top of page

நீயும் மரிக்க வேண்டும்

 

இயேசு சிலுவையில் நமக்காக மரித்தார் என்று பல வருடங்களாக நாள்களை விஷேசித்து கொண்டிருக்கிறோம். இயேசு சிலுவையில் உலகத்தின் பாவங்களுக்காக மரித்தார் அவர் அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அதை விசுவாசிக்கிறவன் இரட்சிப்பை பெற்று கொள்கிறான். ஆனால் அவர் மரித்தது போல நாமும் மரிக்க வேண்டும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். (ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.1 பேதுரு 2).

 

எனவே ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து சிலுவை  சுமந்தது போல சிலுவையை சுமப்பது மாத்திரமல்ல  சிலுவையில் அறையப்படவும் வேண்டும்.

 

(இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். என்றார்.மத்தேயு 16-38.

 

தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10-38.

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2-6).

 

இந்த வசனங்களை நன்றாக விளங்கி கொண்டீர்களா? தன்னை தானே வெறுப்பது என்பது நான் என்கிற நம் சுயத்தை சிலுவையில் அறைய வேண்டும்.தன்னை தானே வெறுப்பவன் தான் சுயத்தை சிலுவையில் அறைய முடியும்.உங்கள் சுய பெருமையை,ஜீவனத்தின் பெருமையை,ஆவிக்குறியவன் என்ற பெருமையை சிலுவையில் அறையுங்கள்.

 

அடுத்ததாக உலகத்தின்  ஆசை இச்சைகளே தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படியாதபடிக்கு உலகத்துக்கு ஒத்து போக செய்கிறது.

 (உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 1 யோவான் 2-15).

 

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கலாத்தியர் 6-14.

 

நீங்கள் கல்வாரி சிலுவையில் இரட்சிப்பை பெற்று தந்த இயேசுவிடம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் அன்பு கூறும் போது மாத்திரமே உலகத்தின் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைய முடியும். இல்லையென்றால் இயேசுவையும் உலகத்தையும் நேசிப்பீர்கள். இரண்டு எஜமானனுக்கு ஊழியம் செய்வீர்கள்.கடைசியில் இயேசுவின் உபதேசங்களுக்கு கீழ்படியாமல் உலகத்தை நேசிப்பீர்கள். விபச்சாரர்களே விபச்சாரிகளே உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்பதை அறியீர்களா?

 

உலகத்துக்கு சிநேகிதன் தேவனுக்கு பகைஞன்.

 

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். கலாத்தியர் 5-24. அதாவது தனக்காக வாழாமல்  ஆசை இச்சைகளை வெறுத்து கிறிஸ்துக்காக வாழ்வது, சுய சித்தம் செய்யாமல் இயேசுவின் சித்தம் செய்வது,இயேசுவின் உபதேசத்தில் நடப்பது, தன் ஜீவனை காப்பாற்ற விரும்புகிறவன் அதை இழந்து போவான் தன் ஜீவனை இழக்க  விரும்புகிறவன் அதை பெற்று கொள்வான்.

 

இப்பொழுது புரிகிறதா தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரனல்ல. இதுவரை எனக்காக வாழ்ந்து விட்டேன் இனி கிறிஸ்துவுக்காக வாழுவேன்.

 

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களா உலகத்துக்குறியவர்களா?கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல.உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

 

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான் 14-27.

 

இன்றைக்கு இயேசு வைத்து விட்டு போன சமாதானத்தை விரும்பாமல் அறியாமல் உலகம் தரும் சமாதானத்தை விரும்பின ஜனங்கள் இந்த கொள்ளை நோயினால் உலகம் தந்த சமாதானத்தை இழந்து போனார்கள் உலகமே அதன் சமாதானத்தை இழந்து போனது. 

வெளிப்படுத்தின விசேஷம் ஆறாம் அதிகாரத்தில் சிகப்பு குதிரையில் இருந்த தூதனுக்கு சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்து போடும்படியான அதிகாரம் கொடுக்கபட்டது  என்பதை புரிந்து கொண்டீர்களா.

 

(சங்காரம் வருகிறது, அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள், ஆனாலும் அது கிடையாது.  எசேக்கியேல் 7-25).

நீங்கள் நேசிக்கும் உலக சமாதானம் எடுத்து போடப்படும். எங்கும் திகிலும் பயமும் உண்டாகும்.

 

இயேசு உலகத்தின் பாவத்துக்காக மரித்தது போல நாமும்  பாவத்துக்காக மரிக்க வேண்டும்.நாம் பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்கும் படி அவர் மரித்தார் 1 பேதுரு 2-24.

 

நம்மை பாவம் ஆளுகை செய்கிறதா?அல்லது கிறிஸ்து ஆளுகை செய்கிறாரா?உங்களில் பாவம் இருக்கிறது என்றால் நீங்கள் இன்னும் பாவத்துக்கு மரிக்கவில்லை என்று தானே அர்த்தம்.செத்து போன உயிரற்ற சரீரம் சிந்தனையில் கூட பாவம் செய்ய முடியாது.அதே மாதிரி பாவத்துக்கு மரித்தவனை பாவம் ஆளுகை செய்ய முடியவே முடியாது.இயேசு சிலுவையில் அறையப்பட்டது போல நம் பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட வேண்டும்.இதை பவுல் அவருடைய மரணத்துக்குள்ளாக்கும் ஞானஸ்நானம் என்றார். (பார்க்க ரோமர் 6-4).

 

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 6:6.

 

ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. ரோமர் 6:12

 

இன்றைக்கு நம் சுய நீதியினாலே செய்கிற பாவத்தையெல்லாம் பாவமில்லை என்று சொல்கிறோம்.

 

கண்ணாடியில் நம் சாயலை பார்ப்பது போல வசனமாகிய கண்ணாடியில் உங்கள்  சுபாவத்தை நிதானித்து அறியுங்கள். இப்பொழுது உங்களுக்கு புரியும் உங்களிடம் இருப்பது கெட்டு போகிற மாம்சத்துக்குறிய பழைய மனிதனின் சுபாவமா? ஆவிக்குறிய கிறிஸ்துவின் சுபாவாமா?உங்களை பாவம் ஆளுகை செய்கிறதா?அல்லது கிறிஸ்து ஆளுகை செய்கிறாரா? கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; ஆமென். கலாத்தியர் 2:20

 

மேலும், கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ரோமர் 8:10.

 

 எனவே உலகத்தை நேசிக்கும் உங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையுங்கள். பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கும் உங்கள் பழைய மனுஷனையும் அவன் சுபாவங்களையும் சிலுவையில் அறையுங்கள். அவரது சாயலில் மருரூபமாகுங்கள்.அதற்காக தான் நாம் அழைக்கப்பட்டோம்.

 

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான் 14-27.

 

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. ரோமர் 14-17

 

இப்பொழுது உணர்ந்து கொண்டீர்களா? கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக.  ஆமென்.

bottom of page