எச்சரிக்கை!!!?

ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும்

விலைக்கு வாங்கும் கள்ள ஸ்தாபனங்கள்.

 

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்  அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

2 பேதுரு 2-1 கடைசி காலத்தில் உங்களுக்குள்ளே கள்ள போதகர்கள் இருப்பார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். இன்றைக்கு கள்ள போதகத்தை பரப்பும்படிக்கு கள்ள ஸ்தாபனங்கள்  தீவிரித்து வருகிறது இந்த ஸ்தாபனங்களின் உறைவிடம் அமெரிக்கா இவர்கள் கொள்கைகளை  படித்து பார்த்தால் அதில் இயேசு கிறிஸ்துவின்  பெயர் இருக்காது  இவர்கள் வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களின் முழங்கால்கள் யாவும் முடங்கும்  எல்லா நாமத்துக்கும் மேலான நாமமான இயேசுவின் பெயரை புறக்கணிக்கிறார்கள், இவர்கள் ஓரின சேர்க்கைக்கு Support பண்ணுகிறார்கள், இவர்கள் ஏராளமான பணத்தை விதைக்கிறார்கள, இவர்கள் இந்தியா முழுவதும் தீவிரித்து வருகிறார்கள். சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் அதாவது துபாயில் தங்கள்  தலைமையிடத்தை ஸ்தாபித்து அங்கு ஒரு பிஷப்பை  ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

இவர்கள் அநேக ஊழியக்காரர்களை அணுகி தங்கள் ஸ்தாபனத்தோடு இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் தருகிறோம் நீங்கள் எங்கள் ஸ்தாபனத்தில் இணைந்து கொண்டால் உலக அளவில் நடக்கும் எங்கள் conference களில் எந்த செலவில்லாமல் கலந்து கொள்ளலாம் மேலும் உங்களுக்கு சபை  கட்டுவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று ஆசை வார்த்தை காட்டி அநேகரை தங்களுடன் இணைத்தும் விட்டார்கள்.

 

இந்தியாவில்  அரசியல் அளவில் இவர்களுக்கு  தொடர்பு இருக்கிறது பெயரளவில் இவர்கள் பல எழைகளுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தாலும் இவர்களது உண்மையான குறிக்கோள் ஊழியக்காரர்களை மயக்கி சபைகளை ஆளுகை செய்து  ஜனங்களை வஞ்சிப்பது. இந்தியாவில் பல நகரத்திலும் சில ஊழியக்காரர்களை பிஷப் ஆக்கி அவர்களை வைத்து ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் விலைக்கு வாங்குகிறார்கள். 20 வருடங்களுக்கு மேலாக ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். பணத்துக்காகவும் பேர் புகழுக்காகவும்  பதவிக்காகவும் ஆசைப்பட்டு அநேகர் இதில் இணைந்து கொண்டிருப்பது தான் பரிதாபமானது.!!!   தங்களை உயர்த்தி கொள்ளும்படியான பெருமையின் ஆவியை உடையவர்கள் இவர்கள் வலையில் எளிதாக விழுந்து விடுகிறார்கள். இன்றைக்கு பல ஊழியக்காரர்கள் இதில் இணைந்த பிறகு வெளிநாடுகளுக்கு சாதாரணமாக Conferance க்காக போவதை இணையதளங்களில் பார்க்கலாம். ஆனால் இவர்கள் இணைந்திருக்கும்  ஸ்தாபனங்களில் மறைந்திருக்கும் வஞ்சகம் மிகவும் கொடியது. ஏனென்றால்? காலப்போக்கில் இவர்கள் தங்கள் அழைப்பை மறந்து இயேசுவின் கர்த்தத்துவத்தையும் அவரது இரண்டாம் வருகையையும் அசட்டை பண்ணுகிறார்கள். வேதாகமத்துக்கு எதிரான தங்கள் கொள்கைகளை மறைமுகமாக போதிக்கும் படியான கள்ள உபதேசம் இவர்கள் மூலமாக விதைக்கப்பட போகிறது.

 

கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் இணைத்து கிறிஸ்லாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? எல்லா மதங்களையும் ஒன்று சேர்க்கும் படி போப் செயல்பட்டு கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இயேசு கிறிஸ்து மாத்திரமே இரட்சிப்புக்கு வழி என்று பிரசங்கிக்க கூடாது.இயேசுவும் ஒரு வழி என்று பிரசங்கிக்க வேண்டும். பரிசுத்த வேதாகமம் மாத்திரம் கடவுளுடைய வார்த்தை என்று சொல்ல கூடாது. வேதாகமத்தில் கடவுளுடைய வார்த்தை இருக்கிறது மேலும் பிற மத புஸ்தகங்களிலும் கடவுளுடைய வார்த்தை இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.மேலும், கிறிஸ்து மாத்திரமே தேவன் என்று கிறிஸ்தவர்கள் நினைப்பதால் தான் மற்றவர்களின் கருத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். எனவே இயேசுவின் கர்த்தத்துவத்துக்கு எதிராக பல கொள்கைகளை  மறைமுகமாக போதிக்கிறார்கள்.

 

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.????

  1. திடீர் பிஷப்புகள் மற்றும் திடீர் போதகர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

  2. இணையதளத்தில் இவர்கள் தங்கள் பதவியேற்பு விழாவை பிரகடனம் செய்து தங்களை உயர்த்தி கொண்டு முதன்மையா இருக்க விரும்புகிறதை பகுத்தறியுங்கள்.

  3. இவர்கள் சார்ந்துள்ள ஸ்தாபனத்தின் கொள்கைகள் இயேசுவின் உபதேசத்துக்குட்பட்டு இருக்கிறதா என்பதை சோதித்தறியுங்கள்.

  4. வேத வசனத்தை ஆவியானவர் உதவியுடன் தியானியுங்கள்.

  5. வசனம் சொல்லாத யாதொன்றையும் ஒரு தேவ தூதனோ அல்லது ஒரு மனிதனோ சொல்ல கேட்டால் உடனே புறக்கணியுங்கள்.

  6. வேதபுரட்டர்களை கண்டு கொள்ளுங்கள்.கூடுமானால் அவர்களை கண்டித்து உணர்த்துங்கள் கேளாதபட்சத்தில் அவர்களை விட்டு விலகுங்கள். ஏனென்றால் உங்கள் ஆத்துமா உங்களுக்கு முக்கியம்.

  7. உங்கள் ஊழியரை வழிக்காட்டியாக வைத்து கொள்ளுங்கள். அதே சமயம் அந்த வழிக்காட்டி ஒரே வழியான இயேசுவை எப்போதும் கைக்காட்டுகிறாரா என்று கவனமாய் நிதானியுங்கள்.

  8. பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்று கொண்டு இயேசுவை சார்ந்து வாழுங்கள்.

ஆமென்.