top of page

மாம்ச சிந்தை மரணம் ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமும்.

மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். (ரோமர் 8-8) மாம்சத்துக்குறியவர்கள் மாம்சத்தின் கிரியைகளை உடையவர்கள். இவர்கள் இருதயம் கடினப்பட்டு இறுதியில் உலகத்தை நேசித்து தேவனை பகைக்க ஆரம்பித்துவிடுவார்கள், மேலும் மாம்சத்தின் படி கிரியை செய்கிறவர்கள் பரலோக ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று வேதாகமம் எச்சரிக்கிறது. (ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 8-1)இன்றைக்கு அநேகர் ஊழியம் செய்கிறார்கள். தேவனுக்காக பக்தி வைராக்கியமாக செயல்படுவது உண்மை தான். ஆனால் தங்களுடைய அந்தரங்க காரியங்களில் தங்கள் மாம்சமும் மனசும் விரும்புகிறதை தொடர்ந்து செய்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் தேவ பெலனற்றவர்களாகவும் தேவ பயமற்றவர்களாகவும்  இருப்பது தான். (இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. 1 கொரிந்தியர் 3-2)  (பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 1 கொரிந்தியர் 3-3).

இன்றைக்கு ஊழியத்திலும் சரி தனிபட்ட வாழ்க்கையிலும் சரி மனுஷமார்கமாக நடந்து உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிப்பவர்களே அநேகர். இவர்களை தான் யாக்கோபு விபச்சாரர்களே விபச்சாரிகளே உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று சாடினார் . உலகத்தை இவர்கள் சிநேகிப்பதால் உலகமும் இவர்களை சிநேகிக்கும். இன்றைக்கு நாம் உலக ஆசீர்வாதங்களுக்காக தேவனை விசுவாசித்து விசுவாசத்தில் வல்லவர்களாக இருப்பது உண்மை தான். ஆனால் நித்திய ஜீவன் என்ற மறுமைக்கான ஆசிர்வாதத்தில் நாம் தேவனை விட்டு விலகும் பொல்லாத அவ்விசுவாசிகளாகவே இருக்கிறோம்.  நாம் மறுமைக்கான ஆசீர்வாதத்தை விசுவாசித்திருந்தால் பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவனுடைய அனைத்து கற்பனைகளுக்கு பயத்தோடும் நடுக்கத்தோடும்செவி கொடுத்திருப்போம்.

 

வேலைத்தலத்தில் நம் எஜமானனுக்கு முன்பாக பணத்துக்காக எவ்வளவு பயபக்தியோடு வேலை செய்கிற நாம் நம் நடக்கைகளை அன்றாடம் கவனிக்கும் தேவனுக்கு  பயப்படுவதில்லைஉண்மையிலே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நாம் எடுத்து கொள்ள பட வேண்டும் என்ற வாஞ்சை இருக்குமானால் மாம்சத்தின் கிரியைகளை நாம் நிச்சயமாக செய்யமாட்டோம். நாம் பரலோக ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிப்பதற்க்கு நமக்கு கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையில் தான் தகுதி பெற வேண்டும். இன்றைக்கு நம்முடைய கிரியைகளும் நடக்கைகளும் எப்படி இருக்கிறது?? நம்மை நாமே நிதானித்து பார்ப்போம்.

 

இன்றைக்கு உலக ஆசீர்வாதத்திற்காக தேவனை விசுவாசிக்கிற நாம் இதை கடைபிடித்தால் தான் பரலோகராஜ்ஜியத்துக்கு பிரவேசிக்க முடியும் என்று இயேசு சொன்ன பல கட்டளைகளுக்கு கீழ்படிவதில்லை. இப்படிப்பட்ட அவ்விசுவாசிகள் தான் அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள் என்று வேதாகமம் எச்சரிக்கிறது. எனவே இந்த கடைசிகாலத்தில் மாம்ச இச்சைகளின் படி நடக்காமல் நம்மை நாமே ஆராய்ந்து மனம் திரும்பி தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிய நம்மை ஒப்பு கொடுப்போம். (இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1 கொரிந்தியர் 15)

 

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:19-2124 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். கலாத்தியர் 5:24)

bottom of page