top of page

இதை விட கொடிய காலம்...

 

கர்த்தருக்கு ஸ்தோத்திரம், தேவனுடைய பிள்ளைகளே மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. நிச்சயமாகவே காலம் இனி செல்லாது  இன்று உலகை பயமுறுத்தும் இந்த பொல்லாத கொடிய கொரோனா வைரசைக் கண்டு நாம் எல்லாரும் கலங்கி கொண்டிருக்கிறோம்  அநேக பரிகாரங்களை தேடுகிறோம்  இன்றல்ல வேத காலத்திலிருந்தே  அப்படி தான்.

 

வேதத்தில் ஆசா என்கிற ராஜா செய்ததை பாருங்கள், ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு  அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது  அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான். ஆனால் ஆண்டவர் என்ன சொல்கிறார் பாருங்கள், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார், ஆகையால் முன்னெச்சரிக்கை தேவை தான் ஆனாலும் அவர் தம்முடைய பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது என்ன நாம் அவரை தேட வேண்டும் , சார்ந்து கொள்ள வேண்டும்  38 வருடங்கள் பெதஸ்தா குளத்தண்டையில் இருந்தவனை குணப்படுத்தி ஆண்டவர் சொன்னார், அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். இதன் அர்த்தம் நீ 38 வருடங்கள் வியாதியாயிருந்தாய் இப்போது சுகமாகி விட்டாய்  இனி நீ பாவம் செய்ய அதிக வாய்ப்புண்டு  ஆனால் ஒன்றை நினைத்துக்கொள்  நீ 38 வருடம் பட்ட பாடு அல்ல அதை விடவும் மோசமான காலம் வரப்போகிறது.  நியாயத்தீர்ப்பு  கர்த்தருடையநாள் வரப்போகிறது , கொடிய காலம் வரப்போகிறது ஆதலால் இனிப் பாவஞ்செய்யாதே.

 

அன்பானவர்களே, இதை விடவும் மோசமான காலம் வரப்போகிறது மனுஷர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால் அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன். அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும். அவர்கள் மாம்சம் எருவைப் போல் கிடக்கும். கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது. அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும். தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். இதோ சூளைளைப்போல எரிகிற நாள் வரும். அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள். வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும். அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய் கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

 

நாம் செய்ய வேண்டியது என்ன?????  வியாதி சில வேளைகளில் இப்படியும் வரலாம்  யோபுவுக்கும் வந்தது தேவன் அனுமதித்தார் எப்படி எந்த சூழ்நிலையிலும் என் பிள்ளை என்னை மறுதலிக்க மாட்டான் என்று சொல்லி நம் மேல் உள்ள நம்பிக்கையில் சாத்தானுக்கு சவால் விட அனுமதிக்கலாம் தேவனுக்கு அவ்வளவு நம்பிக்கை நம் மேல்  யோபுவைப் பாருங்கள்  சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்து விடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால்  அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி.: ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்ப விடு என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள், அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்: தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான். இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. சும்மா ஒன்றும் ஆண்டவர் யோபுவின் பின்னிலமையை முன்னிலமையை பார்க்கிலும் இரண்டத்தனையாய் ஆசீர்வதிக்கவில்லை, காரணம் இது தான் ..... நாம் எப்படி ???? இன்னும் பல காரணங்களாலும் வியாதிகள் வரலாம் உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால் கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து , நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார், அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும். மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள், அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

 

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப்பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும் ? கொஞ்சம் யோசித்து பார்ப்போம் நாம் செய்ய வேண்டியது என்ன ????  அவர் நம் அதிக நம்பிக்கையோடு உள்ளார்.  வேதம் சொல்கிறது, அவரை அறிந்து அவரை தேடின போது  அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர்குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.

 

கடைசியாக அன்பானவர்களே, ஆகையால் நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் தம்முடையவர்கள் மேல் எப்பொழுதும் நினைவாயிருக்கிறார் , அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.

 

கொரோனாவை கண்டு கலங்க வேண்டாம்,  இதை விட கொடிய காலம் வரப்போகிறது , அதற்கு தப்ப என்ன செய்ய வேண்டும்?   உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது, அறிந்து கொள்வோம். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாராக, ஆமேன்.

bottom of page