top of page

உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல !!?
இணையத்தளங்களில் நாம் எதை பதிவிடுகிறோம்? எதற்காக பதிவிடுகிறோம்? எதை பிறருக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்? தேவனால் அழைக்கப்பட்ட நமக்கு கொடுக்கப்பட்ட Assignment என்ன?தேவன் நமக்கு கொடுத்த பணி என்ன? அழைப்பு என்ன?அதை செய்கிறோமா? பரலோகம் போவோம் என்று சொல்லி கொள்கிற நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?.
பிரியமானவர்களே இந்தியாவில் ஊழியத்துக்கு எதிராக பெரிய உபத்திரவம் வருகிறது. அன்றைய ரோம அரசாங்கத்தை போல ஆளும் அரசாங்கமே ஊழியங்களுக்கும் ஊழியக்காரர்களுக்கும் எதிராக செயல்பட போகிறது நாம் உபவாசத்தோடு ஜெபிக்க வேண்டிய காலம். பிரியமான ஊழியக்காரர்களே சபையை... குடும்பங்களை உபவாசித்து ஜெபிக்க சொல்லுங்கள் இன்றைக்கு நமக்கு முக்கியமானது கண்ணீரின் ஜெபம்.இன்றிலிருந்து இதை செயல்படுத்துவோம் வட இந்தியாவில் குடும்பத்தோடு ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களை பற்றிய பாரம் கவலை நமக்கு இல்லை!! நம்முடைய ஊழியங்களை அறிவிப்பதற்கும் நம்முடைய கொள்கைகளை திணிப்பதற்கும் பிரயாசப்படுகிறோம். இணையதளங்களில் நம்மை பற்றியும் நம்முடைய ஊழியங்களை பற்றியும் மேன்மை பாராட்டி கொண்டிருக்கிறோம். இன்றைக்கு ஆண்டவர் இந்தியாவில் என்ன நடக்க போகிறது என்பதை குறித்து சாதாரண விசுவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் ஜெபிக்கும்படி ஏவுகிறார் இனி காலம் செல்லாது. இந்தியாவுக்காக வெளி நாடுகளில் உள்ளவர்கள் பாரத்தோடு ஜெபிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவுக்காக உபவாசத்தோடு ஜெபிக்க ஆரம்பியுங்கள் அது இன்றே தொடங்கட்டும் உங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கப்படட்டும் அனைத்து சபைகளும் ஊக்கமாய் ஜெபிக்கும் காலம் அரசியல்வாதிகளையும்,பிற மதத்தினரையும் பற்றிய விமர்சனங்களை பதிவிடுவதை தவிர்ப்போம்.
அமெரிக்க தேசத்தின் தூதரை அல்லது அங்கு வேலை செய்கிறவர்களின் செயல்பாடுகளில் ஒரு வித்தியாசம் இருக்கும் அவர்களது ஜனாதிபதி எதை செய்ய விரும்புகிறாரோ அதை வெளிப்படுத்துவார்கள். ஒரு உயர்ந்த ஸ்தாபனத்தில் வேலை செய்கிறவரின் செயல்பாடுகள் எவ்வளவு உயர்வாக இருக்கும்?? இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்? நாம் வானத்தையும் பூமியையும் படைத்த பரலோக தேவனின் வேலைக்காரர்கள் அல்லவா? தேவனால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டவர்ள் அல்லவா?பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தபடுகிற நம் செயல்பாடுகளில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை வெளிப்பட வேண்டும். நம்முடைய நினைவுகள் எண்ணங்கள் வழிகள் எல்லாம் தேவன் எதை நினைக்கிறாரோ அதை சார்ந்து தானே இருக்க வேண்டும், பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது ஏசாயா 55:9.
நம்முடைய நினைவுகளும் வழிகளும் பரலோகத்தை நோக்கி இருக்கட்டும். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9 இந்த வசனத்தில் அவர் அழைத்த அழைப்பின் அதிகாரங்கள் எப்படிப்பட்டது என்பதை விளங்கி கொண்டீர்களா?அந்த அழைப்பின் ரகசியங்களை அறிந்திருக்கிறோமா? நம்மை நிதானித்து பார்ப்போம்.
இன்றைக்கு தேவனுக்கு தேவை தேவ சமூகத்தில் உபவாசத்தோடு தரிந்திருந்து ஜெபிக்கும் கடைசி கால ஜெப வீரர்கள் தீங்கு நாள்களில் பிசாசின் தந்திரங்களை எதிர்க்கவும்,மேற் கொள்ளவும் தேவ னுடைய சர்வாயுதவர்கத்தை அணிந்து கொண்ட கடைசி கால யுத்த வீர்ர்கள் வரும் காரியங்களை அறிந்து கொண்டு சபைக்கு சொல்லும் கடைசி கால தீர்க்கதரிசிகள்.பிரியமான ஊழியக்காரர்களே, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் யுத்தம் செய்யும் காலம்.
பிரியமானவர்களே உங்களை அழைத்த தேவன் வரும் உபத்திரவ காலத்தில் உங்களை என்ன செய்ய சொல்கிறார் என்பதை குறித்து அறிந்து கொள்ள ஜெபத்தோடும் உபவாசத்தோடும் அவர் சமூகத்தில் காத்திருங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். எபேசியர் 6:18.கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுங்கள். ஆமென்.



bottom of page