top of page

பிறரை துச்சமாக மதிக்கும் ஜாதி வெறி உங்களை பரலோகத்துக்கு கொண்டு செல்லாது.

இன்றைக்கு அநேக புறஜாதி ஜனங்கள் கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை என்று நினைக்கின்றனர்.ஆனால் அநேக சபைகளில் ஜாதி பார்ப்பது மறைமுகமாக இருக்கிறது,மார்க்கபேதம் மற்றும் பிரிவினைகளையும் பண்ணுகிறவர்கள்  பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று வேதம்(௧லா 5-20,21) சொல்கிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கிறிஸ்துவை அறியாதவர் கெம்பீரமாக முழக்கமிட்டார். ஆனால் நாங்கள் தான் பரலோக தேவனுக்கு ஊழியக்காரர்கள் என்று சொல்லும் ஊழியக்காரர்கள் ஜாதி பார்ப்பதற்க்கு எதிர்த்து நிற்க்காமல் வாய்மூடி மௌனமாக இருப்பது தான் பரிதாபம்,.

 

மேலும் இவர்கள் ஏன் ஜாதி பார்ப்பது பாவம் என்று சபைகளில் வைராக்கியமாக சொல்வதில்லை தெரியுமா? ஜாதி வெறி தேவனுக்கு பிரியமில்லாத காரியம் என்று சொன்னால் சபையில் ஜனங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.ஏனென்றால் ஜாதியை நேசிக்கும் மாயமாலமான விசுவாசிகள் சபையை விட்டு போய்விடுவார்கள். மேலும் ஊழியக்காரர்களே திருமணத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி பார்ப்பது தான் கொடுமை. சபைகளில் ஜாதி பார்க்கிற இவர்கள் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் நிலை வரும் போது எங்க ஜாதி ஆட்களின் இரத்தம் தான் தேவை என்று சொல்வார்களா?சாககூடிய நேரத்தில் இரத்தம் அடைப்பதில் உங்க ஜாதி வைராக்கியத்தை காட்டுங்கள் பார்க்கலாம். பரலோகத்தில் கொள்வினை கொடுப்பனை இல்லை அங்கு எல்லாரும் தேவதூதர்களை போல இருப்பார்கள் என்று இயேசு சொன்னாரே. பரலோகத்துக்கு போக போகிறேன் என்று சொல்லுகிற நீங்கள் இருதயத்தில் ஜாதி உணர்வை வைத்து கொண்டு உன்னை போல பிறனை நேசி என்ற வேதாகமமே முழு தொகையாய் அடங்கியிருக்கும் இந்த கிறிஸ்துவின் உபதேசத்துக்கு  கீழ்படியாமல் எப்படி பரலோகம் போவீர்கள். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம் ஒரே ஆவியினாலே தாகம் தீர்க்கக்ப்பட்டோம் என்று சொல்லுகிற  நாம் ஜாதி உணர்வோடு தேவ சமூகத்தில் காணப்பட்டால் தேவன் நம்மை பார்த்து மாயமாலமானவர்கள் என்று நிச்சயம் நியாயம் தீர்ப்பார்.இன்றைக்கு அநேக கிறிஸ்துவை அறியாதவர்கள் சபைகளுக்கு வராததற்க்கு காரணமே சபைகளில் காணப்படும் நம்முடைய ஜாதிய உணர்வு. இன்றைக்கு அநேகர் இரட்சிக்கப்படுவதற்க்கு தடையாயிருக்கும் உங்கள் ஜாதி வெறி உங்களை பரலோகத்துக்கு போவதற்க்கே தடை செய்யும்.ஜாதி இனம் என்ற தேவனுக்கு பிரியமில்லாத பிரிவினைகளை சபைகளில் செயல்படுத்தி ஒருமனதுக்கு எதிராக ஜனங்களை பிரித்து கொண்டு மாயமாலமான கிறிஸ்தவர்களாக வாழாதீர்கள். தேவன் பட்சபாதம் இல்லாதவர் போல நீங்களும் பட்சபாதம் இல்லாதவராக இருங்கள். இல்லையென்றால் நியாயம் தீர்க்கப்படுவீர்கள். இன்றைக்கு உங்களிடம் காணப்படும் ஜாதி வெறியினால் பிற மதத்தினர் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதபடிக்கு அவர்களுக்கு இடறலுண்டாக்கும் உங்கள் கழுத்தில் எந்திர கல்லை கட்டி கடலில் அமிழ்த்துவது உங்களுக்கு நலமாயிருக்கும். (பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.

யாக்கோபு 2-9)புறம்பே இருப்பவர்கள் முன் யோக்கியமாக நடந்து காலத்தை பிரயோஜனபடுத்தி கொள்ளுங்கள் என்று வேதம் சொல்கிறது. (சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

ரோமர் 12-10)மேலும் ஒருவரிலோருவர் அன்பாயிருங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.இதற்கெல்லாம் தடையாயிருக்கும் கீழ்தரமான அருவருப்பான ஜாதி வெறியினால் தேவனுடைய உயர்ந்த கட்டளைகளை உங்களை அறியாமல் மீறுகிறீர்கள். ஜாதி வெறியினால் பிறரை துச்சமாக நடத்துகிறவர்களுக்கு பாதாளம் தன் வாயை விரிவாக திறந்து வைத்து கொண்டிருக்கிறது.சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்து ஜனங்கள் மற்றொரு மதத்திற்க்கு மாறினார்கள். அப்படி மாறின ஒருவரிடம் ஏன் நீங்கள் கிறிஸ்தவ மதத்திற்க்கு வரவில்லை என்று கேட்ட போது கிறிஸ்தவத்தில் ஜாதி என்ற தீண்டாமை இன்றும் இருக்கிறது என்றார்..

 

இன்றைக்கு அநேகர்  இயேசுவை ஏற்று கொள்வதற்க்கு நம் ஜாதி வெறி தடையாக இருக்கிறது.இதற்கு நாம் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். எனவே இந்த கடைசி காலத்தில் சபைகளில் ஜாதியை ஒழிக்க தீர்மானம் எடுப்போம். இந்த கடைசி காலத்தில் நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை.நாங்கள் தேவனால் அழைக்கப்பட்ட பரிசுத்த ஜாதி என்று அறைக்கூவல் விடுவோம்.

 

ஊழியக்காரர்களே உங்கள் சபைகளில் ஜாதி என்ற பிரிவினைகளிலிருந்து ஜனங்களை விலக்கி காப்பது உங்கள் கடமை. எனவே உங்கள் சபைகளில் யாரும் ஜாதி பார்க்க கூடாது என்று கட்டளையிடுங்கள். இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் நாம் நம்முடைய எந்த காரியத்திலும் ஜாதி பார்க்க கூடாது என்று தீர்மானம் எடுப்போம். ஆமென்.

bottom of page