top of page

கிருபையின் கதை

ஒரு ஊரில் ஏழை விதவைப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகனும் உண்டு. அவளுடைய ஏக்கமெல்லாம் எப்பொழுதும் தம் மகனைக் குறித்துதான் காணப்பட்டது. தான் எப்படிப் போனாலும் பரவாயில்லை தன்னுடைய மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவளுடைய குறிக்கோளாகவும் இருந்தது. இப்படியாக தன்னுடைய மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள்.

ஆனால் மகனுக்கோ தாயின் மேல் பல காரியங்களில் வெறுப்புதான் காணப்பட்டது, ஏனென்றால் இவனோடு படிக்கிற பிள்ளைகள் எல்லாரும் மிகவும் செழிப்பாக காணப்பட்டனர். இதைப் பார்த்த இந்த மகனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தனக்கு ஒரு நல்ல வஸ்திரம் இல்லை. நல்ல சத்துணவுகள் வீட்டில் காணப்படவில்லை. பொழுது போக்குவதற்கு எந்தவிதமான பொருட்களும் தன்னுடைய வீட்டிலே இல்லையே என்கிறதான ஒரு ஏக்கமும் இவனுடைய உள்ளத்தில் காணப்பட்டது.

இந்த மகன் தன்னுடைய தாயிடம் இதைப் பற்றி பேசினால் அவனுடைய தாய் கொடுக்கிற பதில் கர்த்தருடைய கிருபை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்பாள். இந்த மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் இந்த தாயோ தன்னுடைய சரீரத்திற்கு போதுமான உணவு இல்லாமல் தன்னுடைய மகனுடைய பள்ளிப் படிப்பிற்காக தன்னுடைய இரத்தத்தையும் கொடுத்து அதன்மூலம் கிடைக்கிற பணத்தைக் கொண்டு எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.

இப்படியாக தன் மகனை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தாள். இந்த தாயின் மகனும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படித்து ஒரு நல்ல வேலையில் தன்னுடைய சொந்த ஊரிலே அமர்ந்தான். வேலையில் பயிற்சிப் பெறுவதற்காக இந்த மகன் சில நாட்கள் தன்னுடைய தாயை விட்டு பிரிந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது, இதனால் தாயை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியூருக்கு கடந்து சென்றான்.

இதோ இந்த மகன் பயிற்சி முடித்து திரும்பி வரும் போது அவனுடைய தாய் படுத்தப்படுக்கையாய் கிடந்தாள். அவளுக்கு ஏற்பட்ட நோய் அவளை மிகவும் கொடியதாய் தாக்கியது. இதைக் கேள்விப்பட்ட இந்த தாயின் மகனுடைய இருதயம் நொறுங்கியது. அதுமட்டுமலாமல் இப்படிப்பட்ட கஷ்டத்திற்கு காரணம் என்ன என்பதையும், தாய் தன்னை எப்படிப் படிக்க வைத்தாள் என்கிறதான உண்மையையும் அந்த ஊர் ஜனங்களின் மூலம் தெரிந்து கொண்டான்.

இதனால் அவனுடைய இருதயம் கதறியது. இப்பொழுதுதான் தன் தாய் அடிக்கடி சொல்லுகிற கர்த்தருடைய கிருபையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான். தாயின் அளவற்ற ஈடு இணை செய்ய முடியாத இரக்கத்தை நினைத்து கதறினான். அவன் ஒரு முடிவு எடுத்துக் கொண்டான் இப்படிப்பட்ட கிருபைய காண்பித்த தன்னுடைய தாயை ஒருபோதும் இழந்து போவதில்லை என்று சொல்லி, தன்னுடைய தாயை நல்ல மருத்துவரிடம் காண்பித்து தன்னுடைய தாய்க்கு வைத்தியம் பார்த்தான். இதோ அவனுடைய தாயும் பிழைத்துக் கொண்டான். இதானல் இந்த மகன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் இந்த மகத்தான கிருபையை மீண்டும் பெற்றுக் கொண்டான்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் தம்முடைய விலை உயர்ந்த இரத்தத்தை நமக்காக அதாவது நம்முடைய பாவத்திற்காக நஷ்ட ஈடாக கொடுத்து பிசாசின் கையிலிருந்து நம்மைக் காப்பாற்றி நமக்கு இவ்விதமாக தன்னுடைய கிருபையாகிய அன்பைக் கொடுத்திருக்கிறார். ஐயோ நம்முடைய தாயும் தகப்பனும் நண்பர்களும் செய்ய முடியாத அளவற்ற தியாகத்தை தம்முடைய கிருபையின் மூலம் செய்திருக்கிறார்.

ஆகவே இப்படிப்பட்ட நல்ல கிருபையை நம்மோடு கடைசி வரை இருக்க வேண்டுமானால் உயிர் நம்முடைய சரீரத்தில் இருக்கும் வரை இந்த கிருபை என்கிற கனியைக் கொடுக்கிற இயேசு என்கிற மரத்தை எப்பொழுதும் கெட்டியாக பிடித்துக் கொள்வோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் பார்த்து சொல்லுகிறார், என் கிருபை உனக்குப் போதும் – 2கொரி 12:9

வெட்டாத ஆயுதம்

 

ஒரு ஊரில் வில்லியம் என்கிற மனுஷன் வாழ்ந்து வந்தான் அவன் யாருக்குமே பயப்படாத ஒரு மனிதனாகவே வாழ்ந்து வந்தான், ஏனென்றால் அவன் தன் மாமிசத்தில் காணப்பட்ட பலத்தையே [ அதாவது இந்த உலகத்தில் எவைகளையெல்லாம் மேன்மையாக கருதுகிறோமோ ] அதிகமாக நம்பி இருந்தான். அவனுடைய எண்ணமெல்லாம் தன்னுடைய பலத்திற்கு முன்பாக எதுவுமே நிற்க முடியாது என்பதுதான். வேதம் சொல்லுகிறது மாமிசத்தின் மேல் நம்பிக்கை வைக்காதிருங்கள் ஏனென்றால் மாமிசம் அவனுக்கு அழிவை மாத்திரமே உண்டு பண்ணுகிறது, இதனால் எந்தவொரு காரியத்தையும் தன்னால் செய்ய முடியும் என்கிற ஒரு ஆணவத்துக்குள் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினான்.

நாட்கள் சென்றது அந்த ஊருக்கு ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் ஊழியம் செய்வதற்கு வந்தார். அதுமட்டுமல்லாமல் அவரிடம் இருந்த கர்த்தருடைய கிருபை அவருக்கு அந்த ஊரில் மிகுந்த மரியாதைக்குரிய மனுஷனாக மாற்றியது, அதுமட்டுமல்லாமல் அவரிடத்தில் அனேகர் பயபக்திக்குரியவர்களாக மாறினர். இதைப் பார்த்த அந்த வில்லியம் தான் மற்றவர்களை பயமுறுத்தினால் மாத்திரமே தன்னுடைய ஆயுதத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். மற்றப்படி யாருமே தனக்கு முன்பாக உண்மையாக பயப்படுவதில்லை என்கிறதான ஒரு கோப உணர்வு அவனிடம் காணப்பட்டது.

இதினிமித்தம் அந்த ஊழியக்காரரிடம் மோதும்படியாக கடந்து சென்றான், தேவையில்லாமல் அவரிடம் சென்று பிரச்சனைகள் உருவாக்கினான் ஆனால் அவர் ஒன்றுமே செய்யவேயில்லை, இதனால் இந்த வாலிபன் எரிச்சல் அடைந்து அவரை ஒரு சமயம் அடித்துவிட்டான். இதற்கும் அவர் கோபப்படாமல் அமைதியாக சென்று விட்டார். இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த அந்த வாலிபன் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்க அவரை பின் தொடர்ந்து சென்றார்.

அவனுக்கு அவருடைய செயல்கள் ஆச்சரியமாக இருந்தது எப்படியென்றால் அந்த ஊழியக்காரர் தன்னை அடித்த அந்த வாலிபனுக்காக முழங்கால் படியிட்டு அவன் மனந்திரும்பும்படியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். இத்தகைய காரியம் அந்த வாலிபனுக்கு கோழைத்தனமாக இருந்தது, ஆகவே மேலும் மேலும் அவன் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவருடைய ஜெப ஆயுதத்துக்கு முன்பாக இந்த வாலிபனுடைய மாமிசம் ஆயுதம் விழுந்து போனது என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அவருடைய ஜெபம் இந்த வாலிபனைப் படுத்தப்படுக்கையாக்கி விட்டது, இவனுக்கு ஒன்றும் புரியவில்லை நாட்கள் செல்ல செல்ல பயம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஊழியக்காரர் அந்த தேடிச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார் அவருடைய ஜெபம் அந்த வாலிபனை மறுபடியும் பலத்தோடு எழுப்பினது. இதை பார்த்த அந்த வாலிபனுக்கு ஒரு காரியம் புரிந்தது, இந்த உலகத்தில் மனுஷனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் எல்லாம் வெட்டாத அதாவது பற்கள் இல்லாத ஆயுதம் என்பதை புரிந்து கொண்டான். ஆகவே அவன் ஒரு முடிவு எடுத்தான் என்னவென்றால் அந்த ஊழியக்காரரிடம் சென்று அந்த அழியாத, வெட்டுகிற ஆயுதத்தை பெற்றுக் கொள்வதற்கு ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டான்.

வேதம் சொல்லுகிறது, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் பிலிப்பியர் 4:6.

குறிப்பு:

ஜெபம் என்கிற ஒரு ஆயுதம் நம்மிடம் இருக்குமானால் இந்த உலகத்தில் எந்தவொரு ஆயுதமும் நமக்கு முன்பாக வாய்க்காமல் போய்விடும். ஆகவே இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறவர்கள் கத்தியையும், கம்பையும், பழிவாங்குதல், எரிச்சல், பொறாமை, மேட்டிமை போன்ற ஆயுதத்தை எடுக்காமல் இயேசுவின் சிலுவையை மாத்திரம் எடுத்துக் கொண்டு பயணம் செய்யுங்கள் அப்பொழுது மாத்திரமே உங்களிடத்தில் அவர்கள் மெய்யான தெய்வமாகிய இயேசுவைப் பார்ப்பார்கள்.

bottom of page