top of page

ஊழியக்காரர்களை நியாயம் தீர்க்க

உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

தேவராஜ்ஜியத்தில் ஊழியம் செய்கிற ஒருவர் பின்வாங்கி போகும் போதோ தவறாய் உபதேசிக்கும் போதோ தேவன் எவ்வளவு துக்கப்படுவார. அந்த துக்கம் அந்த பாரம் உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் இல்லை. விபச்சாரத்தை செய்த பெண்ணை கல்லெறிய வந்தவர்களை பார்த்து உங்களில் பாவம் இல்லாதவன் அவளை கல்லெறியட்டும் என்றார்.  இன்றைக்கு மற்றவர்களை குறை சொல்லும் நீங்கள் குறையற்றவர்களாய் கறையற்றவர்களாய் உண்மையும் உத்தமுமாய் பரிசுத்தவானாய் இருக்கிறீர்களா?

 

இன்றைக்கு நீங்களெல்லாரும் தேவனுடைய ஊழியக்காரர்கள் மேல் கல்லெறிந்து கொண்டிருக்கிறீர்கள். நியாயாதிபதியாய் மாறிவிட்டீர்கள். ஊழியக்காரர்களுக்கு அவர்களை அழைத்த எஐமானே உத்தரவாதி.இணைய தளத்தில் வாக்குவாதம் பண்ணி ஊழியங்களை தரக்குறைவாக விமர்சித்து பரியாசம் செய்து நீங்கள் செய்கிற தவறுகளினால் அநேக புறஜாதி ஐனங்கள் இடறலடைகிறார்கள். இதன் பழிகள் உங்கள் மேல் நிச்சயமாக வரும். இடறல் உண்டாக்குகிறவனை எந்திர கல்லில் கட்டி சமுத்திரத்தில் அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும் என்று இயேசு சொன்னார்.

 

சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. கலாத்தியர் 6 :1 தேவன் அழைத்த ஊழியக்காரன் தவறு செய்யும் போது அவரை பகீரங்கமாக எல்லாருக்கும் தெரியும்படியாக தூசித்து பரியாசம் பண்ணி அரசியல்வாதிகளை போல சத்தத்தை உயர்த்தி எல்லாரும் அவரை மட்டமாக கருதும் படி கிண்டல் பண்ணி பேச உன்னை அழைத்த தேவன் உனக்கு அனுமதி கொடுத்தாரா? தேவனுடைய ஊழியக்காரனாகிய நீ பின்வாங்கி போன அந்த ஊழியக்காரனுக்காக பாரத்தோடு கண்ணீரோடு ஜெபிக்கவில்லையென்றால் நீ எவைகளை குற்றமாக தீர்க்கிறாயோ அதே தவறை நீயும் செய்யும்படியான சூழ்நிலைக்கு அனுமதிக்கப்பட்டு நீயும் குற்றவாளியாக தீர்க்கப்படுவாய். (ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.


ரோமர் 2-1) மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான்தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே
ரோமர் 14 :4 நான் அழைத்த ஊழியக்காரர்களை நான் நியாயம் தீர்ப்பேன் என்று சொல்லியிருக்க நீங்கள் எந்த அதிகாரத்தில் அவர்கள் பேரை சொல்லி தரக்குறைவாக பரியாசம் செய்கிறீர்கள். (ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே, அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். ஓசியா 4) ஊழியக்காரனுக்கு தான் அதிக ஆக்கினை என்று வேதம் சொல்கிறது.அப்படியிருக்க நீங்கள் அவர்கள் தவறுகளை உலகமே அறியும்படி பதிவிட்டு அவர்களை குற்றப்படுத்தி கேவலப்படுத்தாதீர்கள்,உங்க மகனோ மகளோ தவறு செய்யும் போது அவர்களின் பேரை சொல்லி கேவலப்படுத்தி இணையத்தளத்தில் யாராவது பதிவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்.சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைகுற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தை குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.


யாக்கோபு 4 :11 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?


யாக்கோபு 4 :12. இன்றைக்கு நீங்கள் இணையதளத்தில் ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் பேரை சொல்லி தரக்குறைவாக பேசியதை பார்க்கும் அநேக புறஜாதி ஐனங்கள் பின்வாங்கி போகிறார்கள்.இதனால் இயேசுவின் நாமத்தை நீங்களே தூசிக்கிறீர்கள்.இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.அது உங்கள் வாழ்க்கையில் சாபமாக பிரதிபலிக்கும், (நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.


1 நாளாகமம் 16-22)எனவே தேவனுக்கு பிரியமில்லாத இந்த காரியங்களை விட்டு விலகி அவர்கள் மனம் திரும்ப ஜெபியுங்கள். நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.


1 சாமுவேல் 26-11.எனவே புறஜாதி ஐனங்கள் பின்வாங்கி போகும்படியாக மேலும் தேவநாமம் தூசிக்கப்படும்படியாக எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்.

bottom of page