top of page

உலகத்தை சூழ்ந்த பயத்தின் ஆவி

 

 

பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார்.  சங் 91-3

 

அன்றைக்கு சங்கார தூதனால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆட்டு குட்டியின் இரத்தத்தினால் பாதுகாக்கபட்டது போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரியில் சிந்தின இரத்தத்தால் நாம் பாதுகாக்கப்படுகிறோம் என்று இருதயத்தில் விசுவாசித்து இயேசுவின் இரத்தத்தை தெளித்து ஜெபியுங்கள்.

 

நீங்கள் சுவாசிக்கும் மூச்சு காற்றின் மேல் இயேசுவின் இரத்தத்தை தெளியுங்கள். வாதை என் கூடாரத்தை அணுகாது பொல்லாப்பு எனக்கு நேரிடாது என்று விசுவாசத்தோடு அறிக்கை பண்ணுங்கள்.

 

அடுத்ததாக கர்த்தர், இந்த வைரஸ் நம்மை அணுகாதபடி நோய் எதிர்ப்பு சக்தியை ஒவ்வொருவருக்கும் தரும் படி ஜெபம் பண்ணுங்கள்.

 

இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.  சங்கீதம் 91-6

 

அடுத்ததாக இந்த வைரஸை கண்டு உலகமே பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறது.

பிசாசு இன்றைக்கு பயத்தின் ஆவியை ஒவ்வொருவர் மேல் அனுப்புகிறான். கர்த்தருடைய பிள்ளைகள் பயத்தின் ஆவியால் நிரப்பபடாதபடி பயத்தின் ஆவியை துரத்துங்கள்.

 

(உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41-13

 

நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள்.  ஆகாய் 2-5)

ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு.அல்லேலுயா.கர்தர் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் அன்பும் பலமும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார்.பரிசுத்த ஆவியால் நிறைந்து போராடி ஜெபிப்போம்

 

பயத்தின் ஆவியே என் மேல் உனக்கு அதிகாரம் இல்லை,இயேசுவின் நாமத்தினாலே உன்னை துரத்துகிறேன் என்று அதிகாரத்துடனே கட்டளையிட்டு ஜெபியுங்கள்.

 

இந்த வைரஸ் Multiple ஆகாதபடி மேலும் இதன்  தாக்கம் செயலிழந்து போகும் படி தேவன் தன் கரத்தை நீட்டும் படி ஜெபிப்போம். பாழாக்கும் கொள்ளை நோயிலிருந்து தேசத்தின் ஜனங்கள் தப்புவிக்கப்படும்படி விசுவாசத்தோடு உத்தரவாதம் எடுத்து தொடர்ந்து ஜெபியுங்கள்.

 

எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கண்ணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்.

2 நாளாகமம் 20-9

 

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் நாமம் தரிக்கப்பட்ட ஜனமாகிய நாம் தேவ சமூகத்தில் நம்மை தாழ்த்தி நாம் செய்த  பாவங்களுக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபிப்போம். ஆமென்.

bottom of page