top of page
பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நில்.
(கண்ணின் இச்சையும் விபச்சார சிந்தையும்)
 
இன்றைக்கு தேவ தரிசனங்களை பெற்று கொண்டு தேவனுக்காக வல்லமையாக ஊழியம் செய்பவர்களை கீழே தள்ளும்படி சாத்தான் பயன்படுத்துகிற ஆயுதம் கண்ணின் இச்சை. 
 
சாத்தான் அழகிய கண்களை உடைய பெண்களை ஆளுகை செய்து அவர்களை ஊழியம் செய்பவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறான்.  பிசாசின் வல்லமையை பெற்ற அந்த கண்களை பார்க்கும் போது ஊழியக்காரன் மதிமயங்கி போய்விடுகிறான். அடுத்ததாக, அந்த பெண்ணோடு பாவம் செய்ய தூண்டப்பட்டு பரிசுத்த ஆவியானவருக்கு செவி கொடாமல் பாவத்தில் விழுந்து தேவன் தனக்கு தந்த தரிசனங்களையும் நித்திய ஜீவனையும் சில மணி நேரத்தில் இழந்து போகிறான். இன்றைக்கு சாத்தான் பயன்படுத்துகிற பெண்கள் சபையில் வருகிறார்கள், ஊழியக்காரர்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
 
அடுத்ததாக, எந்த ஒரு வீட்டிற்குள் தனியாக ஜெபிக்க போகாதீர்கள்...... உங்கள் மனைவியையோ அல்லது சபையின் மூப்பர்களையோ  அழைத்து கொண்டு செல்லுங்கள். தேவனுக்கு பயந்து பரிசுத்த ஆவியினால் வழிநடத்தபடுகிற எந்த ஊழியக்காரனும் தனியாக இருக்கும் பெண்கள் வீட்டிற்கு செல்லமாட்டான். இந்த ஆவிக்குறிய ஒழுக்கத்தை ஒவ்வொரு ஊழியக்காரனும் விசுவாசியும் கடைபிடிக்க வேண்டும். தனியாக இருக்கும் பெண்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி சாத்தானின் கண்ணியில் விழுந்து போனவர்கள் அதிகம். வெளிநாட்டில் இப்படிபட்ட காரியங்கள் நிறைய நடக்கிறது.
 
வெளி நாடுகளில் குடும்பத்தை  பிரிந்து தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் விபச்சாரம் என்ற பாவமாகிய மாய வலையில் எளிதாக சிக்கி கொள்கிறார்கள். உதவி செய்கிறேன் ஜெபம் பண்ண போகிறேன் என்று தனியாக இருக்கும் பெண்களை பயன்படுத்தி கொள்ளும் ஆண்கள் இருக்கிறார்கள். விபச்சார சிந்தையுள்ள ஆண்கள் பலவீனமான பெண்களை விபச்சாரம் என்ற பாவத்துக்குள் விழத்தள்ளுகிறார்கள்.  எனவே குடும்பத்தை பிரிந்து தனியாக இருக்கும் பெண்கள்...உங்களை approach பண்ணும் ஆண்களை even தனியாக வரும் ஊழியக்காரனை கூட வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கு உங்கள் குடும்பம் உங்களுக்கு முக்கியம், எல்லாவற்றுக்கும்  மேலாக உங்கள் ஆத்துமா விலையேறப்பெற்றது. உங்கள் ஆத்துமா பாதாளத்துக்கு செல்ல நீங்களே விசாலமான வழிகளை உண்டுபண்ணாதீர்கள்.
 
ஒரு முறை இந்த பாவத்தில் விழுந்தவர்கள் அதை விட்டு மீளமுடியாமல் தங்கள் குடும்ப ஜக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும் இழந்து போய்விடுகின்றனர். தங்கள் ஆயுள் நாள்களெல்லாம் இந்த பாவ உணர்வு உங்களை உருவ குத்தி கொண்டேயிருக்கும். வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 1 கொரிந்தியர் 6-18.
 
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி. அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 1 கொரிந்தியர் 7-4
 
எனக்கும் என் மனைவிக்கும்....எனக்கும் என் கணவனுக்கும்  தாம்பத்திய உறவு சரியில்லை. இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. என் துணையை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறவர்களிடம் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். 
 
Brother....sister நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் பாடுவது மிகவும் இனிமையாக இருந்தது. நான் நேற்று தூங்கவே இல்லை....உங்களையே நினைத்து கொண்டிருந்தேன்.....நான் வீட்டில் தனியாக இருக்கிறேன், எனக்காக ஜெபம் பண்ண வாருங்கள், நீங்கள் தனியாக இருந்தால் கூப்பிடுங்கள் நாம் ஜெபம் பண்ணலாம் என்று பேசுகிறவர்களின் ஆவிகளை பகுத்தறியுங்கள். உங்களை பாவம் செய்ய தூண்டும் மறைமுக அழைப்புக்கு உங்கள் செவியையையும் இருதயத்தையும் விலக்கி காத்து கொள்ளுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களை அறிந்து கொள்ளாவிட்டால் இதுவரை காத்து கொண்ட இரட்சிப்பையும் பரிசுத்தத்தையும் இழந்து போய்விடுவீர்கள்.உங்கள் மூலமாக அநேகர் ஆதாயப்படுத்தபட்டிருக்கலாம்.
 
பெரிய கூட்டத்தையே நீங்கள் ஆதாயப்படுத்தியிருக்கலாம், பல சபைகளை ஸ்தாபித்திருக்கலாம். ஆனால்  சில நொடிப்பொழுதில் நீங்கள் பாவம் செய்ய தூண்டப்பட்டு உங்கள் ஜீவனையே நஷ்டப்படுத்தி விடுவீர்கள்.எனவே யோசேப்பை போல பாவத்துக்கு விலகி ஓடுங்கள்.மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம் 119-37 என்ற ஆவியின் பட்டயத்தை கையில் எடுங்கள். ஒருவர் எந்த நோக்கத்தோடு உங்களிடம் பேசுகிறார் என்பதை பகுத்தறிய முடியாவிட்டால் பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். உங்கள் கண் உங்களுக்கு இடறலுண்டாக்கினால் பிடுங்கி போடுங்கள், அதாவது,...விலகி ஓடுங்கள்,என் நடைகள் வழியை விட்டு விலகினதும் என் இருதயம் என் கண்களை பின் தொடர்ந்ததும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டி கொண்டதும் உண்டா?? என் மனம் யாதொரு ஸ்திரியின் மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டி பார்த்ததுண்டா(யோபு 31-7,9) என்று யோபு அறிக்கையிட்டதை போல தேவனுடைய வேலைக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியக்காரனும் அறிக்கையிட வேண்டும்.
 
நான் பரிசுத்தராயிருப்பதை போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்ற நம் எஜமானின் கட்டளை நம் செவிகளில் ஒலித்து கொண்டேயிருக்கட்டும். பரிசுத்தமாக வாழ்ந்து காட்டிய அவரது அடிச்சுவடை பின்பற்ற நாம் அழைக்கபட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
எனவே இந்த கடைசி நாள்களில் உங்கள் எண்ணங்கள் உள்ளந்திரியங்கள் சிந்தனைகள் மற்றும் நினைவுகளின் தோற்றங்களை பரிசுத்தமாக காத்து கொள்ளுங்கள்.  சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெச5-23. ஆமென்
bottom of page