top of page

இந்த உபவாச நாள்களில்

தேவனுடைய இரக்கத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

 

 

தேவ ஜனமே உன்னை பரிசுத்தப்படுத்து அற்புதங்களை காண்பாய்

 

(தேசமே உனக்கு ஒரு அறுப்பு காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.ஓசியா 6-11)

அதாவது தேவன் நம் தேசத்தில் எழுப்புதலை கட்டளையிட்டிருக்கிறார்.ஒரு பெரிய ஆத்தும அறுவடை நமக்கு முன்பாக இருக்கிறது.

தேவ சித்தத்திற்கு எதிராக நம்முடைய பாவங்களும் மீறுதல்களும் காணப்படுகிறது.

(அங்கே எப்பிராமின் வேசித்தனம் உண்டு ஓசியா6-10)

 

(உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தை போலவும் விடியற்காலையில் தோன்றும் பனியை போலவும் ஒழிந்து போகிறது.ஓசியா 6-4)

 

விபச்சாரரே விபச்சாரிகளே உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?யாக் 4-4. என் ஜனங்கள் நான் அவர்களை ஆசீர்வதித்ததை மறந்து உலகத்துக்கு சிநேகிதனாக மாறி போனார்கள்.உலகத்தால் தங்களை கறைப்படுத்தி கொண்டார்கள்.(உலகத்தால் கறைபடாதபடிக்கு தன்னை காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பத்தியாயிருக்கிறது.)

இன்றைக்கு உலகத்தை சிநேகிப்பதை விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்புவோம். உங்களை பரிசுத்தம் பண்ணி கொள்ளுங்கள் நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வார்.யோசுவா 3-5. 

தேவ ஜனமே உன்னை பரிசுத்தப்படுத்து. பாவத்தை அறிக்கையிடு,மனம் திரும்பு தேவனுக்கு பிரியமில்லாத பொல்லாத வழிகளை விட்டு தேவனிடத்திற்கு வா.  உனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக உன் கண்களை ஏறெடுத்துப் பார்.

 

சபையே பலிப்பீடத்தை செப்பனிடு

சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1

 

தேவனுக்கு பிரியமானதை செய்யாத நாம் தேவ சமூகத்தில் கதறி அழுவோம். ஒப்புகொடுப்போம். இயேசுவே ஒரு தடவை உம்முடைய கல்வாரி இரத்தத்தால் எங்களை பரிசுத்தப்படுத்தும். உம்முடையகல்வாரி இரத்தத்தால் எங்களை கழுவி கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் உமக்கு முன்பாக நிற்கும் படி எங்களை மாற்றும். பரிசுத்த ஆவியானவரே பரிசுத்தமாகுதலின் புதிதாகுதலுக்குள் எங்களை நடத்தும். எங்கள் மனதை உம்முடைய பிரசன்னத்தாலே புதிதாக்கும் எங்களை பரிசுத்தமும் உமக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்பு கொடுக்கிறோம். ஆமென்.

 

ஊழியக்காரர்களே, மூப்பர்களே, விசுவாசிகளே,  பலிகளை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய் துரோகம்பண்ணினார்கள். ஓசியா 6:6-7

 

நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், கொலோசெயர் 1-9.

என்னுடைய ஊழியத்தை செய்யும்படியாக என்னால் அழைக்கப்பட்டவர்கள் என் சித்தத்தை செய்யாமல் சுய சித்தத்தை செய்தார்கள். என்னோடு பேச கூட அவர்களுக்கு நேரமில்லை. என் சமூகத்தில் காத்திருப்பதில்லை ஏனென்றால் என்னை விட தங்கள் சபையையும் ஊழியத்தையும் நேசித்தார்கள்.பணத்துக்காகவும் புகழுக்காகவும் என்னை விட்டு தூரப் போனார்கள்.அவர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளை அறிந்து கொள்ளவில்லை. பலியை அல்ல காணிக்கையை அல்ல இரக்கத்தை அல்ல தேசத்தில் அவரது சித்தத்தை செய்வதையே அவர் விரும்புகிறார்.

 

ஊழியக்காரர்களே, மூப்பர்களே, தேவ சமூகத்தில் போய் நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டிருக்கிறோமா? அவர் அழைத்த அழைப்பை உணர்ந்து கொள்ளாமல் ஆதாமை போல மனுஷனுக்கு கீழ்படிந்து அவர் உடன்படிக்கையை மீறினோம்.

இன்றைக்கு தேவ சமூகத்தில் நம்மை தாழ்த்துவோம், அவரே சபைக்கு தலையாயிருக்கிறார். அவர் செய்ய சொன்னதை மாத்திரம் செய்யும்படியாக  நம்மை ஒப்பு கொடுப்போம் அவர் சொன்னப்படி நடுவோம் அவர் சொன்னப்படி நீர் பாய்ச்சுவோம் அவரே விளையச் செய்வார். இந்த தேசத்தில் ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களுக்காக ஜெபியுங்கள். ஊழியக்காரர்கள் அவரது சித்தத்தை அறியும் அறிவால் நிரப்பபட ஜெபியுங்கள்.

 

சர்வ வல்லமையுள்ள தேவனே என் எஜமானனே அண்ட சராசரங்களில் சிறிய துகள் போன்ற பூமியில் தூசியாகிய என்னை உம்முடைய வேலையை செய்ய அழைத்திருக்கிறீர். நீர் எனக்கு தந்த ஊழியத்தில் என் சுய சித்தத்தை செய்தேன் என்னை மன்னியும் நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்து என் மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்யாமல் உம் சித்தத்தை மாத்திரம் செய்வேன் என்று என்னை ஒப்பு கொடுக்கிறேன். ஆமென்.

 

ஒரு பின் மாரியின் மழையை போல நம்மிடம் வருவார்

 

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்,நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார், நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார், மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார், அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம், அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது, அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார். ஓசியா 6:2-3

 

பிரியமானவர்களே, அவர் நம்மை அடித்தார்,அவர் நம்மை குணமாக்குவார். நாம் யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடம் தானே இருக்கிறது உம் வசனத்தால் எங்களை உயிர்பியும் என்று கேட்போம் இரண்டாம் நாளில் ஆவியும் ஜீவனுமாயிருக்கிற வசனத்தால் நம்மை உயிர்பிப்பார்.

மூன்றாம் நாளில் அவரது ஆவியால் நாம் உயிரடையும்படிக்கு தேவனே உமது ஆவியால் எங்களை உயிர்பியும் என்று கேட்போம்.அவரது உயிர்தெழுதலின் வல்லமையால் நம்மை உயிர்பிப்பார்.

 

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள், நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள், இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 37:14.  நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன். என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். எசேக்கியேல் 38-26,27.  ஆமென்... அல்லேலுயா.

bottom of page