top of page

வீடுகளில் இரட்சிப்பின் ஆசீர்வாதம் இல்லை

 

அன்றைக்கு சகேயு சந்தோஷத்தோடே இயேசுவை வீட்டிற்கு அழைத்து கொண்டு போனான்.முதலாவது அவன் அவரை பார்க்க வேண்டும் என்ற வாஞ்சையால் மரத்தில் ஏறினான்.இயேசு அவ்வளவு ஜனங்கள் மத்தியில் அவன் இருதயத்தின் நோக்கத்தை அறிந்தார்.அவனை அழைத்தார். அவன் வீட்டிற்கு வருவதாக கூறினார்.இயேசு சகேயு வீட்டிற்கு சென்ற போது அவன் வாழ்க்கையில் உண்மையான மனம் திரும்புதல் ஏற்பட்டது.அநியாயமாக சம்பாதித்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக தீர்மானித்தான்.அவன் மனம் திரும்பியதை கண்ட இயேசு இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றார்.

 

  • இன்றைக்கு நாம் ஆலயத்துக்கு போகிறோம். ஆனால் தேவனை ஆராதிப்பதோடு நிறுத்தி கொள்கிறோம்,

  • இயேசுவை அநேகர் வீட்டில் அனுமதிப்பதில்லை.

  • அநேகருடைய வீடுகளில் இயேசு இல்லை!!.

  • கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்கிற இவர்களின் குடும்பங்களில் வாக்குவாதங்களும் கூக்குரல்களும் கசப்பும் நீ பெரியவனா நான் பெரியவனா என்பதில் வைராக்கியமும் தான் இருக்கின்றன.

  • ஆலயத்துக்கு போகும் பலர் மாயமாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கின்றனர்.

  • சொத்துக்காக சகோதர சகோதரிகளிடம் சண்டை போட்டு கொண்டு இயேசுவின் அடிப்படை சத்தியத்தையே மீறுகிறார்கள்.

  • அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லை.

  • கிறிஸ்துவின் உபதேசத்துக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

  • இவர்கள் வெறும் கடமைக்காகவே ஆலயத்துக்கு செல்கின்றனர்.

  • இவர்கள் என்னை நேசிக்கிறாயா என்று அன்போடு கேட்கும் இயேசுவை ஏற்று கொள்வதில்லை.

  • ஆலயத்துக்கு போகும் இவர்கள்  இயேவை  விட தங்கள் சபையையும் ஸ்தாபனத்தையும் மிகவும் நேசிக்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவிடுவது நம்முடைய வீட்டில் தான். நம்முடைய வீட்டில் இயேசு இருக்கிறார் என்றால் நாம் எப்படி இருப்போம் என்று கற்பனை செய்து பாருங்கள். சகேயு வீட்டில் இயேசு வந்த போது அவன் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்தது.

 

  • இன்றைக்கு ஆவிக்குறிய மாற்றம் நம் வீடுகளில் இல்லை.

  • மனமகிழ்சியும் சமாதானமும் நம்மிடம் இல்லை.

  • குடும்பங்களில் ஐக்கியம் இல்லை.அன்பு இல்லை.

  • பலருடைய வீடுகள் யுத்த களமாகவே இருக்கிறது.

  • அநேகரை சத்துரு தன் ஆளுகைக்குள் வைத்திருக்கிறான்.

  • அநேக குடும்பங்களில் பிரிவினைகள்.

  • அநேகர் பாவத்தின் வஞ்சனையால் கடினப்பட்டு போய் விட்டார்கள்.

 

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளிப்படுத்தின விசேஷம் 3-20.

 

அநேகர் உலகத்தையும் அதன் ஆசை இச்சைகளுக்கும் அடிமைகளாக இருப்பதால் இயேசுவுக்கு கதவை திறப்பதில்லை.கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டு ஆலயத்துக்கு செல்கிறவர்கள் வீடுகளில் வேதம் வாசிப்பதில்லை.ஜெபிப்பதில்லை.இவர்கள் தேவனை விட்டு வெகுதூரமாக போய் விட்டார்கள்.ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்து விட்டார்கள்.அதாவது பின்வாங்கி போய்விட்டார்கள்.பலர் தேவன் தங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்கள் மேல் அன்பு வைத்து அவைகளோடு நேரம் செலவிடுகிறார்கள்.தேவனை தேட நேரமில்லை.இன்றைக்கு அநேக புறமதத்தினர் இயேசுவை ஏற்று கொண்டு அவரை நேசித்து உண்மையும் உத்தமுமாக பின்பற்றுகின்றனர்.அவர்கள் வீடுகளில் இரட்சிப்பின் சந்தோஷமும் துதியின் சத்தமும் கேட்கிறது.நாமோ உலகத்தை ஏற்று கொண்டு உலகத்தை நேசித்து இயேசுவை மறுதலிக்கிறவர்களாக மாறிவிட்டோம்.  (ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 8-12) என்று இயேசு கிறிஸ்து எச்சரிப்பதை மறந்து விட வேண்டாம்.


ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 


கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்லூக்கா 13:28-30.


இன்றைக்கு பாவமன்னிப்பு மற்றும் மனம் திரும்புதலின் சத்தியங்கள் சபையில் கேட்பதில்லை.இந்த கடைசி நாள்களில் மனம் திரும்புங்கள் என்ற சுவிசேஷம் கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கிக்கப்படுவது மிகவும் அவசியமாயிருக்கிறது.இன்றைக்கு  நம்மை நிதானித்து பார்ப்போம்.சந்திப்பின் நாளிலே,ஐயோ நான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேனே என்று சொல்லும் நிலைமை நமக்கு வராதபடிக்கு இன்றைக்கு தேவனை தேட தீர்மானம் எடுப்போம்.வீடுகளில் அவர் நாமத்தை உயர்த்துவோம். அவரை மகிமைபடுத்துவோம்.வீடுகளில் அவரை ஆராதிப்போம்.அவரது பிரசன்னமும் தேவமகிமையும் வீடுகளில் கடந்து வரும் போது இருளின் அதிகாரம் அகன்று போகும்,நித்திய மகிழ்ச்சி உண்டாகும். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
சங்கீதம் 118-15 ஆமென்.

bottom of page