த்தர் தம்மை உயிருள்ளவர் என்பதை காண்பிப்பதற்காக மகிமை வெளிப்பட்டது – உபாகமம் 5:24

4.பாவ நோய்கள் குணமாகிறது – 1 சாமுவேல் 6:5

5.ஆலயத்தை மகிமைப் படுத்துகிறது – 1இராஜாக்கள் 8:11

6.மனுஷனுக்கு சகல அதிகாரத்தையும் தருகிறது – சங் 8:6

7.பயத்தைத் தருகிறது [ கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைத் தருகிறது – ஏசாயா 2:10, மற்றும் 59:19

8.கர்த்தருடைய மகிமை பிரகாசிக்க வைக்கிறது – ஏசாயா 60:1

9.கர்த்தருடைய கையில் நம்மை அலங்காரமான கிரீடமும் மற்றும் இராஜமுடியுமாய் மாற்றுகிறது – ஏசாயா 62:3

10.சிங்காசனத்தை மகிமையாக மாற்றுகிறது – மத் 19:28

11.வஸ்திரத்தை வெண்மையாக மாற்றுகிறது – லூக்கா 9:29

12.பிரவேசிக்கச் செய்கிறது – லூக்கா 24:26

13.அற்புதத்தைச் செய்கிறது – யோவான் 2:11

14.நியாயத்தீர்ப்பு செய்கிறது – யோவான் 8:50

15.விசுவாசத்தை ஊட்டுகிறது – யோவான் 12:41,42

16.உலகத்தின் கண்களை மூடச் செய்கிறது – அப் 22:11

17.நித்திய ஜீவனைத் தருகிறது – ரோமர் 2:7

18.நம்பிக்கையைத் தருகிறது – ரோமர் 4:20,21

19.கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைத் தருகிறது

20.வாக்குத்தத்தங்களை ஆம் என்றும் ஆமென் என்றும் மாற்றுகிறது [செய்கிறது] – 2கொரி 1:20

21.சிறந்த ஊழியத்தைத் தருகிறது – 2கொரி 3:10

22.ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை நிலைத்திருக்க செய்கிறது – 2கொரி 3:10

23.நம்மை மறுரூபமாக்குகிறது – 2கொரி 3:18

24.சுவிசேஷத்திற்கு ஒளியைத் தருகிறது – 2கொரி 4:6

25.மீட்பைத் தருகிறது – எபேசியர் 1:14

26.குறைவுகளை நிறைவாய் மாற்றுகிறது – பிலி 4:19

27.வாடாத கிரீடத்தைத் தருகிறது – 1பேதுரு 5:4

28.மரித்தோரை எழுப்பச் செய்கிறது – 1பேதுரு 1:21

29.பூமியை பிரகாசிக்கச் செய்கிறது – வெளி 18:1

30.பரலோகத்திற்கு விளக்காயிருக்கிறது – வெளி 21:23

31.நல்ல பாத்திரத்தை உருவாக்குகிறது – எபிரெயர் 3:3

32.சகலத்தையும் மனுஷனுடைய பாதத்திற்கு கீழ்ப்படித்துகிறது – எபிரெயர் 2:7

 

 

கர்த்தருடைய மகிமை எங்கே எவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது?

 

  • கர்த்தருடைய மகிமை ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது – ஆதி 1:2

  • கர்த்தருடைய மகிமை எகிப்தில் வெளிப்பட்டது – ஆதி 45:13

  • காலையில் தேவனுடைய மகிமையை பார்க்க முடிகிறது – யாத் 16:7

  • கர்த்தருடைய மகிமை மேகத்தில் வெளிப்பட்டது – யாத் 26:10

  • கர்த்தருடைய மகிமை சீனாய் மலையில் தங்கியிருந்தது – யாத் 24:16

  • கத்தருடைய மகிமை மலையின் கொடுமுடியிலே பட்சிக்கிற அக்கினிப் போல் இருந்தது – யாத் 24:17

  • கர்த்தருடைய மகிமை ஆசாரிப்புக் கூடாரத்தை மூடினது – யாத் 40:34

  • கத்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது – லேவி 9:23

  • பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் – எண்ணாகமம் 14:21

  • கர்த்தருடைய மகிமை தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போல் இருக்கிறது – உபாகமம் 33:17

  • கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று – 1இராஜாக்கள் 8:11

  • ஜாதிகளுக்குள் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது – 1நாளாகமம் 16:24

  • மகிமை கர்த்தரிடத்தில் இருக்கிறது – 1நாளாகமம் 29:11

  • கர்த்தருடைய மகிமை ஆலயத்தில் இருக்கிறது – 2 நாளாகமம் 7:3

  • வானங்களுக்கு மேலாக கர்த்தருடைய மகிமை இருக்கிறது – சங்கீதம் 8:1

  • தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் மகிமை இருக்கிறது – சங்கீதம் 145:12

  • கர்த்தருடைய மகிமை அவருடைய வஸ்திரத் தொங்கல் மூலமாய் வெளிப்பட்டது – ஏசாயா 6:1

  • ஆலயமாக வெளிப்பட்டது – ஏசாயா 60:7

  • தேவனாயிருக்கிறது – ஏசாயா 60:19

  • பிரகாசமாய் வெளிப்படுகிறது – ஏசாயா 66:11

  • பிதாவின் மூலம் வெளிப்படுகிறது – மத் 16:27

  • மறுஜென்ம காலத்தில் வெளிப்படுகிறது – மத் 19:28

  • மனுஷகுமாரனுடைய வருகையின் போது வெளிப்படுகிறது – மத் 25:31

  • கர்த்தருடைய தூதர்கள் மூலமாய் வெளிப்படுகிறது – லூக்கா 2:9

  • உன்னதத்தில் வெளிப்படுகிறது – லூக்கா 19:38

  • ஆபிரகாமிடத்தில் வெளிப்பட்டது – அப் 7:2

  • ஒளியாய் வெளிப்பட்டது – அப் 22:11

  • இஸ்ரவேலரிடத்தில் வெளிப்பட்டது – ரோமர் 9:4

  • கர்த்தர் உருவாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் வெளிப்படுகிறது – ரோமர் 9:23

  • புருஷனிடத்தில் வெளிப்படுகிறது – 1கொரி 11:7

  • மோசேயின் முகத்தில் வெளிப்பட்டது – 2கொரி 3:7

  • மனுஷருடைய இருதயங்களில் வெளிப்பட்டது – 2கொரி 4:6

  • தேவபக்திக்குரிய இரகசியமாய் இருக்கிறது – 1தீமோ 3:16

இரக்கமில்லாதவர்களுக்கு கிடைக்கும் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு

வேதம் சொல்லுகிறது, ஏனென்றால் இரக்கஞ் செய்யாதவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் – யாக்கோபு 2:13

ஆகவே தேவன் நமக்கு காண்பிக்கிற இரக்கத்தை அசட்டை செய்யாமல் அவர் நம்மில் காண்பித்த அதே அன்பை நம்முடைய வாழ்க்கையில் கிரியைகளில் காண்பிக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் நியாயத்தீர்ப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

ஒரு காரியத்தை எப்பொழுதும் இருதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதுஎன்னவென்றால் எங்கே அன்பு உண்டோ அங்கே நம்முடைய இயேசு கிறிஸ்து இருக்கிறார்.

ஆனால் வேதத்தில் சில கதாபாத்திரங்கள் தேவனுடைய இரக்கத்தை அசட்டைப்பண்ணினார்கள் இதனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை பின்வருமாறு பார்க்கலாம்

1.  கர்த்தர் ஜனங்களை இரண்டு விதமாக பிரித்தார் இரு கூட்ட ஜனங்களை வலதுபக்கத்திலும் இன்னும் ஒரு கூட்டத்தை இடதுபக்கத்திலும் நிற்கும்படிச் செய்தார். வலது பக்கத்தில் நின்ற கூட்டத்திற்கு தேவன் நல்லத் தீர்ப்பைக் கொடுத்தார் ஆனால் இடது பக்கத்தில் நின்ற ஜனங்களுக்கோ சாபமும் நித்திய அக்கினியும் அவர்களுக்கு தீர்ப்பாக அமைந்தது.

இதற்குக் காரணம் என்னவென்று பார்ப்பீர்களானால் இவர்களை தேவன் தம்முடைய இரக்கத்தினால் அரவணைத்து வைத்திருந்த போதும், இவர்களோ இந்த இரக்கத்தை மறந்து விட்டு தங்களை தேடி வந்த ஜனங்களை புறக்கணித்தனர் – மத்தேயு 25:40,41.

2.  தேவன் பட்சபாதமில்லாதவராய் எல்லாருக்கும் சமமாக கூலியைப் பங்கிட்டு கொடுத்தார் ஆனால் முந்தி வந்தவர்களோ தேவனுடைய இரக்கத்தை அசட்டை செய்தனர் எப்படியென்றால் பிந்திவந்தவர்களை தங்களுக்கு சம்மாக்கினாரே என்று சொன்னார்கள் இதனால் இவர்கள் பிந்தினவர்களாக மாறிப் போனார்கள் ஆதாவது பிசாசின் பிள்ளைகளாக மாறி போகும்படி தேவன் தீர்ப்புச் செய்தார் – மத்தேயு 20:15,16.

3.  பதினாயிரம் தாலந்து கடன் பெற்றிருந்த மனுஷன் தன் எஜமான் தன்னிடம் கொடுத்த பணத்தை கேட்க வரும் போது அதை கொடுத்து தீர்க்க நிர்வாகம் இல்லாதபடியினால் அவனிடம் எனக்கு இரங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான், அந்த எஜமானும் மன திரங்கி எல்லா கடனையும் அவனுக்கு மன்னித்து விடுதலை பண்ணினான்.

அந்த மன்னிக்கப்பட்ட ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில் தன்னிடம் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனை பிடித்து தொண்டையை நெரித்து நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்து தீர்க்க வேண்டும் என்றான் அந்த மனுஷனோ அதற்கு அவகாசம் கேட்டான் ஆனால் அந்த மனுஷனோ அவனுக்கு அவகாசம் கொடுக்காமால் அவனைக் காவலில் போட்டச் செய்தான் இதை அறிந்து மன்னிக்காத ஊழியக்காரனுடைய எஜமான் கேள்விப்பட்டு தன்னிடம் பட்ட கடனுக்காக கடனைக் கொடுத்து தீர்க்கும் மளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான் – மத்தேயு 18:24-35.

4.  இதோ தாறுமாறாக வாழ்ந்த இளைய குமாரன் தன் தந்தையிடம் இருந்து தன் சொத்துக்களையெல்லாம் பிரித்துக் கொண்டு தூர தேசத்திற்கு சென்று ஊதாரித்தனமாக எல்லாவற்றையும் செலவழித்து விட்டு அனாதையாக ஒருவேளை சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டு பிறகு மனந்திரும்பி தன்னுடைய இரக்கமுள்ள தந்தையை தேடி வந்தான் தந்தையும் இவனை மன்னித்து இவனுக்காக ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். இதனால் அந்த இடத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் அவனுடைய சகோதரனால் இத்தகை தகப்பனுடைய இரக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதை அசட்டை செய்கிறவனாய் அதாவது தன்னுடைய மனந்திரும்பிய தம்பியை ஏற்றுக் கொள்ள மனதில்லாதவனாய் மாறிப் போனான். இதனால் அந்த சந்தோஷத்தை அவனால் அநுபவிக்க முடியவில்லை என்று பார்க்கிறோம் – லூக்கா 15:10-32

இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு நாமும் ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் தேவ இரக்கத்தை நாம் முதலில் கனப்படுத்துகிறவர்களாக மாற வேண்டும் அப்பொழுதுதான் நாம் தேவனால் கனப்படுத்தப் படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை தன்னுடைய வாழ்க்கையில் காண்பித்தவர்கள்

1.தாவீது:

                 தனக்கு விரோதமாய் வந்த சவுலுக்கு அதாவது தன்னை கொல்ல முயற்சி செய்த சவுலுக்கு தாவீது அனேக முறை மன்னிப்புக் கொடுத்தான்

2.யோபு:

                          தன்னை குற்றப்படுத்திய நண்பர்களுக்காக யோபு ஜெபம் பண்ணினார்

3..யோசேப்பு:

                       தன்னை வெறுத்து அன்னியரின் கையில் ஒப்புக் கொடுத்த சகோதரகளுக்கு யோசேப்பு நன்மையே செய்தார்

4.மோசே:

              தனக்கு விரோதமாய் பேசிய தன் சகோதரன் மற்றும் சகோதரிக்காகவும் தேவனிடம் மோசே பரிந்து பேசினார்.

5.எஸ்றா:

                        பாவம் செய்த தன்னுடைய ஜனங்களுக்காக தேவனிடம் முறையிட்டான்

6.அன்னாள்:

            தன்னுடைய சக்களத்தியாகிய பென்னினாள் தன்னை இழிவுப்படுத்திய போதிலும் அவளுக்கு விரோதமாக ஒன்றும் பேசாமல் அவளை மன்னித்தாள்

7.யாக்கோபு:

           தன்னுடைய மாமாவாகிய லாபன் தன்னை அனேக தடவை ஏமாற்றிய பொழுதிலும் அவருக்கு விரோதமாக யாக்கோபு ஒன்றுமே செய்யவில்லை.

8.இளையக்குமாரனின் தந்தை:

                                                   தன் மகன் செய்த பெரிய துரோகத்தை மன்னித்து மறுபடியும் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார்.

9.பவுல்: 

                 தன்னுடைய ஜனங்களுக்காக தான் சபிக்கப்படவும், அவர்கள் நிமித்தமாக வரும் தண்டனை அநுபவிக்கவும் விரும்பினான்.

10.எரேமியா:

                            தன்னுடைய ஜனங்கள் தனக்கு விரோதமாக அனேக துன்பங்களை செய்த பொழுதிலும் தன்னுடைய ஜனங்களுக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிறவனாய் காணப்பட்டான் அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் அவர்களுக்காக ஜெபம் பண்ணினான்.

நாமும் தேவனுடைய அன்பை மாத்திரம் மற்றவர்களிடத்தில் காண்பிக்கும் போது அனேக ஆத்துமாக்களை தேவனிடத்தில் கொண்டு வர முடியும்.

தண்டனையின் வலியை மறக்கச் செய்த இயேசுவின் இரக்கம் [ தெய்வீக மருந்து ]

ஒரு மனுஷன் பல நாட்களாக சிறு சிறு தவறுகளைச் செய்து வருகிறான் இப்படியாக அவன் பலவிதமான குற்றங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது அதுமட்டுமல்லாமல் சிறிய குற்றங்களைச் செய்யத் தொடங்கின அந்த மனிதன் நாளடைவில் பெரிய குற்றங்களுக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டான். இப்படியாக பல நாட்களாக காவலாளிகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருந்த அவன் ஒரு நாள் காவலாளர்களால் கைது செய்யப்பட்டு அந்த ஊரின் நியாயாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த மனிதன் இந்த திருடனை சிறைச்சாலையில் காவல் வைக்க உத்தரவு கொடுத்தான். அதுமட்டுமல்லாமல் நாளடைவில் சிலுவைத் தண்டனைக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டான். இதனால் அவன் மிகுந்த வேதனையும் பயமும் உடையவனாக காணப்பட்டான் அவன் பயந்தது போல ஒரு நாள் அந்த சிலுவை தண்டனை நிறைவேறும் காலம் உறுதிச் செய்யப்பட்டது அவன் கொண்டு வரப்பட்டு இயேசுவோடு கூட மற்றொரு சிலுவையில் அறையப்பட்டான்.

இந்த சிலுவையில் இருந்து தான் அவன் இயேசுவைக் குறித்தும் அவருடைய இரக்கத்தையும் குறித்தும் அறிந்து கொண்டான் அதாவது அவர் குற்றம் ஒன்றும் செய்யாமலேயே பிறருடைய குற்றங்களுக்காகவும் அவர்களுக்குப் பாவமன்னிப்பை கொடுப்பதற்காகவும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டான்.

இதுதான் சரியான தருணம் என்று அறிந்து அவரிடம் தன்னையும் மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறான் இந்த வார்த்தையைக் கேட்டவுடனே இயேசு கிறிஸ்து அவனுக்குக் கொடுத்தப் பதில்

மகனே இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் – லூக்கா 23:43 என்பதாக

இதுவரைக்கும் குற்றம் செய்கிறவர்களுக்கு தண்டனையைக் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்த இந்த திருடனுக்கு முதன் முதலில் மன்னிப்புத் தந்து அவனுக்கு ஒரு உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறவரைப் பார்த்தான் அதுமட்டுமல்லாமல் இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே தன்னுடைய சரீரத்திலும் மற்றும் ஆத்துமாவிலும் பெற்ற வேதனைகள் எல்லாம் மறைந்து போயின, அவன் சந்தோஷத்தோடு அந்த மரண தண்டனையை ஏற்றுக் கொண்டான்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நம்முடைய தகப்பனாகிய இயேசு கிறிஸ்து இன்னும் வர தாமதிக்கிறார் ஏன் தெரியுமா ஒருவரும் நரக அக்கினிக்கு இரையாகி விடக் கூடாது என்பதற்காகவே ஆகவேதான் இன்னும் தம்முடைய இரக்கத்தின் எல்லையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் என்பது தான் இதன் அர்த்தம்.

ஆகவே இப்பொழுதே மனந்திரும்புங்கள் தேவனுடைய அளவில்லாத இரக்கம் நம்மை மன்னித்து அவருடைய பரிசுத்த ஸ்தலத்துக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்... வேதம் சொல்லுகிறது, ஆண்டவரே நீர் மனவுருக்கமும் இரக்கமும் நீடிய பொருமையும் பூரண கிருபையும் சத்தியமுமுள்ள தேவன் – சங்கீதம் 86:15. மேலும், கர்த்தருடைய நேசம் மரணத்தைப் போல் வலிது நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடியதாயிருக்கிறது அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜீவாலை கடும் ஜீவாலையுமாயிருக்கிறது – உன்னதப்பாட்டு 8:6. மேலும், கர்த்தருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை அவைகள் காலைதோறும் புதியவைகள் – புலம்பல் 3:22,23.

 ஆவிக்குரிய கடிதம்

அனுப்புநர்:

                     வேலைக்காரன்

                     கர்த்தருடைய சபை

                        

பெறுநர்:

                     விசுவாசிகள்

                     கர்த்தருடைய சபைகள்

                     உலகம்

தலைப்பு: இரக்கத்தின் வெளிப்பாடு

எனக்குப் பிரியமான தேவ விசுவாசிகளே! நான் இரட்சிக்கப்பட்ட பிறகு கர்த்தருக்காக ஒரு சில எளிய ஊழியங்களை செய்து வருகிறேன், இங்கு ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் அதுஎன்னவென்றால் எப்பொழுதோ என் பாவத்தினிமித்தம் மரித்து இருக்க வேண்டும் ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் என்மேல் வந்ததினால் நான் நிர்மூலமாகாமல் இருக்கிறேன் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் நான் பெற்றுக் கொண்ட இரக்கத்தின் வெளிப்பாட்டை ஒரு சிலதை இங்கு வரைந்திருக்கிறேன், அதை நன்றாகப் படித்து உங்களுடைய வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டுமென்று கர்த்தருக்குள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

1.  இயேசு என்கிற இரட்சகராக வெளிப்பட்டு எல்லாருடைய பாவத்தையும் மன்னித்தார்

2.  இம்மானுவேல் என்கிற தலைப்பில் வந்து எப்பொழுதும் உங்களோடு கூட இருப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்து தருகிறார்

3.  வைத்தியனாக வந்து பிணியாளிகளின் நோயை குணமாக்குகிறார்

4.  ரபீயாக வந்து எல்லாருடைய சந்தேகங்களைத் தீர்த்தார்

5.  தீர்க்கதரிசியாக வெளிப்பட்டு நம்முடைய எதிர்காலத்தை குறித்து திட்டம் பண்ண சொல்லித் தருகிறார்

6.  நல்ல மேய்ப்பனாக இருந்து எல்லாரையும் செவ்வையான வழியிலே நடத்துகிறார்

7.  நண்பராக வந்து உண்மையான சினேகத்தை உலகத்திற்கு வெளிப்படுத்துகிறார்

8.  கன்மலையாக வெளிப்பட்டு எல்லாருக்கும் திடமான அஸ்திபாரமானார்

9.  கல்லாக வெளிப்பட்டு அனேகருடைய வீட்டைக் கட்டுவதற்கு மூலைக்கல்லாக பயன்பட்டார்

10. வெளிச்சமாக வந்து அனேகருடைய இருளை அகற்றினார்

11. ஜீவ அப்பமாக வந்து மரித்தோரை உயிரடையச் செய்தார்

12. ஜீவ தண்ணீராய் வந்து அனேகருடைய உலகத் தாகத்தை தீர்த்தார்

13. சத்தியமாக வந்து அனேகருக்கு விடுதலைக் கொடுத்தார்

14. நீதியாக வெளிப்பட்டு அனேகரை தம்முடைய பிள்ளையாக மாற்றினார்

15. ஞானமாக வந்து அனேக பேதைகளை புத்திமான்களாக மாற்றினார்

16. மருந்தாக வந்து அனேகருடைய காயங்களைக் கட்டுப் போட்டார்

17. குயவனாக அவதாரம் எடுத்து அனேக உடைந்த பாத்திரங்களை சரி செய்தார்

18. வார்த்தையாக வந்து ஜனங்களுக்கு சத்துருவை வீழ்த்துகிற ஆயுதமாக மாறினார்

19. அன்பாக வந்து அனேகரை தூக்கி சுமக்கிற வாகனமாக மாறினார்

20. நியாயாதிபதியாக வெளிப்பட்டு அனேகரை நியாயந்தீர்க்கப் போகிறார்

ஆகவே 19 விதமான இரக்கத்தை நம்முடைய வாழ்க்கையில் உயிராக எடுத்து வாழ்வோமானால் 21. வது காரியம் நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷமாக மாறும்

 

                          இப்படிக்கு

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தால் கழுவப்பட்ட கிறிஸ்துவின் வேலைக்காரன்

ஆவிக்குரிய ஆயுதங்கள்

வேதம் சொல்லுகிறது, ஆகையால் தீங்கு நாளிலே அவைகளை [பிசாசின் வல்லமைகளை] நீங்கள் எதிர்க்கவும் சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எபேசியர் 6:13.

1.சத்தியம் என்னும் கச்சை [ எபேசியர் 6:14 ]

சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார், ஆம் 38 வருடமாய் வியாதியாய் இருந்த மனுஷன் எந்தவொரு மருத்துவரோ அல்லது மருந்தோ குணப்படுத்தவில்லை ஆனால் இயேசு என்கிற சத்தியத்தை எப்பொழுது சந்தித்தானோ அன்றே அவன் விடுதலை பெற்றான்.

2.நீதி என்னும் மார்க்கவசம் [ எபேசியர் 6:14 ]

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும், ஆம் யோசேப்பு என்கிற மனுஷனை எத்தனைவிதமான அம்புகள் தாக்கினப் போதிலும் அவனுக்குள் இருந்த அதாவது அவனுடைய மார்பில் இருந்த நீதி என்னும் கவசம் அவனைப் பாதுகாத்து இந்த உலகத்திற்கு முன்னே சாட்சியாய் மாற்றினது.

3.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை [ எபேசியர் 6:15 ]

ஆயத்தப்படு உன்னுடனே கூடின எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, பாருங்கள் அந்த சிறுவன் தன்னுடைய உணவைக் கொடுக்க ஆயத்தமாயிருந்ததினால் தான் அங்கு ஒரு பெரிய அற்புதத்தைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் பட்டினியாய் இருந்த அநேகர் போஷிக்கப்பட்டனர்.

4.விசுவாசமென்னும் கேடகம் [ எபேசியர் 6:16 ]

விசுவாசமில்லாமல் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்க முடியாது, ஆம் கர்த்தர் வெறுக்கிற விக்கிரகராதனைக்காரர் கூட்டத்தில் இருந்து வந்த ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தின் மூலம் கர்த்தருடைய தாசனாக மாறினார்.

5.இரட்சணியமென்னும் தலைசீரா [ எபேசி 6:17 ]

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள், ஆம் சாகும் நிலையில் இருந்த அந்த சிறைச்சாலைக்காவல்காரன் கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான் இதனால் இரட்சிப்பு என்னும் பாதுகாப்பு ஆயுதத்தை தான் மாத்திரமல்லாமல் தன்னுடைய குடும்பத்துக்கும் பெற்றுத் தந்தான்

6.தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம் [ எபேசியர் 6:17 ]

மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். இத்தகைய காரியத்தை நன்றாக அறிந்த நூற்றுக்கு அதிபதி தன்னுடைய வேலைக்காரன் மரண அவஸ்தையிலிருந்து விடுதலைப் பெறுவதற்காக ஒரு வார்த்தை சொல்லும்படியாக வேண்டிக்கொண்டான்.

7.ஆவியினால் ஜெபம் [ எபேசியர் 6:18 ]

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், இதோ சீஷர்கள் தொடர்ந்து ஜெபித்தார்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளவில்லாமல் பெற்று இயேசு சொன்ன ஊழியத்தை நிறைவேற்றினார்கள்.

நாமும் இப்படிப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பயணம் செய்வோமானால் நிச்சயமாக நம்முடைய ஆவிக்குரிய பயணத்தில் தோல்வியே இருக்காது என்பதை மறந்து விடாதீர்கள்.

bottom of page