top of page

பரிசுத்தமாக வாழ முடியாதா??

 

தேவன் நம்மை பார்த்து பரிசுத்தராக இருங்கள் என்று சொல்கிறார். சிலர் நாம் பரிசுத்தமாக வாழ முடியாது என்கிறார்கள்.!! அது நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். லேவியராகமம் 19-2  இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள்  எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!

2 பேதுரு 3-11  மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 4-24 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

எபிரேயர் 12-14 நாம்  பரிசுத்தமாக வாழ்வதற்கு தான் பரிசுத்த ஆவியை தேவன் கொடுத்திருக்கிறார்.அவரே சகல சத்தியத்துக்குள் நம்மை நடத்துவார்.பரிசுத்த ஆவியானவரின் பெலத்தினால் நிச்சயமாக பரிசுத்தமாக வாழ முடியும். அநேகர் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் வாழ்கிறார்கள், அதற்காக நம்மை பரிசுத்தமானவர்கள் என்று மேன்மை பாராட்ட அவசியமில்லை. ஆண்டவர் மனிதனால் செய்ய முடியாததை செய் என்று ஒருகாலும் சொல்லமாட்டார், அவருடைய சத்துவத்திலும் வல்லமையிலும் பெலப்படும் போது இந்த  உலகத்தின் எந்த இச்சைகளையும் மேற்கொள்ளமுடியும், அவருடைய ஆவியினாலே உள்ளான மனிதனில் பெலப்படுகிறவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் சாட்சியை காத்து கொள்வார்கள். இயேசுவை தன் மணவாளனாக முழு இருதயத்தோடு நேசிக்கிறவர்கள் தங்களை பரிசுத்தமாக காத்து கொள்வார்கள். பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தில் பங்கடையும் படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், அசுத்தமானவர்கள் அதில் பங்கடைவதில்லை. பிதாவை போல பூரண சற்குணராக மாறுங்கள் என்று இயேசு சொன்னார். மனிதனால் கூடாது,தேவனால் கூடும் என்றார் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு.தேவன் ஒருவரே பரிசுத்தர்.உண்மை தான். அதற்காக நம்மால் இந்த உலகத்தில் பரிசுத்தமாக வாழ முடியாது என்று மறைமுகமாக பேசுகிறவர்கள் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கிறார்கள். இவர்கள் தங்கள் வேத அறிவை கொண்டு பேசுகிறார்கள்.நமக்கு தேவை பரிசுத்தாவியினால் அருளப்படும் தேவ ஞானம் மற்றும் வேத ஞானம். மேலும் ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் அழகாக சத்தியத்தை பேசுவார்கள்.ஒரு கப் பாலில் ஒரு துளி விஷம் இருப்பதை கண்டுபிடிக்கமுடியாததை போல தவறான போதகத்தை அழகாக திணித்துவிடுவார்கள். இந்த உலகத்தில் பரிசுத்தமாக வாழ கிருபையை கேளுங்கள்.அதற்க்கு மாறாக கடைசி நேரத்தில் கிருபையினால் உங்களை பரலோகத்துக்கு கொண்டு போவார் என்று நினைத்து கொண்டு உங்களை வஞ்சிக்காதீர்கள். அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12)நம்முடைய எண்ணங்கள் கூட நியாந்தீர்க்கப்படும் காலம் வருகிறது என்று வேதம் சொல்கிறது.

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்,  இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

ரோமர் 12:1 மனிதர்களின்  இருதயத்தின் நினைவுகளின் தோற்றங்கள் பொல்லாதவைகளாக இருந்ததினால் தேவன் மனிதனை படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டார். (ஆதி 6-5,6) எனவே தேவன் விரும்பும் பரிசுத்தம் நம் வாழ்க்கையில் காணப்பட வேண்டும்.இருதயத்தில் சுத்தமுள்ளவர்களே தேவனை தரிசிப்பார்கள் என்று இயேசு சொன்ன வார்த்தைகளை குறித்து எச்சரிக்கையாக இருப்போம். யாத் 19-6 ல் நீங்கள் எனக்கு பரிசுத்த ஜாதியாக இருப்பீர்கள் என்று தேவன் சொல்கிறார்.நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும்  பரிசுத்தமாக வாழ்கிறோமா என்று நிதானித்து அறிவோம்.எனவே நம் பரிசுத்தத்தை காத்து கொள்வோம்.நாம் பரிசுத்தமாக வாழும் படி நம்மை ஒப்பு கொடுப்போம். ஆமென்

bottom of page