அந்த நாள்கள் குறைக்கப்பட வேண்டுமென்றால்!?

 

 

இந்தியாவில் தேவனுடைய கோபாக்கினை நியமிக்கப்பட்டுள்ளது.  (நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.  இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 23:35.36)

 

இந்திய தேசத்தில் இடது  கைக்கும் வலது கைக்கும் வித்தியாசம் தெரியாத பாவத்துக்கு அடிமைபட்டு  அந்தகார இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களை  என்னுடைய ஒளிக்குள் நடத்தும்படிக்கு  நான் அனுப்பின என் ஊழியக்காரர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்து அவர்கள் குடும்பங்களை சிதறடித்ததின் நிமித்தம் தேசத்தின் மேல் என் நியாய தீர்ப்பு உக்கிரமாக வருகிறது.என் ஜனங்களுக்கு நீதி செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய முடியாதபடிக்கு கொடிய உபத்திரவம் கடந்து வருகிறது.

 

ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை, தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். மத்தேயு 24:21-22. 

 

என்னால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களே உபவாச நாள்களை நியமியுங்கள் என் சமூகத்தில் கதறி அழுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.

 

(ஊழியக்காரர்களே வசனத்தை கேட்க கூடாத பஞ்ச காலமும் சபைகள் நடத்த முடியாத பயங்கரமான கொடிய நாள்களும் வந்திருப்பதை கண்டும் நீங்கள் இன்னும்  உணர்வடையவில்லையா?தேவ ஜனமே உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்? இணையதளங்கள் மூலம்  சபைகளை நடத்தி கொண்டிருப்பவவர்களே ஜனங்களை உபவாசித்து ஜெபிக்க செய்யுங்கள். உடனடியாக ஜனங்கள் நடுவே உபவாசத்தை கூறுங்கள். நாம் தேவ சமூகத்தில் நம்மை தாழ்த்தி தேசத்தின் பாவத்துக்காக கதறி அழுது ஜெபிப்போம்,  அப்பொழுது மாத்திரமே அந்த நாள்கள் குறைக்கப்படும்.) ஆமேன்.