top of page

தேவன் மேல் நிர்விசாரம்

 

 

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். எபிரேயர் 12 28 .

 

பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்று   வேதாகமம் சொல்கிறது. அப்போஸ்தலர் காலத்தில் யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. அப்போஸ்தலர் 9-11 என்பதை பார்க்கலாம். மேலும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்திவிருத்தியடைய ஏற்படுத்தபட்டது.ஆனால் இன்றைக்கு தேவனுக்கு பயப்பட கூடிய பயமும் தேவன் எதிர்பார்க்கும் பக்தியும் இன்றைய சபைகளில் இல்லை.10 மணிக்கு ஆராதனை என்றால் 10.30 மணி மேலும் 11 மணிக்கு ஆராதனைக்கு வருகிறார்கள்.ஒரு வார காலம் நமக்கு சுகத்தையும் பெலனையும் தந்து நம்மை பாதுகாத்த தேவனுக்கு ஆராதனை நேரத்தை முழுமையாக கொடுக்க முடியவில்லை.புறஜாதி ஜனங்கள் எவ்வளவு பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் தெய்வத்துக்கு முன்பாக நிற்கிறார்கள். நீங்கள் ஜீவனுள்ள தேவனை உங்கள் கிரியைகளினால் உதாசீனப்படுத்துகிறீர்கள்.

 

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை சங்கீதம் 16-8 என்று தாவீது சொல்கிறான். 

 

இன்றைக்கு தேவனை ஆராதிக்கிறோம் என்று சொல்கிறவர்கள் தங்கள் வருமானத்தையும் அதாவது தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை தங்களுக்கு முன்பாக முதன்மையாக வைத்திருக்கிறார்கள். தேவனை ஒரு வேலைக்காரனை போல கூப்பிட்டால் அவர் வந்து இவர்களுக்கு உதவி செய்வதற்கு  வைத்திருக்கிறார்கள். தங்கள் வருமானத்துக்கு முதலிடம் கொடுப்பதால் அநேகர் வேலையின் நிமித்தம் ஆலயத்துக்கு வருவதில்லை பலர் தகுதியில்லாத தங்களுக்கு தேவன் கொடுத்த வேலையை காரணம் காட்டி தேவனை ஆராதிக்க முட்டுகட்டை போடுகிறார்கள். விமான நிலையத்துக்கு போக வேண்டுமென்றால் மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே உங்களுக்கு போவதற்கு நேரம் இருக்கும்.ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு போகும் போது சரியான நேரத்துக்கு போய் உங்கள் cell phone களை off பண்ணிவிட்டு எவ்வளவு பயபக்தியோடு காத்திருக்க முடிகிறது. ஒரு நபரிடம் business order வாங்குவதற்கு எவ்வளவு பிரயாசம் எடுத்து கொள்கிறீர்கள் உலக காரியங்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் நீங்கள் சர்வ வல்ல தேவனுக்கு கொடுப்பதில்லை.தலைவலி உடல் வலி போன்ற பலவீனங்களை காரணம் காட்டி சபைக்கு வராமலிருக்கிற நீங்கள் என்ன பெலவீனமாக இருந்தாலும் வேலைக்கு போய்விடுகிறீர்களே.  ஏனென்றால் வருமானத்துக்காக அதாவது பணத்துக்காக தேவனை புறம்பே தள்ளிவிட்டீர்கள் என்பது தான் உண்மை.  இருதயத்தின் ஆழங்களை ஆராய்ந்து அறிகிற தேவன் உங்களை மாய்மாலக்காரனே என்று சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

 

ஆதியிலே நீங்கள் தாழ்ந்த நிலைமையில் இருந்த போது தேவனை முழு மனதோடு தேடினீர்கள்.அவரை அளவுக்கதிகமாக நேசித்தீர்கள்.அவர் கற்பனைகளை பெற்று கொண்டு அதற்கு கவனமாக செவிகொடுத்தீர்கள் ஆனால் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்தின போது அவரை உதாசினபடுத்த ஆரம்பித்துவிட்டீர்கள். உண்மை தானே?

உன்னை ஜெனிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய், உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். உபாகமம் 32-18.

 

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். ஓசியா 4-6.

 

அன்றைக்கு இயேசு கிறிஸ்து பேதுருக்கும் யோவானுக்கும் இரண்டு படகு நிறைய மீன்களை கொடுத்த போது அவர்கள் அவைகளை விட்டு விட்டு அவரை பின் தொடர்ந்தார்கள்.ஆனால் நீங்களோ தேவன் தந்த ஆசீர்வாதத்தை உங்கள் முன்பாக வைத்து கொண்டு அவரை பறம்பே தள்ளி விட்டீர்கள்.அப்படி தானே.சாத்தானும் அதை தான் விரும்புகிறான் என்பது உங்களுக்கு தெரியுமா?

 

என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். எரேமியா 2-13.

 

மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5    

                  

பிரியமானவர்களே, உங்களை நிதானித்து அறியுங்கள்!.. அன்றைக்கு தேவன் மேல் கொண்டிருந்த அன்பும் பக்தியும் நம்பிக்கையும் இன்றைக்கு எதன் மேல் வைத்திருக்கிறீர்கள்?. ஒரு வாரம் முழுவதும் தேவனை மறந்து விட்டு ஞாயிற்று கிழமை  சபையில் வந்து  நீர் மாத்திரம் போதும்...முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் என்று தேவனுக்கு முன்பாக பொய் சொல்லாதீர்கள். உலக ஆசீர்வாதத்தை நம்பி அதன் மேல் ஆசை வைத்து அவரை விட்டு பின்வாங்கி போன நீங்கள் உடனடியாக மனம் திரும்புங்கள். தேவன் மேல் கொண்டிருந்த இழந்து போன அன்பை புதுபித்து கொள்ளுங்கள்.  இது உங்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை.

 

நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.  ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:4,5 .  ஆமென்

bottom of page