top of page

நோய்க்கு பயப்படுகிறவன் தேவனுக்கு பயப்படுவதில்லை

 

கொரோனா குறித்த அரசு சட்டத்திற்கு கீழ்படியுங்கள், மரணத்தை குறித்த பயம் வேண்டாம் அது எப்படியும் வரும். ஆனால் ஆத்துமா மரணத்தை குறித்து பயப்படுங்கள், கொரோனாவை விடக்கொடியது பாவம் எந்த அறிகுறியும் இல்லாமல் ஆத்துமாவைக் கொன்றுவிடும்.  இன்றைக்கு அநேகர் ஆத்துமா மரித்தும் உயிரோடு வாழ்கிறார்கள்  வேதம் சொல்கிறது “ பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது, நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான், தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்,  ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஆதலால் எல்லாரும் தயவு செய்து கொரோனாவைக் குறித்து கவலைப்பட வேண்டாம் கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழுத்தைக் கூட்டுவான்.  தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள்,  அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுகப்படும்.

 

சகோதர சகோதரிகளே, கொரோனா பரவாமலும் , அதிலிருந்து பாதுகாக்கவும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவைகளை தவறாமல் மறுக்காமல் பின்பற்றுங்கள்,  ஆனால் உங்கள் ஆத்துமாவைக்குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாயிருங்கள்.  இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத்தெரிந்து கொண்டாள். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

கள்ள உபதேசங்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்….  இஸ்ரவேலரின் பாளையத்தில் சங்கார தூதன் வராமலிருந்தது வேறு, அவர்கள் அடிமைகளாயிருந்தார்கள். தேவன் அவர்களோடு நேரடியாக இடை பட்டார் மோசேயோடு முகமுகமாய் பேசினார்  ஆனால் இன்று நிலமையை நினைத்து பாருங்கள்….

 • உண்மை இல்லை

 • தேவனைத தேடும் உணர்வில்லை

 • பரிசுத்தம் இல்லை

 • தெய்வ பயம் இல்லை

 • ஒற்றுமை இல்லை

 • சகோதர அன்பு இல்லை

 • வேறுபாடுகள்

 • பொய்

 • ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்குவதில்லை

 • ஏற்றத்தாழ்வுகள்

 • பெருமை

 • பாகுபாடுகள்

 • ஒருவரை ஒருவர் நியாயந்தீர்க்குதல்

 • படித்தவன் படிக்காதவன ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம்

 • அனைத்து ஊழியக்கார்ர்களையும் குறை கூறி நியாயந்தீர்க்கிறது

 

உன் சத்துரு விழும் போது நகைக்காதே என்று வேதம் சொல்கிறது நாமோ நாங்கள் தான் சரி எங்கள் சபை தான் பரிசுத்தம் , பரலோகம் போகும் இன்னும் அவர்கள் நடத்தும் ஊழியங்களில் பங்கெடுக்கக்கூடாது. ஒரே மேடையில் அமர்ந்து ஒரே தேவனை ஆராதிக்கிறோம் ஆனால் ஊழியக்கார்ர்கள் ஒருவரிடம் ஒருவர் பேசுவதில்லை ஆனால் சேர்ந்து தேசத்திற்காக திறப்பிலே நிற்கிறோம், திறமைகளை காண்பிக்கிறோம் இன்னும் எத்தனையோ காரியங்கள் உண்டு, இதிலெல்லாம் மாறமாட்டோம் ஆனால் வாதை மட்டும் எங்களுக்குள்ளே வராதிருக்க வேண்டும்…….

 

எச்சரிக்கை இது கடைசிக் காலம் அழிவு வாசற்படியில் வந்து விட்டது, இரட்ச்சகரும் வரப்போகிறார் இனி தேவை என்ன என்பதை தீர்மானித்து கொள்வோம்……..!  நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. மரணமே வந்தாலும் தேவனை விட்டு பிரயாதிருப்போம். 

 

அப்படியிருக்க சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக .... ஆமேன்.

bottom of page