சபைக்கு எதிரான அநேக பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் அநேக சபைகளுக்கும் வீடுகளில் நடக்கும் ஜெப கூட்டங்களுக்கும் பிரச்சனை வருவதற்கு அதிக சத்தத்தோடு இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் ஆராதிப்பதே முக்கிய காரணம். நாம் ஆராதிக்கும் போது பக்கத்து வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு உண்டாக்க கூடாது. Exam க்காக படிக்கிற பிள்ளைகள் இருப்பார்கள். அடுத்த நாள் அலுவலகத்துக்கு போகிறவர்கள் இருப்பார்கள். நாம் Sound System எல்லாம் வைத்து கொண்டு இரவு நேரங்களில் சத்தத்தோடு ஆராதிப்பது பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும். தன்னை போல பிறனை நேசி என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்றுகிறவர்கள் நிச்சயமாக ஆராதனை என்ற பெயரில் பிறரை தொந்திரவு செய்ய மாட்டார்கள். ஒரு முறை ஒரு இரவு ஜெபத்துக்கு சென்ற போது ஒரு வீட்டில் Sound system எல்லாம் வைத்து கொண்டு சத்தமாக ஆராதித்து கொண்டிருந்தார்கள். இரவு 2 மணி வரை பக்கத்து வீட்டில் தூங்கிகொண்டிருந்த ஜனங்களை பற்றி கவலைப்படாமல் ஆராதித்து கொண்டிருந்தார்கள். பிரியமான ஊழியக்காரர்களே சபைகளுக்கு உபத்திரவம் வரும் காலக்கட்டத்தில் ஞானத்தோடு நடந்து கொள்வது நல்லது. பிரச்சனைக்குறிய இடங்களில் இரவு நேர கூட்டங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்ததாக வீடுகளில் ஆராதிப்பவர்கள் மெதுவாக பிறருக்கு தொல்லை கொடுக்காமல் ஆராதிக்க வேண்டும். அது முடியாது நாங்கள் அப்படி தான் நடத்துவோம் என்றால் உங்கள் சபை பூட்டி சீல் வைக்கப்படும். ஏனென்றால் பிசாசானவன் அதிகாரத்தில் உள்ளவர்களை பயன்படுத்த்தும் காலம். ஊழியக்காரர்கள் அதிகாரத்தின் மூலம் சத்துரு கிரியை செய்வதை உணர்ந்து கொண்டு பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி சபையை நடத்த வேண்டும்,.
உங்கள் வைராக்கியத்தை காட்டி கொண்டு சத்தம் போட்டு ஆராதிப்பதை விட தேவ வசனத்துக்கு கீழ்படிவதிலும் தேவ சித்தம் செய்வதிலும் உங்கள் வைராக்கியத்தை காட்டுங்கள், அநேக தேசங்களில் அனுமதியில்லாத இடங்களில் உள்ள வீடுகளில் நடக்கும் ரகசியமான சபைகளில் யாரும் அறியாதபடி மெதுவாக ஆராதிக்கிறார்கள்.மேலும் அங்கு ஆவியானவர் பலமாக ஊற்றப்படுகிறார். அங்கு தான் அதிகமான ஆத்தும அறுவடை நடக்கிறது. அவைகளும் ஆவிக்குறிய சபைகளே.சாத்தான் நம் தேசத்தின் ஆளுகைகளை கையில் எடுத்த நிலையில் மிகவும் கவனமாகவும் ஞானமாகவும் சபைகளை நடத்துவது மிகவும் முக்கியம். அடுத்ததாக ஆராதனைக்கு விரோதமாக யாராவது பிரச்சனை பண்ணும் போது கூடுமானவரை சமாதானமாக போவது நல்லது.அடுத்ததாக பிரச்சனைக்காக ஜெபிப்பது பிரச்சனை பண்ணுகிறவர்களுக்கு எதிராக தேவனை கிரியை செய்ய வைத்துவிடும். அதற்க்கு மாறாக நாங்கள் யார் தெரியுமா என்று வீம்புகளில் மேன்மை பாராட்டி கொண்டு சண்டை போடாதீர்கள். நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல. ஆவி மண்டலத்திலுள்ள கண்ணுக்கு தெரியாத பிசாசின் அதரிசனமான எதிரிகளோடு.பலவானை முந்தி கட்டுங்கள் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தார்..(அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
மத்தேயு 12-29- பலவான் சபைக்கு எதிராக கிரியை செய்வதற்க்கு முன்பாக நாம் பலவானின் ஆயுதங்களை அழித்து விட வேண்டும். சபைகளுக்கு விரோதமாக பாதாளத்தின் வாசல்களில் செய்யப்படும் பிசாசின் வல்லமைகளை நாம் ஜெபத்தினால் மேற் கொள்ள முடியும். அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.
ரோமர் 12:11,12.)ஆவிக்குறியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிந்து செயல்படுவான். ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமும். சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரர்கள். ஆமென்.