top of page

பாவம் பரலோகத்துக்கு தடையில்லையா??

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59-2) என்று தேவன் சொன்னார்.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. எபேசியர் 2-8. விலைமதிக்க முடியாத இரட்சிப்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இலவசமாக பெற்று தந்தார் தேவ பெலனை பெற்று கொண்டு சகல சத்தியத்துக்குள்ளும் நாம் நடத்தபடும்படியாக பரிசுத்த ஆவியானவரும் இலவசமாக நமக்கு அருளப்பட்டிருக்கிறார், இது தான் தேவன் நம் மேல் வைத்த கிருபை.

 

கையும் களவுமாக பிடிக்கப்பட்ட விபச்சாரத்தை செய்த பெண்ணை இயேசு கிறிஸ்து விடுவித்தார், அவளது பாவங்களை மன்னித்தார் உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார், இது தான் இரட்சிப்பு இது தான் பாவ பாரத்திலிருந்து விடுதலை அந்த பெண் எவ்வளவு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றிருப்பாள் கடைசியில் இயேசு அவளை பார்த்து இனி பாவம் செய்யாதே என்று எச்சரித்தார் இரட்சிக்கப்பட்ட உங்களுக்கு இந்த எச்சரிப்பின் சத்தம் செவிகளில் கேட்டு கொண்டே இருக்கட்டும். இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை பற்றி சொல்லும் போது அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் என்றார். (யோவான் 16-12).

இன்றைக்கு பரலோகத்துக்கு பாவம் தடையில்லை என்ற கள்ள போதகம் தீவிரித்து வருகிறது, பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான் உங்களை பாவம் செய்யலாம் என்று மறைமுகமாக போதிக்கிற ஆட்டு தோலை போர்த்தியிருக்கிற ஓநாய் பிசாசாய் இருக்கிறான் இத்தகயவர்களை பகுத்தறியுங்கள் சபையே,..ஜாக்கிரதை. தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,அவன் உங்களை விட்டு ஓடி போவான். இத்தகய மாயமாலமான பிரசங்கிகளை துரத்துங்கள்.

 

முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்னதை புரிந்து கொண்டீர்களா?அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார்.சந்திப்பின் நாளிலே இயேசுவின் நாமத்தை கொண்டு அற்புதங்கள் செய்த ஊழியக்காரர்கள் அவரை பார்த்து கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்திலே அற்புதங்களை செய்தோம் என்று கூப்பிட்ட போது அக்கிரம செய்கை காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று இயேசு சொல்வதை கவனித்தீர்களா? பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது.நான் பரிசுத்தர். அது போல உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள் என்று தேவன் சொல்லியிருக்கிறார். அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12. என்று வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து சொன்ன எச்சரிப்பின்  வார்த்தைககளை கவனியுங்கள். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12:48. என்று இயேசு சொன்ன வசனத்தின் படி அவர் கட்டளையிட்ட காரியங்களுக்கு கீழ்படியுங்கள்.

 

இனி காலம் செல்லாது....ஆமென்

bottom of page