top of page

இரத்தினங்கள் வரிசையில்........

ஸ்தேவான்

ஒரு கிறிஸ்தவனை அழித்தால் ஓராயிரம் கிறிஸ்தவர்கள் எழும்புவார்கள் என்பதற்கு சாட்சியாக விளங்குபவரே ஸ்தேவான், கிறிஸ்தவ உலகின் முதல் இரத்த சாட்சி இவர். அன்று முதல் இன்று வரை தங்களையே இரத்த சாட்சிகளாக அர்ப்பணிப்போர் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள். இரத்த சாட்சிகளின் முன்னோடி என்று இவரை அழைத்தால் அது சாலப் பொருந்தும்

இவர் கிரக்க மொழிப் பேசும் ஒரு யூதர். ஸ்தேவான் என்றால் முடி அல்லது கிரீடம் என்பது பொருள். பெயருக்கேற்றார் போல் கிறிஸ்துவிடமிருந்து தனது மரணத்தின் மூலம் கிரீடம் பெற்றவர்.

எருசலேம் சபையில் செல்வாக்கு பெற்றவர். பந்தி விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஏழு பேரில் முதன்மையானவர். கிரேக்க விதவைகளுக்கு அன்றாட உணவை கவனிக்கும் பணியைச் செய்து வந்தார். விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்த இவர், பரிசுத்த ஆவியின் நிறைவையும் பெற்றவர். ஆண்டவரிடமிருந்து அற்புத அடையாளங்களைச் செய்யும் வரத்தினைப் பெற்றிருந்தார்.

கிரக்க மொழி பேசும் யூதருடைய ஆலயங்களில் இயேசுவே மேசியா என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியதால் யூதர்களின் வெறுப்புக்கு ஆளானார், எனினும் தைரியத்தோடு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாக தூஷணம் வேசுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார். எனவே ஆலோசனைச் சங்கத்தாரின் முன்பு நிறுத்தப்பட்டார்.

ஸ்தேவானின் பதில்களால் எதிரிகள் ஆச்சரியமும், ஆத்திரமும் கொண்டனர். பல்லைக் கடித்தனர். பலவந்தம் பண்ண துடித்தனர். ஆனால் ஸ்தேவானோ தேவ தூதனைப் போல காட்சியளித்தார் விசுவாச உறுதியுடம் பதிலளித்தார்.

யூதத் தலைவர்களின் கோபம் அதிகரிக்கவே கிறிஸ்துவின் தொண்டன் ஸ்தேவான் கல்லால் எறியுண்டு, இரத்த சாட்சியாக கர்த்தரின் மகிமையில் எடுத்துக் கொள்ளப்பட்டார். வீசுவாச வீரன் இரத்த சாட்சியாகளின் வித்து ஆனார்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே, கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிக்க நீங்களும் ஆயத்தமா?

ஜெபம்:

 

எங்கள் அன்பு இயேசுவே எந்த ஒரு சூழ் நிலையிலும் உம்மை மறுதலிக்காத ஒரு இருதயத்தை எங்களுக்குத் தர வேண்டும். அப்பொழுது மாத்திரமே நாங்கள் உமக்காக இரத்த சாட்சியாக நிற்க முடியும். ஆமென்

 

_________________________________________________________________________________________________________________

பெலிஸ் மான்ஸ்

 

  • வாழ்க்கையில் பல சட்ட திட்டங்கள் நமக்கு உண்டு, செய்யக்கூடியனவும் செய்யக் கூடாதவைகளும் இதில் அடங்கும்.

  • அவற்றில் சரியானவற்றை முறைப்படி செய்தால் மட்டுமே நம்முடைய வாழ்வு சிறப்பாக அமைய முடியும்.

  • பெலிஸ் மான்ஸ் ஒரு சிறந்த கல்வியாளர் எபிரெயம், கிரேக்கம், லத்தீன் மொழிகளில் நிபுணர். ஸ்விங்கிளி என்ற சீர்திருத்தவாதியின் சீடனாகத் தன்னை இணைத்துக் கொண்டவர். சமுதாயத்தின் சீரழிவுகளைக் கண்டு அவைகளைத் திருத்தம் செய்யும் வேகமும் விவேகமும் உடையவர்.

  • சிறிவயதிலேயே குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களைக் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கும் முறைகளைக் கண்டு கொதித்து எழுந்தார். தன் நண்பர் உடன் இணைந்து மக்களிடம் பல கேள்விகளை முன்வைத்தார். ஞானம் அடைந்த பின்னரே ஞானஸ் நானம் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் திருச்சபைக்குள் சில பூசல்கள் வளர ஆரம்பித்தன. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ் நானம் கொடுக்காமல் அவர்கள் பெரியவர்களான பின்பே ஞானஸ் நானம் கொடுக்க சம்மதித்தனர். இதனால் திருச்சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்படாதவராக பெளிஸ் பலமுறை குற்றம் சாட்டப்பட்டார். சிறையிலடைக்கப்பட்டார். நியாய விசாரனையின் போது தண்டிக்கப்பட்டார். இதனால் புதிய சீர்திருத்த சபையைத் தோற்றுவித்தார். மக்கள் கூட்டம் இவரைப் பின் தொடர்ந்தது.

  • பெலிஸ் மான்ஸ் கலகக்காரர் என்ற முத்திரை குத்தப்பட்டு ஜனவரி மாதம் 5 ஆம் நாள் 1527 ஆம் ஆண்டு கைகள் இரண்டும் ஒரு மரத்தில் கட்டப்பட்டவராக படகு ஒன்றில் ஏற்றப்பட்டு பனிக்கட்டிகள் நிரம்பிய தண்ணீருக்குள் உயிருடன் மூழ்கடிக்கப்பட்டார். மரண வேளையிலும் கிறிஸ்துவுக்குள் நிலையான உறுதிக் கொண்டவராக தன் தீர்மானத்தில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் கரங்களில் தன்னை அர்ப்பணித்தார். இவர் எழுதிய பாடல்கள் இன்று அனேகரை கிறிஸ்துவுக்குள் முதிர்ச்சியான ஞானஸ் நானத்தைப் பெற ஊக்கப்படுத்துகின்றன.

  • அன்பரே கிறிஸ்துவுக்குள் நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்களா?

 

குறிப்பு: ஒருவன் மறுபடியும் பிறாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்ல முடியாது

ஜெபம்:

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அனுதினமும் நான் உமக்குள் பிறந்து உம்முடைய ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ள உதவி செய்யும்.

மண்ணில்:1498

விண்ணில்: 5.1.1527

ஊர்: சூரிச்

நாடு: சுவிட்சர்லாந்து

தரிசன பூமி: சுவிட்சர்லாந்து

_________________________________________________________________________________________________________________

புனித பேசில்

பதவியும் பட்டங்களும் பெறுவது மட்டுமா வாழ்க்கை? இல்லை இல்லவே இல்லை. சிலர் பதவி வந்ததும் தங்களையும் மறப்பர். தங்களைச் சுற்றி உள்ளோரையும் மறந்து விடுவர்.

இப்படிப்பட்ட உலகத்தில் ஓர் முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டியவர் தான் பேசில். கல்வியில் சிறந்தவர், கற்றுத்தந்தவர்களையும் மிஞ்சியவர், பேச்சிலே வல்லுநர், நட்புப் பாராட்டுவதில் நல்லுள்ளம் கொண்டவர். சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவராகக் காணப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். புகலும் செல்வமும் அவரைத் தேடி வந்தன. பலபதவிகளும் அவரை நாடி வந்தன. நண்பர்கள் வட்டம் நாலாபுறமும் இருந்து குவிந்தது.

பதவியில் நம்மைப் பறிகொடுத்துவிட்டால் பின்னர் பரிதாபம் தான்.பேசில் இதை உணர்ந்தார். பெருமை என்னும் சோதனைக்கு உள்ளாவதை வெறுத்தார். தன்னைத் தேடி வந்த எல்லா பதவிகளையும் உதறித் தள்ளினார். தன் செல்வமனைத்தையும் எடுத்து ஏழை ஏளியவர்களை போஷிக்கவும். கர்த்தரின் அன்பு திட்டம் போன்றவைகளை எடுத்துரைக்கவும் பயன்படுத்தினார். அருட்பணிக்கே முதலிடம் கொடுத்தார்.

வழக்கறிஞர் தொழிலை விட்டு துறவறம் மேற்கொண்டார். ஏழைகளை அரவணைத்து அவர்களுக்குப் பலவித உதவிகளையும் செய்தார். நாள்தோறும் இவரின் பிரசங்கத்தைக் கேட்டக் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மக்களுக்காகவே சிறந்த போதகராக மாறி அவர்களின் ஆன்மீக வாழ்வை உயர்த்தினார். ஆயிரக்கணக்கானோர் மறுபிறப்படைந்தனர்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இவரை போல சுயநலமில்லாமல் வாழ நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே எங்களிடத்தில் காணப்படுகிற எல்லா பெருமையையும் உதறித் தள்ளி விட்டு உமக்காக அருட்பணி செய்யும் படியான கிருபையை எங்களுக்குத் தாரும், ஆமென்

bottom of page