உபத்திரவத்தில் எழுப்புதல்
 
இருள் தேசத்தை மூடி கொள்ளும் காலம் வருகிறது, ஆனால்தேவனுடைய பிள்ளைகள் மேல் வெளிச்சம் உதிக்கும்.யார் தேவனுடைய பிள்ளைகள்??? (எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தபடுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் ரோமர் 8-14).
 
இனி வரக்கூடிய நாள்களில் எண்ணிக்கைக்காகவும் சுய ஆதாயத்துக்காகவும் ஊழியம் செய்கிறவர்கள் நிலைத்து நிற்க முடியாது, தங்கள் உயிரை துச்சமென கருதி தேவனுடைய ராஜியத்துக்காக உண்மையும் உத்தமுமாக தேவ சித்தப்படி ஊழியம் செய்கிறவர்கள் மாத்திரமே நிற்க முடியும். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ வல்லமையை பெற்று பரிசுத்த ஆவியானவர் குரலை கேட்டு அதன்படி செய்கிறவர்கள் மாத்திரமே நிலை நிற்க முடியும் அவர்கள் தான் இயேசுவை தனக்கு முன்பாக வைத்திருப்பார்கள், அவர்கள் தான் அசைக்கப்பட மாட்டார்கள் ஊழியங்களுக்கு எதிரான தடைகள் தீவிரப்படுத்தப்படும்.
 
ஒரு பெரிய டிரக் போன்ற வாகனத்தில் டிரைவருக்கு அடுத்து தேசத்தின் பிரதானமானவர் அமர்ந்திருக்கிறார் ஓடி கொண்டிருக்கிற அந்த வாகனத்தில் அநேக ஊழியக்காரர்கள் பிடித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை ஒவ்வொருவராக அடித்து தூக்கி வெளியே வீசுகிறார்கள் எங்கு பார்த்தாலும் அழுகையின் சத்தம் இப்படியான ஒரு தரிசனத்தை தேவன் ஜெபித்து கொண்டிருந்த ஒருவருக்கு காண்பித்திருக்கிறார். அவர் சொன்னார்....நான் பார்த்தது தெளிவான தரிசனம்,நேரில் பார்ப்பது போலவும் ...எனக்கு முன்பாக நடந்தது போலவும் தெளிவான தரிசனத்தை கண்டேன் என்றார். சபைகளுக்கு நெருக்கடி வந்தாலும் அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போல வீடுகள் தோறும் அப்பம் பிட்கும் நாள்கள் வரும். அநேகர் தேவனுக்காக வைராக்கியமாக எழும்புவார்கள் இரத்தசாட்சியாக மரிப்பார்கள், மறு பக்கம் அநேக பிற மதத்தினர் இயேசு கிறிஸ்துவை முகமுகமாக காண்பார்கள் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை ஒவ்வொருவர் மேலும் ஊற்றப்படும் அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போல தேவன் கிரியை செய்வார். இயேசுவுக்காக எல்லாரும் வைராக்கியமாக ஊழியம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால்? கர்த்தர் அவர்கள் மூலமாக கிரியை செய்வார் அரசாங்கம் திகைத்து போய் விடும், இதுவரையில் இல்லாத அளவு ஆத்தும அறுவடையும் அற்புத அடையாளங்களும் இந்தியாவில் நடக்கும் அதற்கு விலைக்கிரயமாக அநேக பரிசுத்தவான்கள் தங்கள் ஜீவனையே கொடுப்பார்கள். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மாற்கு 8-35 என்று இயேசு சொன்னதை புரிந்து கொண்டீர்களா? என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; எழுப்புதல் காலத்தின் உபத்திரவத்தில் தேவ ஜனங்கள் உலக சந்தோஷத்தை விட்டு விட்டு பரலோகத்தில் பலன் மிகுதியாயிருக்கும் காரியங்களுக்கு மாத்திரம் பிரயாசப்படுவார்கள்.பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் ஆத்தும இரட்சிப்புக்காக தங்கள் ஜீவனையும் கொடுப்பார்கள். அன்றைக்கு உபத்திரவத்தின் போது ஸ்தேவானின் கண்கள் திறக்கப்பட்டு வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனை தரிசித்தது போல ஒவ்வொருவருடைய இலக்கும் உலகத்தை விட்டு பரலோகத்துக்கு ஆவியானவரால் திருப்பபடும். அநேகருடைய தரிசன கண்களை ஆவியானவர் திறப்பார். நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசெயர் 3:1-2. 
 
ஒரு பக்கம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தபடாதவர்களின் அவ்விசுவாசத்தினாலே அவர்கள் இருதயம் சோர்ந்து போகும் ஆனால் மறு புறம் தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ வல்லமையை பெற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்து ஜெயம் கொள்வார்கள். அல்லேலூயா.

மத்தேயு 19-30 ல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். ஆவியில் அனலாயிருங்கள். ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள் உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள் என்று பவுல் எழுதுகிறார். வரும் உபத்திரவ காலத்தை மேற் கொள்ளும்படியாக நம்மிடம் உள்ள பிரிவினைகளை களைந்து போட்டு விட்டு தேவசமூகத்தில் காத்திருப்போம். தேவ வல்லமையை பெற்று கொள்வோம். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்வோம். ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:13 ஆமென்.
 
ஜெயம் கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. வெளி 2-11.அல்லேலூயா