top of page

ஊழியக்காரனே ஜனங்களின் இரத்தப்பழி உன் மேல் விசாரிக்கப்படும்

(அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16-8சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. 2 தீமோத்தேயு 4-2) இன்றைக்கு பல சபைகளில் ஊழியக்காரர்கள் பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்துவதில்லை.  இன்றைக்கு சபைகளில் பலர் மதுபானத்துக்கும் அசுத்த இச்சைகளுக்கும் அடிமையாகியிருக்கிறார்கள். இவர்கள் துணிகரமாக விபச்சாரம் செய்கிறார்கள். தொடர்ந்து பாவம் செய்து தங்கள் இருதயத்தை கடினப்படுத்திவிட்டார்கள். ஊழியக்காரர்களுக்கு இதெல்லாம் தெரிந்தும் இவர்களது பாவத்தை கண்டித்து உணர்துவதில்லை.

 

தேவ பிரசன்னம் இல்லாமல் இசையை நம்பி இன்னிசை கச்சேரிகளை போல ஜனங்களின் பொழுதை போக்கும் ஆராதனைகளும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாத பிரசங்கங்களும் இவர்களை பாவத்திலிருந்து விடுவிப்பதில்லை.கூட்டங்களுக்காக தங்கள் சுயசித்தத்தை செய்யும் இப்படிப்பட்ட மாயமாலமான பிரசங்கிகளினால் சபை ஐனங்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்இத்தகய பிரசங்கிகளை  தான் தேவன் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள் என்றார். இவர்களுக்கு தாங்கள் போகும் வழி எங்கே என்று தெரியாததால் சபை ஜனங்களையும் குருடர்களாக வைத்திருக்கிறார்கள். அன்று மனம் திரும்புங்கள்  என்று இயேசு சொன்ன எச்சரிப்பின் வார்த்தைகள் பரலோகராஜ்ஜியம் உண்மையிலே சமீபமான நிலையில் எச்சரிக்கும் வார்த்தைகள் சபைகளில் தொனிக்காதபடி பிசாசு வஞ்சித்துவிட்டான் . பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்து  சபை ஜனங்களை எச்சரித்து சொல்ல சொல்லும் வார்த்தைகளுக்கு எண்ணிக்கைக்காக ஊழியம் செய்யும்  இத்தகய பிரசங்கிகள் செவி கொடுப்பதில்லை. பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நீயாயதீர்ப்பை குறித்தும் தேவ வல்லமையோடு பிரசங்கிக்காவிட்டால் சபையில் உள்ள மற்ற ஜனங்களும் இந்த கொடிய பாவத்தில் வீழ்ந்து விடகூடும்.

 

ஊழியக்காரர்களே  ஊழியம் செய்யும் உங்களுக்கு தேவன் சொன்ன எச்சரிப்பை குறித்து மிகவும் கவனமாயிருங்கள் (,சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான், அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான், நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலைவைக்கும்போதும், அவன் சாவான், நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான், அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை, அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். எசே 4-18-20)

(என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.யாக் 3-1 ) பாவத்தை  கண்டித்து உணர்த்தாமல் ஜனங்களை சகல சத்தியத்துக்குள் நடத்தாமல் இழிவான ஆதாயத்துக்காக சபையை நடத்தும் ஊழியகாரர்களுக்காக அதிக ஆக்கினை வைக்கப்பட்டிருக்கிறது.எனவே ஊழியம் என்ற போர்வையில் உங்கள் மகிமைக்காக உங்களை   பிரபலப்படுத்தி ஜனங்களை வஞ்சிக்கும் ஊழியக்காரர்களே மனம் திரும்புங்கள். நீங்கள் ஊழியம் செய்துவிட்டு அதிக ஆக்கினையை அடைவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகம் போவது உங்களுக்கு நலமாயிருக்கும்.உன் ஊழியமே உனக்கு இடறலுண்டாக்கினால் அதை விட்டு விலகி சாதாரண விசுவாசியாக இருப்பது உனக்கு நலம். ஊழியம் என்பது பிசாசின் அதிகாரத்துக்கு விரோதமாக செய்யப்படும் யுத்தம்.அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு ஜனங்களை நடத்துவது.உன் பெருமைகளையும் நீ செய்யும் காரியங்களையும் உலகத்துக்கு காட்டி உன்னை பெருமைபடுத்துவதற்க்காக அல்ல. நான் ஒரு அப்பிரயோஜனமான ஊழியக்காரன் தேவனே என் மூலமாய் எல்லாம் செய்கிறார் என்ற மனத்தாழ்மையோடு அவர் செய்ய சொன்னதை மாத்திரம் நிறைவேற்றுவதே உண்மையான ஊழியம். தேவசித்தத்தின் படி ஜனங்களை நடத்தாவிட்டால் மேலும் ஊழியம் செய்யாவிட்டால் உனக்கும் உன் சந்ததியினருக்கும் சாபத்தை சேர்த்து வைக்கிறீர்கள்.,ஜனங்களின் இரத்தப்பழி உன்னிடம் கேட்க்கப்படும்,அது பயங்கரமாக இருக்கும்..(தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.லூக்கா 12-47)

 

எனவே பிரியமானவர்களே தேவன் உங்களை அக்கிரமகாரர்களே என்று சொல்லாதபடிக்கு அவர் சித்தப்படி ஊழியம் செய்யுங்கள்.

(பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.மத்தேயு 7 :21-23)

 

ஊழியக்காரர்களே இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். (கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன், .எரே 48-10.)

bottom of page