top of page

மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்

 

 

தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக இயேசுவுக்குள் வாசமாயிருக்கிறது. கொலோசெயர் 2:9

 

இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்பாக பிரதான ஆசாரியன் இயேசுவை நோக்கி நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா என்று கேட்டான்.

 

அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:62)

 

வானத்தின் மேகங்கள் மேல் வருவதை காண்பீர்கள் என்று இயேசு கிறிஸ்து தான் மீண்டும் வருவதை பற்றி பகீரங்கமாக சொன்னார்.

 

மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று இயேசு சொன்னார்.

அவர் மரித்த போது கல்லறைகளும் திறந்தது.நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு உயிர்த்தெழுந்த  அநேக பரிசுத்தவான்கள் கல்லறைகளை விட்டு புறப்பட்டு எருசலேமிலே பிரவேசித்து அநேகருக்கு காணப்பட்டார்கள்.அவர் இரண்டாம் வருகையிலும் அதே மாதிரி நடக்கும்.

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.  1 கொரிந்தியர் 15-52

 

அவர் ஆதியும் அந்தமுமானவர்  தொடக்கமும் முடிவுமானவர்.அவர் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறவர்.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவர் என்று வெளி 1 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர்.அதாவது தேவனுடைய படைப்பில் முதலுமானவர்.கொலோசேயர் 1 ம் அதிகாரம் 15 ம் வசனத்தில் அவர் தேவனுடைய ரூபமும் எல்லா படைப்புகளிலும் முந்தின முதன்மையானவர்.

 

யோவான் 8-23 ல் இயேசு  யூதர்களை நோக்கி நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவனல்ல என்றார்.

யோவான் 8-58 ல் ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்றார்.அதை கேட்ட யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருக்ககூடும்.மேலும் அவர்கள் அவர் மேல் எறியும்படி கல்லுகளை எடுத்து கொண்டார்கள்.அவர் அந்த இடத்திலிருந்து மறைந்து போனார்.

 

யோவான் 1-2 ல் அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் படைக்கப்பட்டது.1ம் வசனத்தில் அவர்  வார்த்தையாக தேவனிடத்தில் இருந்தவர்.தேவனாயிருந்தவர்.

1-யோவான் 1-1,2 ல் ஆதியிலே இருந்த வார்த்தையை நாங்கள் கண்டோம்,எங்கள் கைகளினால்  தொட்டு பார்த்தோம்.அந்த ஜீவ வார்த்தையை குறித்து சாட்சி கொடுக்கிறோம்  பிதாவிடமிருந்து எங்களுக்கு வெளிப்பட்ட நித்தியமாயிருக்கிறவரை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று யோவான் சொல்கிறான்.

யோவான் 1-10 ம் வசனத்திலே அவர் உலகத்திலிருந்தார் உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று உலகமோ அவரை அறியவில்லை.

யோவான் 8-42 ல் நான் தேவனிடத்திலிருந்து(பிதா) வந்திருக்கிறேன்.நான் சுயமாய் வரவில்லை.அவரே என்னை அனுப்பினார்.யோவான் 15-5 ல் பிதாவே உலகம் தோன்றுவதற்கு  முன்பே நீர் என்னை  மகிமை படுத்தினீர்.அதே மகிமையியினால் என்னை மகிமைபடுத்தும் என்றார்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே இருக்கிறார்.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1-18.

 

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் 8:6

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் (எண்ணங்களில்) ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5:7.

அடுத்ததாக, யோவான் 3-31 ல் உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.என்று இயேசுவை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.மேலும் யோவான் 9 ம் அதிகாரத்தில் அவரால் குணமாக்கப்பட்ட பிறவி குருடனிடம் நீ தேவனுடைய குமாரனிடத்தில்  விசுவாசமாயிருக்கிறாயா என்று இயேசு கேட்டார்.37 ம் வசனத்தில் இயேசு அவனை நோக்கி நீ அவரை கண்டிருக்கிறாய்.உன்னுடனே பேசுகிறவராகிய நான் தான் அவர் என்றார்.

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,  தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

பிலிப்பியர் 2:6-7 அவர் சிலுவையின் மரணபரியந்தம் தன்னை தானே தாழ்த்தினார்.எனவே பி தாவாகிய தேவன் அவரை உயர்த்தி இயேசுவின் நாமத்தில் எல்லாரும் அவரை வணங்கும்படியாக இயேசு கிறிஸ்து கர்த்தெரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கு மேலான நாமத்தை அவருக்கு கொடுத்தார்.இதை குறித்து பேதுரு அப் 2-36 ல் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று சொல்கிறார்.

 

நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன், மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவான் 16:28)

 

மேலும், யோவான் 17-11ல் இயேசு கிறிஸ்து பிதாவை நோக்கி நான் இனி உலகத்தில் இருப்பதில்லை.உம்மிடத்திற்கு வருகிறேன் என்றார். யோவான் 6-61 ல் மனுஷ குமாரன் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும் என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார்.லூக்கா 24-51 ல் இயேசு சீஷர்களை ஆசீர்வதிக்கையில் அவர் பரலோகத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டார்.

மாற்கு 16-19 ல் அவர் பரலோகத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.

ஸ்தேவான் கல்லெறியப்பட்டு மரிப்பதற்கு முன்பாக பரிசுத்தாவியினால் நிறைந்தவனாய் அதோ வானங்கள் திறந்திருப்பதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்பதையும் கண்டான்.(பார்க்கஅப்7-55-56)

அடுத்ததாக, வெளி 1-18 ல் மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.என்று பரலோகத்திலிலருந்து  இயேசு கிறிஸ்து சொல்வதாக பார்க்கலாம். அல்லேலுயா.

 

பரலோகத்தில் ஆட்டு குட்டியானவர்(கர்த்தராகிய இயேசு கிறிஸ்து)சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய(பிதா) வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.மேலும் வெளி 7-10-11 ல் திரள் கூட்டமான பரிசுத்தவான்கள் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டு குட்டியானவருக்கும் இரட்சிப்பின் மகிமை உண்டாவதாக என்று துதித்தார்கள்.யோவான் பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவை கண்ட போது செத்தவனை போல அவர் பாதத்தில் விழுந்தான்.அவர் அவனை நோக்கி பயப்படாதே நான் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன் என்றார்.

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:21.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14-6

 

 கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெச 4-10

 

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 2 பேதுரு 3:10.

இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! 2 பேதுரு 3:11.

ஆகையால் பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3:14.  ஆமென்.

bottom of page