உரையாடல் பகுதி
போதகரும் தேவனை அறியாத வாலிபரும் உரையாடுதல்.....
தேவனை அறியாத ஒரு வாலிபர் ஆலயத்திற்கு வெளியே நின்று ஆலயத்தில் நடந்து கொண்டிருந்த புனித வெள்ளி ஆராதனையை கவனித்துக் கொண்டிருக்கிறான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போதகர் ஆராதனை முடிந்த பிறகு அந்த மனுஷனை சந்தித்து உரையாடுகிற ஒரு நிகழ்ச்சியைத்தான் இங்கு உரையாடல் என்கிற தலைப்பில் வெளியிடுகிறோம்..........
போதகர்: தம்பி ரொம்ப நேரமாக ஆலயத்திற்கு வெளியே நின்று ஏதோ ஒன்றைக் கவனித்துக் கொண்ருப்பதை நான் பார்க்க முடிகிறதே
வாலிபர்: ஐயா கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இந்த ஆலயத்தில் என்னதான் பேசுகிறார்கள் என்பதைப் பார்க்கும் படி நின்றேன்
போதகர்: ஏதாவது உனக்கு புரிந்த்தா?
வாலிபர்: ஐயா புனித வெள்ளி என்று சொல்லுவதையும் இயேசு உங்களுக்காக மரித்தார் என்று சொல்லுவதையும் திரும்ப திரும்ப கேட்க முடிகிறது.
போதகர்: புனித வெள்ளி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொரு ஜனத்தின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்ட நாளைத்தான் புனித வெள்ளி என்கிறோம். சுருங்கக்கூற வேண்டுமானால் ஒவ்வொருவருடைய பாவத்தையும் தாம் எடுத்து விட்டு அவர்களை தம்முடைய பிள்ளைகளாக மாற்றுவது ஆகும்.
வாலிபர்: ஐயா இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களின் தெய்வம் என்று அறிவேன் எதற்காக தெய்வம் சிலுவையில் அறையப்பட வேண்டும். இது வேடிக்கையாய் இருக்கிறதே..
போதகர்: இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் தெய்வம் அதாவது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாரையும் படைத்தது இந்த ஜீவனுள்ள தெய்வம் தான். அதுமட்டுமல்லாமல் ஆதியில் அவர் ஒரு மனுஷனை படைத்தார். அவனுக்குத் துணையாக ஒரு மனுஷியையும் உண்டாக்கினார். இருவரையும் பிசாசானவன் பாவம் செய்யும் படி தூண்டி அவர்களை பாவியாக மாற்றினான். இதன்பின்பு இவர்களை தம்முடைய தோட்டத்தில் இருந்து தேவன் துரத்தி விட்டார். இதனால் இவர்கள் பாவிகளாக திரிந்து குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு பல சந்ததிகளாக மாறினார்கள். இதன்பின்பு இவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும் பாவம் என்றால் என்ன என்பதை அறியவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். இந்த பிரமாணத்தில் பாவம் செய்தால் இரத்தம் சிந்தப் பட வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தார். ஆனால் ஜனங்களோ தொடர்ந்து பாவம் செய்து வந்தனர் வேதம் சொல்லுகிறது, பாவியாக இருக்கிற ஒரு மனுஷன் தேவ பிள்ளையாகவும் இருக்க முடியாது அதுமட்டுமல்லாமல் தேவன் தருகிற ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவேதான் இயேசு இரத்தம் சிந்தி தம்முடைய ஜனங்களாக மீட்க இந்த உலகத்தில் நம்மைப் போல மாமிசத்தில் வெளிப்பட்டார்.
வாலிபர்: வித்தியாசமான போதகமாய் இருக்கிறது சரி ஐயா அப்படியென்றால் இப்பொழுது நாம் எல்லாரும் தேவனுடைய பிள்ளைகளாக மாறிவிட்டோமா? என்னையும் அவர் ஏற்றுக் கொள்வாரா?
போதகர்: ஆமாம் தம்பி ஆனால் இந்த இரத்தத்திற்கு நாம் சொந்தமாக மாற வேண்டுமானால் தேவன் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்திருக்கிறார். அதாவது நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் விசுவாசித்து நாம் செய்த பாவங்களை அறிக்கையிட்டு அவர் சொன்ன மூழ்க ஞானஸ் நானம் என்கிற சத்தியத்தை அதாவது தண்ணீரில் மூழ்கி யாரெல்லாம் எழுந்திருக்கிறார்களோ அவர்களையே தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்கிறார். தம்பி கவலைப்படாதீர்கள் உங்களையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். ஏனென்றால் இயேசு தம்மை நோக்கி வருகிறவர்களை ஒருபோதும் தள்ளுவதில்லை அவர் இரக்கமுள்ளவர்.
வாலிபர்: ஐயா முதன் முதலில் பிறருடைய பாவத்தை தன் பாவமாக ஏற்றுக் கொண்டு தம்மை வெறுக்கிறவர்களை நேசிக்கிற தெய்வமான இயேசு கிறிஸ்துவைப் பற்றி இப்பொழுது முழுமையாக அறிந்து கொண்டேன். ஆகவே இப்பொழுதே என்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு முழுமையாக என்னை இயேசுவினிடத்தில் ஒப்புக் கொடுக்கப் போகிறேன்.
போதகர்: தம்பி இப்பொழுதுதான் எனக்கு மிகுந்த சந்தோஷமாய் இருக்கிறது எதர்காகவென்றல் நீ கிறிஸ்தவனாய் மாறினதைக் குறித்து அல்ல மாறாக நீ உண்மையாக இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டாயே அதற்காகத்தான் நான் சந்தோஷப்படுகிறேன்.
குறிப்பு: எல்லா போதகர்களும் சபைக்குள்ளும் கிறிஸ்தவத்திற்குள்ளும் மட்டும் போதனை செய்யாமல் தேவனை அறியாத ஜனங்களிடத்திலும் தைரியமாக போதிப்பார்களானால் நிச்சயமாக அனேகரை சிலுவையின் நிழலில் இளைப்பாறப் பண்ணலாம்.