top of page

நன்மையும் கிருபையும் என்னை தொடரும்

 

சங்கீதகாரன் சொல்லும் போது என் ஜீவனுள்ள் நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என்றார். அதாவது, நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் நற்கிரியைகளையும் அல்லது மன்னிக்கும் மாண்பையும் மாசற்ற நன்மைகளையும் வழங்கி செல்லும் ஓர் உன்னத வாழ்க்கை. அதாவது கிறிஸ்துவின் திவ்விய சுபாவம் நம்மிடமிருந்து புறப்பட்டு பிறருக்கு வெளிச்சமாக இருக்கும் ஒரு ஒப்பற்ற உயர்ந்த நிலையாகும். இன்றைக்கு இந்த ஜீவ நதியாகிய கிறிஸ்துவின் சாயலை அநேகரிடம் காணமுடியவில்லை.  (ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2-10.

புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.1 பேதுரு 2-12

 

இன்றைக்கு நம்முடைய நற்கிரியைகளினால் புறஜாதிகளுக்கு நாம் ஆசீர்வாதமாக இருக்கும்படி நாம் வாழ வேண்டும். அதாவது, நம் பேச்சும் செயலும் இயேசுவின் அன்பை காண்பிக்கிறதாக நாம் வாழ்கிறோமா?? இதுவே தேவனை மகிமைபடுத்தும் உன்னதமான சாட்சியுள்ள வாழ்க்கை.இதற்க்காகவே நாம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம். இதுவே நற்கிரியை செய்யும்படியான தேவனுடைய செய்கை. அல்லேலூயா. கொர்நேலியு வீட்டில் பேதுரு இயேசுவை பற்றி இப்படியாக சொன்னார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10:38

நாம் மெய்யாகவே பரிசுத்தாவியினால் நிரப்பபட்டிருந்தால் இயேசுவுக்கு சம்பவித்த இக்கிரியைகள் நமக்கும் சம்பவிக்கும். அதாவது தேவன் நம்மோடு கூட இருப்பார். நாம் சுற்றி திரிந்து நன்மை செய்கிறவர்களாயும் ஜனங்களை ஆசீர்வதித்து விடுவிக்கிறவர்களாயும் இருப்போம். ஒரு வேளை இந்த பூமியில் இயேசு வாழ்ந்த நாள்களில் நீங்கள் அவரை சந்தித்திருந்தால் உங்களை ஆசீர்வதிக்கும் ஏதாவது நன்மையை அவரிடமிருந்து பெறாமல் சென்றிருக்கவே மாட்டீர்கள். அந்த ஆசீர்வாதம் பூரணமான ஆவிக்குறியதும் சரீரபிரகாரமானதும் ஆகிய இரண்டு ஆசீர்வாதங்களையும் கொண்டதாகவே இருக்கும். தன் சரீரத்தில் இரத்த போக்கினால் 12 வருடங்களாக அவதிபட்ட அந்த ஸ்திரி ஒரு பெரிய ஆசீர்வாதத்தை இயேசுவின் வஸ்திரங்களை தொட்டு பெற்று கொண்டாளே. நம்முடன் தொடர்பு கொள்கிறவர்களும் இப்படியே சரீரபிரகாரமாகவும் ஆவிக்குறியபிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப்படும்படி இயேசுவின் அதே வாழ்க்கையை வாழும்படி நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்.

bottom of page