top of page

காணிக்கை பணத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்

 

 

ஒரு முறை ஒரு ஊழியக்காரர் Income tax department க்கு போயிருந்தார். அவருடைய பணி முடிய நேரமானது.அப்போது அவர் அங்குள்ள அதிகாரியிடம் என்னுடைய கணக்குகள் எல்லாம் சரியாக தானே இருக்கிறது. ஏன் Delay ஆகிறது என்று கேட்டாராம் உடனே அந்த அதிகாரி அவருடைய Recipt ஐ கொடுத்து விட்டாராம், மேலும் அவர் சொன்னதாவது இதற்கு முன்பு இரண்டு ஊழியக்காரர்கள் வஞ்சம் கொடுத்து விட்டு போனார்கள் என்றாராம்.

இன்றைக்கு ஜனங்கள் கொடுக்க கூடிய காணிக்கை பணம் எங்கே போகிறது?பல சபைகளில் ஏழை ஜனங்கள் உதாரத்துவமாக கொடுக்கும் காணிக்கை பணம் தேவ சித்ததிற்கு விரோதமாக செலவிடப்பட்டு விரயமாக்கபடுகிறது.அநேக சபைகளில் காணிக்கை பணத்தில் ஊழியக்காரர்கள் தங்கள் குடும்பத்தினர் பேரில் சொத்து வாங்குகிறார்கள்.அந்த சொத்துக்கள் யாருக்கும் பயன்படாமல் அப்படியே இருக்கிறது.அவர்கள் வாங்கின இடத்தில் Conventon நடத்துவதற்கு கேட்டால் அனுமதி தரமாட்டார்கள். சமீபத்தில் ஒரு சபையில் ஜனங்களிடமிருந்து வசூல் பண்ணி ஒரு Hall கட்டினார்கள்.இப்பொழுது அந்த hall,Birth day party,Engagement மற்றும் பல உலக காரியங்களுக்கு வாடகைக்கு கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் அந்த hall ல் ஒரு நாள் ஜெபக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்.வாடகை தந்து விடுவதாகவும் சொன்னார்.ஆனால் அவருக்கு கொடுக்க மறுத்து விட்டார்கள்.ஆனால் பக்கத்தில் உள்ள ஒரு இந்து மதத்தை சார்ந்த கல்யாண மண்டபத்தில் பாதி  பணம் தந்தால் போதும் என்று அனுமதி கொடுத்தார்கள். இப்பொழுது சொல்லுங்கள் இந்த சபையை யார் ஆளுகை செய்கிறார்கள். ஜெபிக்கிறவர்களை தடை செய்வது யார்?கர்நாடகாவில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு அவருக்காக ஊழியம் செய்த புகழ் பெற்ற மந்திரவாதி தொட்டண்ணா நோய் வாய்ப்பட்டு மரணமடைந்தார். அவருடைய கடைசி நாள்களில் அவருடைய மருத்துவ செலவுக்கு கூட யாரும் உதவவில்லை.  எவ்வளவோ மிஷனரிகள் ஊழியக்காரர்கள் வல்லமையாக ஊழியம் செய்கின்றனர்.அவர்களால் அதிகமாக சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்க அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை.நெருக்கமான சூழ்நிலைகளில் எதிர்ப்புகள் நிறைந்த இடத்தில் வல்லமையாக ஊழியம் செய்கின்றனர்.இப்படியிருக்க சுகமாக ஊழியம் செய்யும்  ஊழியக்காரர்களே ஜனங்கள் கொடுக்கும் காணிக்கை பணத்தில் உங்கள் பிள்ளைகளை International பள்ளி களிலும் மற்றும்  உயர்ந்த ஸ்தாபனங்களிலும் வெளிநாடுகளிலும் படிக்க வைக்கும் நீங்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

 

இயேசு சீக்கிரம் வருகிறார்ஆயத்தப்படுங்கள் என்று பிரசங்கம் செய்து விட்டு மறுபக்கம் சொத்து வாங்கி குவிப்பது சரியானதா?குறைவான மதிப்பெண் பெற்ற உங்கள் பிள்ளைகளுக்கு லஞ்சம் கொடுத்து உயர்கல்வி ஸ்தாபனங்களில் இடம் வாங்குவது தேவ சித்தமா? தேவன் அதை அனுமதித்தாரா?கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள், சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது. ஏசாயா 3-14. அளவுக்கு அதிகமான ஜனங்களை கொண்ட உங்களுக்கு எதற்காக கிளை சபைகள்?உங்கள் சபையில் உள்ள எல்லா ஜனங்களின் வீடுகளையும் சந்திக்க கூட உங்களுக்கு நேரமில்லை. தேவன் உங்களை அனுமதிக்காத பட்சத்தில் சபைகள் இருக்கும் இடங்களில் கிளை சபை என்ற பேரில் உங்கள் ராஜ்ஜியத்தை கட்டாதீர்கள். அந்த பகுதியில் இருக்கும் உண்மையாக ஆத்தும ஆதாயம் செய்யும்  ஊழியக்காரர்களின் தேவைகளை சந்தியுங்கள்.

 

குடிசைகளில் சபை நடத்தும் ஊழியக்காரர்களின் சபையை கட்டி கொடுங்கள், கிளை சபைகள் என்ற பெயரில் வேறு சபைக்கு போகும் ஆத்துமாக்களை திருடாதீர்கள். தேவன் அனுமதிக்காத பட்சத்தில் ஏராளமான  பணத்தை செலவழித்து CD மற்றும் ஆராதனை என்ற பெயரில் வீண் புகழ்சிக்காக உங்களையும் உங்கள் பிள்ளைகளின்   ஆசை இச்சைகளையும் நிறைவேற்றாதீர்கள்.ஜனங்கள் கொடுக்கும் காணிக்கை பணத்தில் ஆசீர்வாதமாக இருக்கும் நீங்கள் உங்கள் சொந்த ராஜ்ஜியங்களை கட்டுவதை விட்டு விட்டு பிற ஊழியங்களையும் ஏழை ஊழியக்காரர்களையும் மிஷனரிகளையும் தாங்குங்கள்.நீங்கள் உங்களுக்கு வரும் காணிக்கை பணத்தை தேவ சித்தப்படி பயன்படுத்தவில்லையென்றால் வர கூடிய நாள்களில் உங்கள் பணத்தை அரசாங்கம் எடுத்து கொள்ளும் நிலை வரும்.தேவன் அதை அனுமதிப்பார்.பண விஷயங்களில் உண்மையுள்ளவார்களாக இருங்கள்.ராயனுக்குறியதை ராயனுக்கு கொடுங்கள்.தவறாக கணக்கு காட்டி அரசாங்கத்தை ஏமாற்றாதீர்கள்,பூமியின் நிறைவை உடைய இயேசுவே அரசாங்கத்துக்கு வரி கொடுத்தார்.பண விஷயத்தில் நேர்மையுள்ளவர்களாக  இருங்கள். முதலாவது காணிக்கை பணத்தை தவறாக பயன்படுத்தும் சபைகள் சுத்திகரிக்கப்படும்.அடுத்து ஜாதி மற்றும் ஏழை பணக்காரன் என்ற காரியங்களில் ஜனங்களை பிரித்து பார்க்கிற சபைகள் சுத்திகரிக்கப்படும்.ஜாதி பார்க்கிற  ஊழியக்காரனும் சபை விசுவாசிகளும் உடனடியாக மனம் திரும்ப வேண்டும்.ஏழைகளை ஒடுக்குகிற சபைகளின் ஆசீர்வாதம் என்ற விளக்குதண்டை தேவன் எடுத்து போடுவார்.ஏன் ஊழியக்காரனுடைய பிள்ளைகளுக்கு நடுத்தர குடும்பத்திலோ  அல்லது ஏழை குடும்பத்திலோ பெண் கிடைப்பதில்லை?ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்ட ஊழியக்காரர்கள்பணமும் புகழ்ச்சியும் வந்தவுடன் பழையவைகளை நினைப்பதில்லை.Status பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

இன்றைக்கு சபைகளில் உள்ள ஏழைகள் மற்றும் விதவைகள் விசாரிக்கபடுவதில்லை, ஒரு காலத்தில் நாமும் தாழ்மையான நிலையில் இருந்தோம் என்பதை மறந்து விடவேண்டாம். அடுத்ததாக சத்தியத்தை சத்தியமாக பேசாமல் ஜனங்களின் பாவத்தை கண்டித்து உணர்த்தாமல் எண்ணிக்கைக்காகவும் காணிக்கைக்காகவும் சபையை நடத்தாதீர்கள். இந்த கடைசி நாள்களில் தேவ சித்தத்துக்கு எதிராக செயல்படும் மாயமாலமான சபைகள் மனந்திரும்பவில்லையென்றால் அத்தகய சபைகளை நடத்துகிறவர்கள்,நியாயம் தீர்க்கப்படுவார்கள்.(ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே, அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். ஓசியா 4-9)

எனவே பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவ சித்தப்படி தேவனுடைய சபையை நடத்துங்கள். ஆமென்.

bottom of page