top of page

தேசங்களுக்காக ஜெபிப்பவர்களை தேவன் தேடுகிறார்.

 

(அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, எபிரேயர் 5:7)

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பலத்த சத்ததோடும் கண்ணீரோடும் ஜெபித்ததை காணலாம்.அன்றைக்கு எருசலேம் நகரை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்,இன்றைக்கும் நமக்காக பிதாவிடம் பரிந்து பேசி கொண்டிருக்கிறார்.நேகேமியா என்ற மனிதன் தன் தேசத்துக்கு நேர்ந்த நிந்தையை அறிந்து சில நாள்களாய் துக்கித்து உபவாசித்து தேவனை நோக்கி மன்றாடினான். எஸ்தர் ராஜாத்தி மூன்று நாள்கள் புசிக்கவும் இல்லை குடிக்கவும் இல்லை தன் ஜனத்துக்கு விலைக்கிரயம் கொடுத்து ஜெபம் பண்ணினாள். இவர்கள் ஜெபித்த காரியங்களை தேவன் சந்தித்தார். இன்றைக்கு நாம் எங்கு போனாலும் சுயநலமான ஜெபத்தையே நாடுகிறோம். எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். வியாபாரம் தான் முக்கியம், பணம் வேண்டுமானால் ஊழியத்துக்கு தருகிறேன். என்று சொல்லி கொண்டிருப்பவர்கள் தான் அநேகம். சில ஊழியக்காரர்கள் தேசத்துக்காக ஜெபிப்பதற்கு தாங்களும் வருவதில்லை தங்கள் ஜனங்களையும் தடை செய்கிறார்கள். தேசம் அழிந்து கொண்டிருப்பதை உணராத சுயநலவாதிகள் தேசத்துக்காக மன்றாடி ஜெபிப்பதில்லை.மன்றாட்டு ஜெபம் என்பது ஆத்தும பாரத்தோடு கண்ணீரோடு ஜெபிப்பது.ஆத்தும பாரம் இல்லையென்றால் தேவ ஊழியத்தை செய்ய முடியாது ஆனால் உங்க சொந்த ஊழியத்தை செய்யலாம்.இன்றைக்கு நாம் சுயநலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுயநலமாகவே ஜெபித்து கொண்டிருக்கிறோம். ஊழியம் செய்தாலும் அதிலும் சுயநலமாகவே செயல்படுகிறோம். இந்த சுயநலத்தை விட்டு நாம் வெளியே வர வேண்டும். (என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும் என்றாள். எஸ்தர் 8:6)  

 

எஸ்தரை போல விலைக்கிரயம் செலுத்தி ஜெபிக்க கூடியவர்களை தேவனுடைய கண்கள் தேடுகிறது.இன்றைக்கு தேசத்தில் நடக்கும் அநியாயங்களுக்கும் அழிவுகளுக்கும் தேசத்துக்காக ஜெபிக்காத சபைகளும் ஊழியக்காரர்களும் தான் முக்கிய காரணம். இவர்கள்  தேவனை விட தங்கள் ஊழியங்ளை நேசித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தேவ ஆலோசனைகளை நிராகரிக்கிறார்கள். மேலும் அநேகர் தேவ நீதியை நிறைவேற்றாமல் தங்கள் சுயநீதியை நிறைவேற்றுகிறபடியால் தேவனுக்கு கீழ்படியாமல் இருக்கிறார்கள். (கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.எசேக்கியேல் 9-4)

 

பிரியமான தேவ ஜனங்களே ஊழியக்காரர்களே இந்த கடைசி நாள்களில் உங்கள் சொந்த ராஜ்ஜியங்களை கட்டுவதை விட்டு விட்டு  தேசத்தின் மக்கள் இரட்சிக்கப்படுவதற்க்காகவும் எழுப்புதலுக்காகவும் தேசத்துக்கு விரோதமாக தீவிரித்து வரக்கூடிய பொல்லாத காரியங்களுக்காக ஜெபியுங்கள். இந்த கடைசி நாள்களில் தேசத்தின் இரட்சிப்புக்காக தேவ சமூகத்தில் கதறி அழும் ஜனங்களின் நெற்றியில் முத்திரையிடப்படுகிறது இந்த கடைசி நாள்களில் தேசத்தில் நடக்கும் பொல்லாத காரியங்களுக்காகவும் அழிவுகளுக்காகவும் கண்ணீரோடு மன்றாடி ஜெபிக்கும் படி நம்மை ஒப்பு கொடுப்போம். (ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
லூக்கா 21-36)

bottom of page