பாழாக்கும் கொள்ளை நோய் தேசங்களை அசைப்பதற்கும் ஆராதனை தடை பட்டதற்கும் தேவ சித்தத்தை செய்யாத நாம் தான் காரணம்
இன்றைக்கு Corona வைரஸ் தாக்குதலினால் அநேக தேசங்கள் அசைக்கப்படுகின்றன. பல நாடுகளில் ஒரு மாதத்திற்கு ஆராதனை நடத்த அந்தந்த தேசங்களின் அரசாங்கங்கள் தடை செய்துள்ளனர். சில (அதிக)பிரசங்கிகள் பிசாசு தடை செய்து விட்டான் என்று சாத்தான் மேல் குற்றம் சுமத்துகின்றனர்.
நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் தேவ சித்தப்படி ஒழுங்காக சபையை நடத்தினீர்களா?காணிக்கை பணத்தை வீணாக்கி கொண்டு உங்கள் சபைகளில் அரசியல் பண்ணி கொண்டும் நீ பெரியவனா நான் பெரியவனா என்று சண்டை போட்டு கொண்டும் சர்வ வல்ல தேவனை மகிமைபடுத்தாமல் உங்களையும் உங்கள் சபைகளையும் உயர்த்தி கொண்டு ஆலயத்திலும் பெரியவரான தேவனை மகிமைபடுத்தாமல் இருந்தால் தடைகள் வர தான் செய்யும்.
-
சபைகளில் பிரிவினைகளை உண்டு பண்ணி கொண்டு உங்கள் சுய விருப்பத்தின் படி சபையை நடத்தி கொண்டு சாத்தானை குற்றம் சுமத்தாதீர்கள்.
-
இவ்வளவு நாள் ஊழியம் செய்து எதை சாதித்தீர்கள்.
-
அநேகர் உங்கள் சுயதிருப்திக்காகவும் சுய லாபத்துக்காகவும் ஊழியம் செய்தீர்கள்.
-
அநேக விசுவாசிகள் தங்கள் ஆடை அலங்காரங்களை காட்டி தங்கள் ஜீவனத்தின் பெருமையை காட்டுவதற்கு சபைக்கு வந்தீர்கள்.
-
ஆவியோடும் உண்மையோடும் நீங்கள் தேவனை ஆராதிக்கவில்லை.
-
பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர் சந்நிதியில் காணப்படவில்லை.
-
வசனத்துக்கு நடுங்குகிறவர்கள் இல்லை.
-
தேவனை விட தேவன் உங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதத்தை நேசித்தீர்கள்.
-
ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்று இயேசு சொல்லியிருக்க ஒருவரையொருவர் குறை சொல்லி தூசித்து சபையின் ஒருமனதை கெடுத்து போட்டீர்கள்.
-
சபைக்கு வந்த ஏழை ஜனங்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
-
எந்த நோக்கத்துக்கு தேவன் உங்களை கொண்டு சென்றாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
-
தேசத்துக்காக ஜெபிப்பதற்கு விசுவாசிகளுக்கு மறந்து போனது.
-
ஊழியக்காரர்களும் ஒன்று சேர்ந்து தேசத்துக்காக ஜெபிக்க வருவதில்லை.ஏனென்றால் நான் பெரியவன் என்கிற சுயம். ஊழியக்காரர்கள் தங்களை அழைத்த எஜமானனை விட பெரியவர்களாகி விட்டார்கள்.
-
ஊழியக்காரர்களிடம் மனத்தாழ்மை இல்லை.
-
மாம்சமும் மனசும் விரும்பினவைகளை ஊழியத்தில் செயல்படுத்தினார்கள்.
-
தேசங்களின் எழுப்புதலுக்காக அந்த தேசத்தின் அதிகாரிகளோ ஆளுகிறவர்களோ எதிர்த்து நிற்கவில்லை.... நீங்கள் தான் தடையாயிருந்தீர்கள்.
-
அந்த தேசங்களின் ஜனங்கள் இரட்சிக்க கூடாதபடி நீங்கள் தான் இடறலுண்டாக்கினீர்கள்.
இனியாவது மனம் திரும்புவோம். தேவனின் சித்தத்தை செய்ய ஆரம்பிப்போம். தேவ சமூகத்தில் நம்மை தாழ்த்தி நம் பாவத்துக்காக மனஸ்தாபப்பட்டு தேவன் நம்மை மன்னிக்கும் படி கண்ணீரோடு ஜெபிப்போம்.
சபைகளும் ஊழியக்காரர்களும் இல்லாமலே தேசத்தில் தேவனால் எழுப்புதலை கொண்டு வர முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?ஆராதனை தடைபட்ட நிலையில் இப்போதாவது எல்லாரும் வீட்டிலிருந்து தேசத்துக்காக ஜெபியுங்கள்.ஆமென்.