top of page

காணிக்கை விஷயத்தில் கவனமாக இருங்கள்

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

1 தீமோத்தேயு 6-10  நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

எபிரேயர் 13-5   பண ஆசை எல்லா அக்கிரமங்களுக்கும் காரணமாக இருக்கிறது.ஊழியங்களிலும் சபைகளிலும் பணத்தினாலே தான் பிரிவினைகள் ஏற்ப்படுகிறது. ஊழியம் செய்பவர்கள் கூட பண விஷயங்களில் உண்மையற்றவர்களாகவே இருக்கிறார்கள். பல ஊழியக்காரர்கள் தங்கள் சபை ஜனங்களை விட்டு விட்டு மூன்று மாதங்கள்  நான்கு மாதங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்து வருகிறார்கள்.தங்கள் ஊழியத்தின் ஆரம்ப நாள்களில் ஊண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்த ஊழியக்காரர்கள் தாங்கள் வளரும் போது பணத்தை சார்ந்து ஊழியங்களை அமைத்து கொள்கிறார்கள்.

பல ஏழை ஜனங்கள் கொடுக்கும் காணிக்கை  பணத்தை தங்கள் இச்சைகளை நிறைவேற்ற செலவு செய்கிறார்கள். தேவ நாமத்துக்காக கொடுத்த  காணிக்கைக்காக நன்றி என்று காணிக்கை வாங்கி விட்டு அதை தகாத விதமாக பயன்படுத்தும் போது தங்கள் பிள்ளைகளுக்கு சாபத்தை வைத்து போகிறார்கள். சபையின் காணிக்கை விஷயத்தில் உண்மையுள்ளவர்களாக இருங்கள்.  நீங்கள் தகாத விதமாக செலவு பண்ண கூடிய பணத்துக்கு நீங்கள் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். காணிக்கை பணத்தை தவறாக பயன்படுத்தி விரயம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் நஷ்டத்தை கொண்டு வரும். ஜனங்கள் கொடுக்கும் காணிக்கையை தேவ ஆலோசனையின் படி பயன்படுத்துங்கள்.

 

பண ஆசையினால் தேவ சித்தத்துக்கு மாறாக ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களே மனம் திரும்புங்கள். காணிக்கை பணத்தை திருடி நீங்கள் அனுபவிகிகிற காரியங்களில் தேவனுடைய கோபாக்கினை சாபமாக வெளிப்படும். விசுவாசிகள் கூட பண ஆசையினால் தவறான வழியில் வரும் பணம் தங்கள் வீட்டு வாசலில் சாபமாக படுத்திருப்பதை உணராமல் இருக்கிறார்கள். இன்றைக்கு தவறாக வந்த பணத்தினால் ஆசீர்வாதமாக இருக்கலாம் ஆனால் ஒருநாள் உங்கள் பிள்ளைகளில் மடிகளில் சரிகட்டும் போது உங்களால் தாங்க முடியாது. தேவன் உங்களை பணம் சம்பாதிப்பதற்காக ஊழியம் செய்ய அழைக்கவில்லை. ஆத்தும அறுவடைக்காக உண்மையாக ஊழியம் செய்ய அழைத்திருக்கிறார்.அப்படி செய்தால் இம்மையிலும் மறுமையிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.உங்கள் பிள்ளைகள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

எனவே தேவனுக்கு பிரியமில்லாத பண ஆசையை சிலுவையில் அறையுங்கள், சபையின் காணிக்கை மற்றும் பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள்.

bottom of page