ஊழியக்காரர்கள் போர்வையில் மந்திரவாதிகளும்....!
ஜனங்களை வஞ்சிக்கிறவர்களும்....!
ஒருமுறை ஒரு ஊழியர் மந்திரவாதியாக இருந்து ஊழியம் செய்கிற ஒருவரது சாட்சியை ஐ You tube ல் பார்த்து அவரை ஊழியத்துக்கு வரும்படியாக கேட்டிருந்தார், அவரும் சரி வருகிறேன் என்று சொன்னார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் கூட்டத்தை உடனே ஏற்பாடு பண்ன முடியவில்லை! எனவே அவருக்கு "Phone செய்து இரண்டு மாதங்கள் கழித்து நான் ஏற்பாடு செய்கிறேன் கர்த்தர் சுவிசேஷத்தின் வாசலை திறக்கும்படிக்கு நீங்களும் ஜெபியுங்கள் என்று சொன்னார் அன்று இரவு சுமார் 12 மணியளவில் இவரையும் இவரது குடும்பத்தையும் சபிக்க ஆரம்பித்தார் இவர் அதிர்ச்சியடைந்து விட்டார்..... அவர் சபித்தது ஒரு மந்திரவாதி சபிப்பது போலிருந்தது. மேலும் அவரிடம் இருந்தது பரிசுத்த ஆவி இல்லை, அவர் ஒரு மந்திரவாதியை போல பேசினார் பயங்கரமான சாப வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தையும் சபித்தார் அவரது குரல் மிகவும் பயமுறுத்தும்படியாக இருந்தது என்றார் அவர் கருப்பு கண்ணாடி அணிந்து விமானத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த photo ஐ தன்னுடைய Profile Picture ல் வைத்திருந்தார், கலர் கலராக பளபளப்பான மின்னும் உடையணிந்து ஒரு மேஜிக் கலைஞரை போல தான் ஊழியத்துக்கு போவார். மேலும், போகும் இடத்தில் தான் அணிந்திருக்கும் உடையை போன்ற ஒரு உடையை அங்கிருக்கும் ஊழியக்காரருக்கு கொடுத்து அதை அணியச் சொல்வார். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். மத்தேயு 7-15.இயேசு சொன்ன இந்த வசனத்தின் கடைசியில் உள்ளத்திலோ பட்சிக்கிற ஓநாய்கள் என்பதை புரிந்து கொண்டீர்களா?
சபைகளை நடத்தும் ஊழியக்காரர்களே உங்கள் சபை மக்களை குறித்த உத்தரவாதம் உங்களிடம் இருக்கிறது வஞ்சிக்கப்பட்டு போகாதீர்கள். இணையத்தளங்களில் தங்களை ஹீரோக்களாக காட்டி கொள்ளும்படியாக பதிவிடப்படும் Video க்களை பார்த்து ஏமாந்து போய் விடாதீர்கள் குறிப்பாக மந்திரவாதிகளாக இருந்து இரட்சிக்கபட்டோம் என்று சொல்கிறவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் இப்படிபட்ட சிலர் முந்தைய மந்திரவாத வல்லமைகளாலும் குறி சொல்லும் ஆவிகளாலும் ஊழியக்காரர்கள் போர்வையில் பிசாசை துரத்துகிறவர்களாகவும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவும் வலம் வருகின்றனர் இப்படிபட்ட ஆவிகளை உடையவர்களை நீங்கள் பிரசங்க மேடையில் பயன்படுத்தும் போது இவர்களிடம் இருக்கும் ஆவிகள் பலவீனமாக இருக்கும் சபை ஜனங்களை ஆளுகை செய்யக்கூடும் மேலும், இவர்களிடம் இருக்கும் பொல்லாத சர்ப்பத்தின் ஆவிகளால் ஆளுகை செய்யப்பட்டவர்கள் அந்த சபைக்கு எதிராகவும் ஊழியக்காரருக்கு எதிராகவும் செயல்பட்டு பிரிவினையை உண்டாக்கி சபை தன் ஐக்கியத்தை இழந்து உடைந்து போன பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மேலும், இத்தகய அசுத்த ஆவிகளை உடையவர்கள் ஊழியத்தில் பயன்படுத்தப்படும் போது சபை தன் பரிசுத்தத்தை இழக்க நேரிடும். (கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மாற்கு 13-22 தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை, அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். எரேமியா 14-14. கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2-1)
பிரியமான ஊழியக்காரர்களே உங்களிடத்தில் வரும் ஒவ்வொரு ஊழியக்காரர்களையும் பகுத்தறியுங்கள்.ஒரு வேளை அவர்கள் ஆட்டு தோலை போர்த்தியிருக்கும் ஓநாய்களாக இருக்கலாம்.ஆட்டு தோலை போர்த்தியிருக்கும் என்றால் சத்தியத்தை சரியாக போதிக்கலாம் ஆனால் உள்ளே இருக்கும் ஒநாயின் அதாவது வஞ்சிக்கும் ஆவியை பகுத்தறிந்து கொள்ளுங்கள்.கள்ள போதகர்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை அவர்கள் கனிகளினால் அறிந்து கொள்ளுங்கள்.ஒரு ஊழியக்காரனிடம் தாழ்மையும் தேவ அன்பும் இருக்கிறதா என்றும் அவர் தன்னை மேன்மைபடுத்தும் படி விளம்பரப்பிரியராக இருக்கிறாரா என்பதை நிதானித்து அறியுங்கள்.தன் பிரசங்கங்களிலும் பேச்சிலும் தேவனை உயர்த்துகிறாரா அல்லது மனித புகழ்சியை பெறும்படிக்கு செயல்படுகிறாரா??பணத்தை பெறும்படிக்கு தங்கள் ஊழியங்களை அமைத்து சுய சித்தம் செய்கிறாரா?என்பதை கண்டறியுங்கள் ஊழியக்காரர்களையும் ஜனங்களையும் சபிப்பது தூசிப்பது சதா காலமும் குறை சொல்லி கொண்டிருப்பது பிசாசின் குணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
(தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23-11 இயேசு கிறிஸ்து ஜனங்களை உள்ளான பரிசுத்தத்துக்குள் நடத்தாமல் வெளிப்புறமான பரிசுத்தமான பாரம்பரியத்துக்குள் நடத்தின வேதப்பாரகர்களையும் பரிசேயர்களையும் பார்த்து மாயக்காரனே என்றார்.இன்றைக்கும் பல ஊழியக்காரர்கள் சபை ஜனங்களை சத்தியத்துக்குள் நடத்தாமல் வெளிப்புறமான பாரம்பரிய சபை சட்டதிட்டமாகிய வெளிப்புறமான பரிசுத்தத்திற்குள் நடத்துகின்றனர். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.மத்தேயு 23-13.
இன்றைக்கு சிலர் ஊழியம் என்ற பெயரில் அநேக இடங்களில் Bible study என்ற பெயரில் நூதனமான புதிய உபதேசங்களை பிரசங்கித்து ஜனங்களை குழப்பி பரலோகத்துக்குள் பிரவேசிக்க முடியாதப்படி செய்கின்றனர்.இன்றைய நாள்களில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும்வல்லமையையும் ஜனங்கள் பெற்று கொள்ளாதபடிக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளுக்கு எதிராக போதிக்கிறவர்கள் கடந்து வருகிறார்கள்.
அடுத்ததாக, இயேசுவின் கர்த்தத்துவத்தை மறுதலிக்கும் யேஹோவா சாட்சிகள்,மற்றும் பிதாவை மறுதலிக்கும் Jesus only மற்றும் பரலோகத்துக்கு போவதற்கு பாவம் தடையில்லை போன்ற கள்ள உபதேசங்கள் தீவிரித்து வருகிறது. இதில் அநேக வாலிபர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உங்கள் போதகர் அனுமதியின்றி எந்த Bible study க்கும் அனுப்பாதீர்கள் ஆட்டு தோலை போர்த்தி ஜனங்களை வஞ்சிக்கிற உபதேசிகளையும் கள்ள போதகர்களையும் தங்கள் சபையில் அனுமதித்து ஜனங்கள் வஞ்சிக்கப்பட காரணமாயிருக்கும் அந்த சபையின் மேய்ப்பன் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் கள்ள உபதேசங்களும் நூதனமான போதகங்களும் தீவிரித்து வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பிரியமான சபை போதகர்களே விசுவாசிகளே கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். மேலும், அவர்களை உங்கள் சபையில் அனுமதிக்காதீர்கள். ஆமென்.